தாய், தகப்பன் என்பதைத் தவிர வேறெந்த உறவு முறையும்.., வகுக்கப்படவில்லை.

காலக்கிரமங்களின்படி வேதாகமத்தை வாசிக்க வேண்டும். - 4             

ஆதாம் தேவ நியமணத்தின்படி (ஆதி 1: 28) தனக்குள் இருந்து எடுக்கப்பட்ட ஏவாளுடன் இணைந்தான். ஆச்சர்யமான முறையில்  ஏராளமான பிள்ளைகள் பிறப்பிக்கப்பட்டனர்.
தங்களை பிறப்பித்து பராமரித்ததாலும், தங்களுக்கு உணவு தேடி தந்ததாலும், பிள்ளைகளால் பெற்றோர் "போற்றப்படத் தக்கவர்கள்" ஆனார்கள்.
தேவனைக் குறித்தும் அவருக்கு பயப்பட வேண்டிய அவசியத்தைக் குறித்தும் தம்முடைய பிள்ளைகளுக்கு ஆதாமும் ஏவாளும் கற்றுக் கொடுத்தனர். பெற்றோர் "மதிக்கப்படத் தக்கவர்கள்" ஆனார்கள்.
ஆபத்து நேரங்களில் தங்களை தப்புவித்து காத்ததால்; தாய் தகப்பன் திறமை வாய்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். பிறப்பிக்கப்பட்ட திரளான பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரைப்போல தேவனை பார்த்தவர்கலில்லை. எனவே தாய் தகப்பனையே தெய்வத்திற்கு சமமாக பார்த்தார்கள். மொதத்தத்தில்., 
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது இங்கேதான் ஆரம்பித்திருக்க வேண்டும் என தைரியமாகச் சொல்லலாம்.
தாய் மற்றும் தகப்பன் என்பதைத்தவிர வேறெந்த உறவு முறையும் அந்த ஆரம்ப நாட்களில் வகுக்கப்படவில்லை. வகுப்பதற்கு வாய்ப்பும் இல்லை.
"உறவு முறைகளைக் குறித்த எச்சரிப்போ, கன்டிப்போ, பாடமோ, பயமோ இல்லாத எந்த இடத்திலும் உணர்வுகள் மட்டுமே உயிர்பெறும்" என்பதை எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அந்த ஆரம்ப நாட்களில் அதுதான் நிறைவேறியது.
நியாயப்பிரமானம் அவர்கள் இருதயத்தில் எழுதப்பட்டிருந்தது. (ரோம2 :14 15)  
அது மறைந்திருந்தாலும் அவசியப்படும்போதெல்லாம் மனசாட்சி என்ற பெயரில் எட்டிப் பார்த்தது. எச்சரிக்கை செய்தது. எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. முதல் கொலை நிகழும்வரை..
பலி செலுத்தினவர்கள் இரண்டுபேர்
1.காயீன் 2. ஆபேல் ஆதி 4: 2 12
.ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான் காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
காணிக்கை செலுத்த வேண்டுமென்பது பெற்றோருடைய கற்பித்தலே அன்றி சுயமாகத் தோன்றியதல்ல..
தாய் தகப்பனுடைய கற்பித்தலுக்கு மனப்பூர்வமாக கீழ்படிந்தவன் ஆபேல் கர்த்தருக்கு செலுத்துவது கொழுமையாக இருக்க வேண்டுமென்பதை அவன் மனசாட்சி அவனுக்கு உணர்த்தியது. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனுடைய பலியை பார்க்குமுன் அவன் பலியில் பாவம் கலந்திருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
பாவம் எனபதை ஆங்கிலத்தில் Sin என்று சொல்லுவார்கள்.
Sin எனபதற்கான விளக்கம்:-
S - Selfishness– சுயநலம்
I - Independence – சுயாதீனம்
N-Not Keeping God’s Standards – தேவனுடைய தர அளவுகளை காத்துக் கொள்ளாமை. என்பதாகும்.
இதை வாசிக்கிற சகோதரனே சகோதரியே இன்றைய காலங்களில் காயீன் செலுத்தியது போன்று பலி செலுத்தும்படி கிறிஸ்தவ ஜனங்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். எப்படியெனில் தேவனுடைய கூடாரத்திற்கு கொடுககப்படுகிற 1000 ரூபாய் தேவனுக்கென்று கொடுக்கப்படுவதாகவும் அப்படியாக காணிக்கை(?) கொடுத்தவர் ஆசீர்வதிக்கப்பட்டு 4 லட்சத்தில் நிலமும் 6 லட்சத்தில் வீடும் கட்டுவது போன்றதும் இன்னும் இதே ஸ்டைலில் அநேகமான சாட்சிகளை மாதம்தோறும் இயேசுவீடுவிக்கிறார் என்ற பத்திரிக்கையில் எழுதி விளம்பரப்படுத்துவதன் மூலம் தங்கள் சுயநலத்திற்காக.., வேதவசனம் தெரியாத ஜனங்களை சுயநலத்தோடு பலி செலுத்த பழக்கி இருக்கிறார்கள். இதனால்,
பல கோடிக்கணக்கிலான பணம் குறிப்பிட்டதொரு மனிதனிடம் குவியலாக சேருகிறது. அதன் காரணமாக அந்த மனிதன் சுயாதீனமாகவும் சுயநலத்தோடும் பெருமையும் அகந்தையுமுள்ளவனாக வாழ வழிகாட்டுகிறது.
