ஒரு குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது.

கிறிஸ்துவில் பிரியமான சகோதர, சகோதரிகளே உங்கள் நிமித்தமாக கர்த்தரைத் துதிக்கிறேன். தற்போது சமூக வலைத்தளங்களில் குறிப்பாக " What's App " -பில் தன்னை இந்து என்று அறிவித்துக்கொள்ளும் ஒருவர் கிறிஸ்தவர்களிடம் பேசி விவாதிக்கும் ஒரு குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது.
அந்தக்குரல் பதிவில் பேசுகிறவர் தனது பெயர் குமார் என்றும் தன்னை ஒரு வக்கீல் என்றும் சொல்லுகிறாா்.
இந்த இந்து நண்பர், தான் வேறு பல கிறிஸ்தவ நண்பர்களிடம் பேசி தோற்றுப் போன குரல் பதிவுகளை வெளியிடாமல், தான் திறமையாய் பேசின அதாவது, எதிரே பேசுகிற கிறிஸ்தவரை பேச விடாமல்,
திறமையாக பேசி விட்டதாக நம்புகிற குரல் பதிவுகளை மட்டும் வெளியிட்டு பரப்புரை செய்து வருகிறார்.



இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்னவெனில்,
நாம் நம்முடைய கிறிஸ்தவ மார்க்கம் சார்ந்த ஜனங்களை தனி மனிதனுக்கு பக்கமாக திருப்புகின்ற வித விதமான ஜெபங்கள், ஆடல்கள், பாடல்கள், பற்பல ஆராதனைகள் போன்றவைகளை மட்டுமே போதித்து நடத்துவதை குறைத்துக்கொண்டு,
வேத சத்தியத்தையும், வரலாற்றையும், பிற மதங்களின் தோற்றம், உருமாற்றம், வளர்ச்சிகளையும் கற்பிக்க வேண்டும். நான் சொல்லுகிற இவை முன்னர் கற்பிக்கப்பட்டு வந்தது. இடையில் ஊடுருவிய சில அரைகுறைகளால் அவர்கள் ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரம் அறியாதவர்கள் ஆனபடியினால் அது போன்ற எதுவும் நடைபெறாமல், தடுக்கப்பட்டு விட்டது.
பிறருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவமானத்தால் குறுகி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். முகநூலி(Face Book)ல் கூட கிறிஸ்தவர்களுடைய பதிவுகள் Time Pass பண்ணக் கூடியது போன்றே இருக்கும்.
நாம் நமது ஜனங்களுக்குள் விழிப்புணர்வை விதைப்போம் அதுவே நமது மற்றும் நமது வளரும் தலைமுறையினருக்கு பலன் தரக் கூடியதாக அமையும், அதுதான் அவசியம்.
நாம் செய்ய வேண்டியதை முறையாய் செய்வோம் பலன் தருகிறவர் நமது தேவன். நிச்சயம் பலன் அளிப்பார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?