விசுவாச மக்கள் ஜெபிக்கத்தக்க ஜெபக்குறிப்புகள்.

1, தமிழக அரசின் கிறிஸ்தவ நலவாரியத்தின் உறுப்பினராக பெந்தெகொஸ்தே சபைகளின் மாமன்ற (Synod) அமைப்பை சேர்ந்த தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதற்காகவும், பெந்தெகொஸ்தே திருச்சபைகளுக்கு கிடைத்த அரசு அங்கீகாரத்திற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம். 


2, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு,  அதன் உடனடி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ₹5,426 கோடி கடன் உதவி வழங்க இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம். 


3, சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 2 மாதங்களாக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல்  விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஷாங்காயில் வசிக்கும் சுமார் 2 கோடி 50 லட்சம் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம். 


4, இந்தியாவில் நதிநீர் இணைப்பு திட்டங்களை இந்திய அரசு விரைவில் செயல்படுத்தும் படி ஜெபிப்போம். 


5, தமிழகத்தில் அதிகமாக 79,154 கோயில்களும்,  மகாராஷ்டிராவில் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளதாகவும்  ஆய்வில்  தெரியவந்துள்ளது. தேவன் குறுக்கிடும் படி ஜெபிப்போம். 


6, ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்களை ராணுவமும், தீவிரவாதிகளும் கொன்று வருகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தேவன் தடுத்து நிறுத்தும் படி ஜெபிப்போம். 


7, தமிழகத்தில் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இன்னும் 7 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. மின்உற்பத்தி தடையின்றி நடைபெறும் படி ஜெபிப்போம். 


8, சென்னையில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான கேட்டமைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் படி ஜெபிப்போம். 


9,  போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ஜெபிப்போம். 


10, போதைப்பொருள் கடத்தல், இருடியம், ரைஸ் புல்லிங் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதமான மோசடி தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் மனந்திரும்பும் படி ஜெபிப்போம். 


11, திருச்சபை போதகர்கள், உடன் ஊழியர்கள், வாலிபர் மற்றும் சிறுவர் ஊழிய பொறுப்பாளர்கள் மற்றும் எதிர்ப்புகள் மத்தியில் ஊழியம் செய்யும் அனைத்து போதகர்கள் போன்ற அனைவரது குடும்பங்களையும் தேவன் பாதுகாத்து, ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.


12, அனைத்துத் திருச்சபைகளிலும் உள்ள குடும்பங்களில் தேவசமாதானம் நிலைத்திருக்கவும், குடும்பப் பிரச்சினைகள் மாறவும் ஜெபிப்போம்.


13, சுகவீனம் மற்றும் சரீர பிரச்சனைகளோடு உள்ள தேவ பிள்ளைகள் தெய்வீக சுகத்தை பெற்றுக்கொள்ளும்படி ஜெபிப்போம். 


14, திருச்சபையில் உள்ள அனைத்து வாலிபப் பிள்ளைகளும் தேவனால் பாதுகாக்கப்படவும், தேவபக்தியில் வளரவும் ஜெபிப்போம்.

 

15, திருச்சபையில் திருமணத்திற்காக காத்திருக்கும் வாலிப பிள்ளைகளுக்கு ஏற்ற துணை கிடைக்கும்படி ஜெபிப்போம்.


16, விசுவாச குடும்பங்களில் உள்ள கடன் பிரச்சினைகள் மாறவும், தேவன் அவர்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்கும்படியும் ஜெபிப்போம்.


17, திருச்சபைகள் ஆத்துமாக்களால் நிரம்பி வழியவும், எண்ணிக்கையில் பெருகும்படியும் ஜெபிப்போம்.


18, நமது தேசத்தில் உள்ள அனைத்து திருச்சபைகளிலும் உள்ள போதகர்கள், விசுவாசிகள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் (எழுப்புதல்) உண்டாக ஜெபிப்போம்.


19, தேவ பிரசன்னத்தினால் தேசம் முழுமையும் சுதந்தரிக்கப்பட  ஜெபிப்போம் (யோசுவா 18:1, ஒபதியா 18-21)


20, நம் தேசத்தின் பிரதமர்,  ஜனாதிபதி, அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து மாநில கவர்னர்கள்,MP மற்றும் MLAகள்,  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரின் பாதுகாப்பு, ஆசீர்வாதம், இரட்சிப்பிற்காகவும், இவர்களெல்லாம் மக்கள் நலனில் அக்கறை செலுத்தவும்  தொடர்ந்து ஜெபிப்போம். ஆமென், அல்லேலூயா.

 தொகுத்தவர் :- TPN-  Media

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?