தேவனுடைய கூடாரங்கள் வானத்தின் வாசலகள், ஜெப கோபுரங்கள், தூதன் தொலைக்காட்சி, ஆசீர்வாதம் தொலைக்காட்சி போன்ற, ஆடம்பரமான பல ஊழியங்கள்  தேவனுடைய தர அளவுகளை காத்துக் கொள்ளவில்லை
இப்படிப்பட்ட தன்மைகளடங்கிய பாவமானது காயீனுடைய பலியில் கலந்திருந்ததால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கையையும் அங்கீகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி அவன் முகநாடி வேறுபட்டது.
இரட்சிப்பு என்பது எப்படி ஒரு தொடராக இருக்கிறதோ அதேப் போன்று பாவமும் ஒரு தொடராகவே இருக்கிறது. எந்த ஒரு மனிதனுடனும் கர்த்தர் இடைபடுகிறார். ஏதாகிலும் ஒரு விதத்தில் காயீனிடத்திலும் இடைபட்டார். கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்@ அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும் நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
தேவனோடு பேசுகிறேன் தேவன் என்னுடன் பேசுகிறார் என்பவரெல்லாம் பரிசுத்தவான்கள் என்று எண்ணுவீர்களானால்.., உங்கள் எண்ணங்களை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல.., தேவன் ஒரு மனிதனோடு இடைபட்டதாலோ.., நல்ல ஆலோசனைகளை சொல்வதாலே மறைவானவைகளை வெளிப்படுத்துவதாலே அவர்கள் தேவனுக்கு உகந்தவர்கள் என்ற நம்பிக்கையையும் மாற்றிக் கொள்ளுங்கள்.
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் முட்செடிகளில் திராட்சப்பழங்களையும் முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும் கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். மத் 7: 16....20
கர்த்தர் காயீனோடு(ம்) பேசினார்.
காயீன் ஆபேல் இருவரும் வயல்வெளியில் இருந்தனர். காயீன் ஆபேலோடே பேசுகிறவனாக இருந்தான். அந்தோ பரிதாபம் காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். காயீனைப் போன்றவன் ஆபேலோடு இருந்தாலும் ஆபேல் காயீனைப் போன்றவனோடு ஒரே வயலில் இருந்தாலும் கொலை செய்யப்படுவது யதார்த்தம் காரணம்.., 
உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக் 4: 4
நண்பர்களே..! தேவனுக்குப் பிரியமாக நடக்கிறவனை இந்த உலகமும் உலக ஜனங்களும் வாழ்த்த மாட்டார்கள். வீழ்த்துவதையே நோக்கமாக கொண்டிருப்பார்கள். வேதம் சொல்லுகிறது
"பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே"(1யோவா 3:12) இன்று..,
"ஜீவனோடு இருப்பதாகச் சொல்லப்படும் அநேக ஊழியங்கள் எத்தனையோ பரிசுத்தவான்களை பரிதாபமாய் (ஆவியில்) கொன்று புதைத்துவிட்டு அவர்களுடைய புதைகுழிக்குமேல் நின்று தேவனை ஆராதிப்பதாக அறிவிக்கிறார்கள் "
என்று விளக்கினால்தான் உங்களுக்கு விளங்குமா?
காயீனுடைய ஆவியை உடையவர்கள் தேவனிடத்திலேயே பொய் சொல்லுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன்: நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். இதை வாசிக்கிற சகோரனே சகோதரியே நீ படுகிற துன்பத்தை உலகம் அறியாமலிருக்கலாம். ஏற்றுக் கொள்ளாமலும் அறிவிக்காமலும் இருக்கலாம். மறைவானவைகளை அறிகின்ற ஆண்டவர் நிச்சயம் விசாரிப்பார்.
தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். (1பேது 5 :6 7)
உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. என்றார். இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
தேவனுக்குப் பிரியமில்லாதவைகளை செய்து சாபத்தை சுமந்த சாபமுள்ள காயீனுடைய சந்ததியும்.. தேவனுக்கு பயந்து, தேவனைப் பிரியப்படுத்த முயன்றதால், சகோதரனால் பகைக்கப்பட்டது மட்டுமல்லாமல் கொலை செய்யப்பட்டு அகால மரணமடைந்தவனுமாகிய ஆபேலுடைய சந்ததியும் உற்பத்தியான துவக்க நாட்களிலேயே தனித்தனியாக அடையாளம் காணப்பட்டதும் இங்கிருந்துதான்.
காயீனுடைய சந்ததி இன்றுவரை தொடருவது மட்டுமல்ல..., 
கர்த்தருடைய ஜனங்களை துரத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். காயீனுடைய சந்ததியை தெளிவாக அடையாளம் காணுவது எப்படி?
அடுத்தப் பதிவில் பார்ப்போமே..  - தொடரும்

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?