ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைத்தலைவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டும் அழைக்கப்பட்டுமிருக்கிற கர்த்தருடைய ஊழியர்களுக்கு நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
ஏதேன் தோட்டத்தில் உலாவரும் தகுதி படைத்ததும் தேவனால் படைக்கப்பட்டதுமான சர்ப்பத்தை... பூமிக்குரிய முதல் தொண்டனாக சாத்தான் தெரிந்த கொண்டது போல..
இன்றும் சபைகளுக்குள் உலாவிவரக் கூடிய தகுதி இருப்பதாகச் சொல்லித் திரியும் சில கருங்காலிகளை பிசாசானவன் தெரிந்து கொண்டிருக்கிறான். இவர்கள்....
தேவனுடைய தோட்டமாகிய ஏதேனுக்குள் நுழைந்து ஏவாளை சர்ப்பமானது ஏமாற்றியது போல... இவர்கள் மூலமாக கிஸ்தவர்களை வஞ்சிக்கத் திரிகிறான்.
பெண்களைப் போன்ற குணமுடையவர்கள் ஆனாலும் ஆண்களைப் போல அலையும் சில நபர்களை வஞ்சித்து வசப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
இவர்கள் மூலமாக தேவசபையை அழித்துவிட முடியாது என்று அவனுக்கு தெரியுமாதலால் அவனால் இயன்ற மட்டும் தேவ ஜனத்தை தேவனிடத்திலிருந்து பிரிக்கும் வண்ணமாக மீறுதல், முறுமுறுப்பு, எதிர்த்துநிற்பது, அவதூறுசெய்தல், கசப்பு, புறங்கூறுதல் போன்ற பாவங்களுக்கு உட்படுத்தி..., கூடுமானவரை தேவ சபையின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமென வேகவேகமாக செயல்படுகிறான். எனவே எச்சரிக்கையாயிருங்கள்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் :
...... உங்களைக்குறித்தும் தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். ..... மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். (அப் 20:28..30) என்று..
சபையின் ஆரம்பகால கால ஊழியர்களில் ஒருவரான பரிசுத்த பவுலில் வார்த்தைகளினாலே உங்களை எச்சரிக்கிறேன். விழிப்பாக இருப்போம். கர்த்தருடைய வேலையை அசட்டையாக அல்ல.. கவனமாக செய்வோம் கர்த்தர் நாமத்தை ஒருங்கே உயர்த்துவோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
உங்கள் தொடர்புகளுக்கு:-
Pastor A.Immanuel,
"Revival Pastor Fellowship"
090953 21995
Comments
Post a Comment