சகோரனுக்கு..., சகோதரி.., மனைவியா..?...!..!..!

காலக்கிரமங்களின்படி வேதாகமத்தை வாசிக்க வேண்டும். -3
                  
தேவனாகிய கர்த்தர் இரண்டு பேரை மட்டும்தானே படைத்தார். இவர்களுடைய பிள்ளைகள்  எப்படி பலுகிப் பெருகுவார்கள். எப்படி பெருகினார்கள்?

சகோரனே., சகோதரியே.., ஒரு கேள்வியை நீங்கள் யாரிடமாவது கேட்க விரும்புவீர்களானால், அதற்கு முன்பாக குறிப்பிட்ட அந்த கேள்விக்குரிய பதில் என்னவாக இருக்குமென்று நம்முடைய சிந்தையில் பதிந்துள்ளதை சற்று சிந்திக்கவேண்டும். அதுவும் பரிசுத்த வேதாகமத்தில் கேள்வி எழுப்புவீர்களானால்.., பரிசுத்தவேதாகம வார்த்தைகளையே கவனித்துப் பார்ப்பது நல்லது.

ஆதி 2 :7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதி 2 :18 மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

ஆதி 2 :21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார் அவன் நித்திரையடைந்தான்@ அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

மனிதனுடைய சரீரத்தை மண்ணினால் உண்டாக்கினவர் அவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கும்போது, இன்னொரு மண்ணைக் கொண்டோ, மண்ணுடன் தொடர்புடைய கற்கள், பாறை, மரம் அல்லது தண்ணீர் கொண்டு ஆதாமுக்கு ஏற்றத் துணையை படைக்காமல்..., ஆதாமுடைய சரீரத்திற்குள் இருந்து ஒரு எழும்பை எடுத்து அதை மனுஷியாக உருவாக்கினார். என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.
ஆதாமுக்கு வெளியே இருந்து அல்ல.. ஏவாள் ஆதாமுக்கு உள்ளிருந்தே உருவாக்கப்பட்டாள்.

மல் 2 :15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. 

ஒரு மனிதனையே படைத்தார். ஒரு மனிதனை படைப்பதே தேவனுடைய திட்டம் அந்த மனிதன் தன்னிடம் பக்தியுடன் இருக்க வேண்டுமென்பதே அவருடைய  திட்டமாகவும் இருந்தது.

மனிதர்களுடைய சரீரமானது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான அல்ல ஒரே சரீரத்திற்குள்ளிருந்தே இன்னொரு சரீரம் உருவாகிறது. அல்லது இப்படி சொல்லுகிறேன். 

முதிர்ச்சி அடைந்த சரீரத்திற்குள் இன்னொரு சரீரம் உருவாக்கப்படும். அதே நேரம் நாம் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவெனில் :- முதிர்ச்சி அடைந்த சரீரத்திற்குள்ளிருந்து உருவாக்கப்படும் புதிய சரீரத்திற்குரிய ஆவியை முதிர்ச்சி அடைந்த சரீரம் கொடுப்பதில்லை. மாறாக தேவனே அதைக் கொடுக்கிறார். சக 12: 1 ...மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர்....
இன்னும் சற்று விளக்கமாகப் பார்ப்போமானால்..,
ஆதி 2 :7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான்.

தேவனால் படைக்கப்படும் மனிதன் ஜீவனையுடையவன் மட்டுமல்ல… அவன் ஆத்துமாவையும் உடையவனாக இருக்கிறான்.
தேவனால் மனிதனுக்கு..

1.    சரீரம் கொடுக்கப்படுகிறது
2.    சரீரத்திற்குள் ஆவி கொடுக்கப்படுகிறது
3.    ஆவிக்குள் ஆத்துமாவும் கொடுக்கப்படுகிறது.


சகலத்தையும் தேவனால் பெற்றுக்கொண்ட மனிதன் தன்னிடத்தில் பக்தியுடனும் தனக்குப் பிரியமாகவும் இருக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். மனிதனோ தேவனுடைய திட்டங்களுக்குப் புறம்பாகவே நடக்கிறான்.

நான் அறிந்த வரையில் தேவனுடைய படைப்பின் இரகசியத்தை அறிந்து கொள்ள விரும்புகிற மனிதன் தன்னுடைய அறியாமையை சார்ந்து கொள்ளும் அளவிற்கு தேவனுடைய ஞானத்தை சார்ந்து கொள்ளுவதில்லை.

நாம் மீட்படைய வேண்டும் என்பதற்காகவும் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்ற நோக்கத்திற்காகவுமே பரிசுத்த வேதாகமம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. யோவா 20: 31. இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. எனவேதான்..,

சில வரலாற்று சம்பவங்கள் இடங்கள் நபர்கள் பெயர்கள் பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிட்டப்படவில்லை. என்றாலும்
உலகமே வியக்கும் ஆச்சர்யமான செய்தி என்னவெனில்.., சில சம்பவங்கள் இடங்கள் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருந்தபோதும், பைபிளில் எழுதப்பட்டு இருக்கிற சம்பவங்களை கூர்ந்து கவனித்தாலே உலகின் முந்தைய இப்போதைய வரும் காலங்களில் நடந்த நடக்கிற நடக்கப் போகிற எல்லாவற்றையும் சரியாய் அடையாளப்படுததிக் காண்பிக்கிறது ஏனெனில்...,  " பரிசுத்த வேதாகமம்  - கர்த்தருடைய வேதம்"

ஆதாம் மற்றும் ஏவாளுக்கு பிறந்த காயீன் ஆபேல் என்ற ஆண்பிள்ளைகள் மட்டுமே பைபிளில் குறிப்பிடப்பட்டார்கள். அதுவும் காயீன் ஆபேலை கொலை செய்ததினிமித்தம்  அடையாளம் காட்டப்பட்டார்களேத்தவிர அவர்களுடைய வம்ச விருத்திக்காக குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்துப் பயண்பட்ட ஆதாம் மற்றும் ஏவாளுடைய பெண் பிள்ளைகள் பெயர்கள் எழுதப்படவில்லை. இங்கே சிலர் அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடும். என்ன? உடன்பிறந்த சகோதரிகளையா? ஆம் பிரியமான நண்பர்களே சகோதரிகளால்தான் இரண்டாம் தலைமுறை தோண்றியது.

முதல் மனிதனாக ஒருவனாக தேவனால் படைக்கப்பட்ட ஆதாம். அவனுக்குள் இருந்து எடுக்கப்படும் ஏவாள்.
ஆதாம் தனக்குள் இருந்து எடுக்கப்பட்ட ஏவாளுடன் இணைந்து இன்னொரு மனிதனை உற்பத்தி செய்வதை நாம் உட்பட அனைவருமே ஏற்கிறோம். அதை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. 

ஆதாமுக்குள்ளும், ஏவாளுக்குள்ளும் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு சரீரங்கள் இணைந்து இன்னொரு சரீரத்தை உற்பத்தி செய்வது தவறென்று சொல்வது ஏன்?

இது தவறா? தவறில்லையா? என்று ஆய்வு செய்வதற்கு ஆயத்தப்படும் முன் இங்கே ஒரு செய்தி கண்டு கொள்ளாமல் விட்ப்பட்டு விட்டது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அதை அடுத்தப் பதிவில் காண்போம்...                                        - தொடரும்

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?