ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைத்தலைவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

by Immanuel Abraham on Monday, October 10, 2011 at 9:47pm
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டும் அழைக்கப்பட்டுமிருக்கிற கர்த்தருடைய ஊழியர்களுக்கு நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

ஏதேன் தோட்டத்தில் உலாவரும் தகுதி படைத்ததும் தேவனால் படைக்கப்பட்டதுமான சர்ப்பத்தை... பூமிக்குரிய முதல் தொண்டனாக சாத்தான் தெரிந்த கொண்டது போல..

இன்றும் சபைகளுக்குள் உலாவிவரக் கூடிய தகுதி இருப்பதாகச் சொல்லித் திரியும் சில கருங்காலிகளை பிசாசானவன் தெரிந்து கொண்டிருக்கிறான். இவர்கள்.... தேவனுடைய தோட்டமாகிய ஏதேனுக்குள் நுழைந்த சர்ப்பமானது ஏவாளை  ஏமாற்றியது போல... இவர்கள் மூலமாக கிஸ்தவர்களை வஞ்சிக்க சாத்தானானவன்  திரிகிறான்.

பெண்களைப் போன்ற குணமுடையவர்கள் ஆனாலும் ஆண்களைப் போல அலையும் சில நபர்களை வஞ்சித்து வசப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இவர்கள் மூலமாக தேவசபையை அழித்துவிட முடியாது என்று அவனுக்கு தெரியுமாதலால் அவனால் இயன்ற மட்டும் தேவ ஜனத்தை தேவனிடத்திலிருந்து பிரிக்கும் வண்ணமாக மீறுதல், முறுமுறுப்பு, எதிர்த்துநிற்பது, அவதூறுசெய்தல், கசப்பு, புறங்கூறுதல் போன்ற பாவங்களுக்கு உட்படுத்தி..., கூடுமானவரை தேவ சபையின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமென வேகவேகமாக செயல்படுகிறான். எனவே எச்சரிக்கையாயிருங்கள்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் :

...... உங்களைக்குறித்தும் தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். ..... மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். (அப் 20:28..30) என்று..

சபையின் ஆரம்பகால கால ஊழியர்களில் ஒருவரான பரிசுத்த பவுலில் வார்த்தைகளினாலே உங்களை எச்சரிக்கிறேன். விழிப்பாக இருப்போம். கர்த்தருடைய வேலையை அசட்டையாக அல்ல.. கவனமாக செய்வோம் கர்த்தர் நாமத்தை ஒருங்கே உயர்த்துவோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

உங்கள் தொடர்புகளுக்கு:-

     Pastor A.Immanuel,
"Revival Pastor Fellowship"
        090953 21995

Top of Form
என்று நாம் எழுதிய கடிதத்திற்கு கிறிஸ்தவ தளங்களில் மிகப்பெரிய நபர் என்று வர்ணிக்கப்படும் சில்சாம் என்பவர் எழுதுகிற பிண்ணூட்டங்களைப் பாருங்களேன் :

Chill Sam :
கொஞ்சமும் நேர்மையில்லாத இந்த நபரை நண்பர்கள் தயவுசெய்து புறக்கணிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

இந்த மனிதரை அறிவுறுத்த எண்ணி நாம் மணிக்கணக்காக பிரயாசப்பட்டு பதித்த வரிகளைப் புறக்கணித்ததுடன் விமர்சித்தவர்களையே மறைமுகமாக வசனத்தின் மூலம் தாக்கும் இவருக்குரிய பதில் என்னிடம் உண்டு. ஆனாலும் அதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காக என்னுடைய முயற்சிகள் வீணாகாதிருக்க வேண்டி அமர்ந்திருக்கிறேன்.

எனவே தயவுசெய்து இந்த நபரைக் குறித்து எதுவும் எழுதாமல் இருப்பது நமக்கெல்லாம் நன்மையே பயக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

"அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்."(நீதிமொழிகள்.29:1)

இங்கே எனது கருத்துக்கு ஒரு "லைக்" ( Like ) கூட போடுவதைத் தவிர்க்கவும்.எதிர்ப்பவர்களைக் குறித்து எனக்குக் கவலையில்லை.

என்று பதில் எழுதுகிறார் இதைப் டித்த ரவி லெனின் என்பவர்
 
மறுபடியும் தொடங்கிட்டாங்கைய்யா. இந்த மாதிரி எழுதுவதை விட்டுவிட்டு சகரியா பூணன் போல ஆவிக்குரிய கருத்துக்களை எழுதுங்களேன். எல்லோருக்கும் பிரயோஜனமாக இருக்கும். (சட்டியில் இருந்தால்.....வரும்...வரணும்)

என்று எழுதியவுடன் ஆத்திரத்தின் உச்சத்திற்குப்போன சில்சாம்

ரவி அண்ணே உங்க தலைவர் இம்மானுவேல் ஆபிரகாம் சட்டியில இருந்து கொட்டியது ஃபேஸ்புக் முழுவதுமே நாறுதையா...அதை முதல்ல சுத்தம் பண்ணச்சொல்லுங்க..! என்று எழுதுகிறார்.

சகரியா பூணன் போல ஆவிக்குரிய கருத்துக்களை என்று எழுதியிருக்கிறீர்களே சகரியா பூணனை ஆவிக்குரியவர் என்று ஏற்றுக்கொள்ளுகிறீர்களா...? ப்ரதர்..! என்று பதில் கேள்வி எழுப்பகிறார். அவர்களது கேள்விக்கு

சகோதரர் ரவி அவர்கள்:  சகரியா பூணனின் கருத்துகள் அவருடைய எழுத்துகள் எனக்குப்பிடிக்கும்.ஏற்றுக் கொள்வது இயேசுவை மட்டும்தான். என்றதுடன் நாறுதுண்ணு தெறிஞ்சுகிட்டு அதிலேயே நிக்கிறியே தம்பி என்று சொல்லிவிட்டார்.
 
சில்சாமுடைய பதில் : நீங்களே நிக்கறீங்களே அவ்வளவா நாறாதுன்னு நினைச்சி வந்தேங்க...உங்களுக்கு உதவியாகவே வந்திருக்கிறேன்..! என்று மழுப்புகிறார். அதற்கு மறுமொழியாக

ரவி என்பவர்.: உங்களைப்போல பரிசுத்தவான்களின் உதவி என்னைப் போன்றவர்களுக்கு கிடைப்பது எத்தனை பாக்கியம். என்று இவர்களது விவாதம் நிறைவு பெறுகிறது.

இங்கே வாசகர்கள் கவனிக்க வேண்டிய செய்தி : இந்த சில்சாம் கிறிஸ்தவ சபைகளுக்கு புத்திமதி சொல்லுகிறவராம். மட்டுமல்ல..., ஆவிக்குரிய சபைகளை பக்திக்கேதுவாக வழி நடத்துவதற்கும் ஆலோசனைக் கூறுவாரம். இப்படிப்பட்டவரது அனுகுமுறையைப் பார்த்தீர்களா..? நான் எழுதின கட்டுரைபற்றி இவர் பேசவே இல்லை.   இது எப்படி இருக்கு?

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?