" கர்த்தருடைய மந்தையை காவல் பண்ணுவது நமக்கு நல்லது "

 

கிறிஸ்துவில் எனக்கு அன்பானவர்களே…  பரிசுத்த வேதாகமத்தை ஜெபத்துடன் வாசிப்பது நல்லது. ஏனெனில் பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டது. பரிசுத்த ஆவியானவருடைய துணையுடன்தான் வாசிக்க வேண்டும். அப்போதுதான் கார்த்தர் ஆழங்களை கற்றுக் கொடுப்பார்.

1பேது 5: 4 –ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பிரதான மேய்ப்பர் என்று பரி. பேதுரு எழுதுகிறார்.

எபி13: 20 - ல்  பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை… பெரிய மேய்ப்பர் என்று எபிரேய நிரூபத்தின் ஆக்கியோன் குறிப்பிடுகிறார்.

நமது பிரதான மேய்ப்பரான…… பெரிய மேய்ப்பரான இயேசுகிறிஸ்துவானவர்.
புதிய உடண்படிக்கைக்குப்பின்.....,

யோவா 21: 17 - ல் யோனாவின் குமாரனாகிய சீமோனே, ……….என் ஆடுகளை மேய்ப்பாயாக…. என்று தனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுவந்த தன்னுடைய சீஷனாகிய பேதுருவை தமது ஆடுகளை மேய்க்க இயேசுகிறிஸ்துச் சொன்னார்.

தொடர்ந்து அவர்...

சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார் ( எபே 4: 13 ) என்றும் வாசிக்கிறோம்.

நன்றாக கவனித்து வாசியுங்கள் : சிலர் அப்போஸ்தலராகவும், சிலர் தீர்க்கதரிசிகளாகவும், சிலர் சுவிசேஷகராகவும், சிலர் மேய்ப்பராகவும் தங்களைப் போதகராகவும் ஏற்படுத்திக் கொண்டார்கள். என்றோ… தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்டார்கள். என்றோ எழுதப்படாமல் அவர்…..ஏற்படுத்தினார் என்றே பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

அப்படியானால் கர்த்தரே நேரடியாக வந்து ஏற்படுத்தினாரா..? என்றால் இல்லை. அவர் தமது மேய்ப்பர்களைக் கொண்டு அதைச் செய்தார்.

மனிதனுக்கு ஒரு அதிகாரம் கொடுத்துவிட்டு அவனுடைய எல்லைக்குள் அவனுடைய அனுமதியில்லாமல் நுழைந்து தாறுமாறாக்குகிற ஒழுங்கற்ற வேலையை ஒருநாளும் செய்கிறவரல்ல… நம்முடைய ஆண்டவர். எனவே அவர் தம்மால் நியமிக்கப்பட்ட மேய்ப்பர்களிடம் தமது மந்தையைக் குறித்துச் சொல்லும்போது….

 ...உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். அப் 20: 28.என்கிறார்.

இங்கே எனக்கு ஒரு கேள்வி எழுந்தது..! ஏன்? எதுவும் ஆபத்து வரப்போகிறதா..? என்று கேள்வி எழுப்புவோமானால். நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறார் : ஆம் ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.யோவா 10:1.2   கள்ளனும் கொள்ளைக் காரனுமானவன் பக்க வழியாக வருகிறான்.

எது பக்கவழி ?

கர்த்தர் நியமித்த பாதை வழியே வராமல் சபைக்குள் நுழைகிறவன் கள்ளன் அல்லது கள்ள மேய்ப்பன். அதாவது முறையான ஞானஸ்நானம், முறையான ஆலோசனை, கர்த்தரால் நியமிக்கப்பட்ட ஊழியக்காரருக்கு கீழ்படிதல், உலகத்தோடு, உலகமாக கலந்து விடாமல், கர்த்தருக்கென்று வைராக்கியமாக நிற்கிற அனுபவம். போன்றவற்றின் மூலமாக சபைக்குள் வராமல்... பல்வேறு வழிகளில் சபைகளுக்குள் நுழைகிறவன் கள்ள மேய்ப்பன்


கள்ளனும் கொள்ளைக்காரனுமான இந்த மேயப்பர்களுக்கு....,

1.    ஆடுகளை மேய்க்க ரொம்ப ஆசை. ஆனால் வாசல் வழியாக வர முடியாது. வந்தால் அவனது தகுதிகள் ஆய்வு செய்யப்படும்போது கேவலப்பட்டுப் போவார்கள். எனவே இவன் பக்கவழியாக நுழைகிறான்.

2.    அப்புறம் அவன் கர்த்தருடைய மந்தையின் ஆடுகளை திண்பதற்கு ஆசைப்படுகிறான்.

3.    இது தேவனுடைய மந்தையாய் இருப்பதினாலே இந்த மந்தையை அழிக்க வேண்டுமென்ற வெறியுடன் புறப்பட்டு வருகிறான்.

கள்ள மேய்ப்பன் இப்படிப்பட்ட சிந்தை உடையவனாக இருப்பதினாலே..,

கர்த்தரால், கர்த்தருடைய அப்போஸ்தலர்களால் நியமிக்கப்படுகிற மேய்ப்பர்கள் மந்தையை காவல் பண்ணுவது நல்லது.

கள்ள மேய்ப்பர்கள் பலவீனர்கள் அல்ல..  அவர்கள் பலவான்களாகவே இருக்கிறார்கள். நாம் எதிர்த்து நிற்பதும் போராட வேண்டியதும். நமது வேலை. அப் 5: 41. அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,  42. தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். என்று வாசிக்கிறோம். கர்த்தருடைய ஊழியக்காரர் அவமானமடைவதற்கு ஆயத்தமாகவே இருந்தார்கள். கள்ள மேய்ப்பர்களை கன்டனம் பண்ணினார்கள். அதே நேரம் சத்தியத்திற்கு சாட்சியாக நின்றார்கள்.

போராடுகிற வேலையில் சிறிய சிராய்ப்புகள், காயங்கள், பலத்த காயங்கள் ஏற்படலாம் ஒருவேளை இரத்த சாட்சியாக மரிக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். மரிப்போம். போராடாமல் அமைதியாக இருப்பதைவிட போராடி சாவதற்கும் ஆயத்தமான கூட்டத்தில் நாமும் ஒருவராக இருப்போம்.

                                            கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?