ஐஸ்வா்யமுள்ளவா் என்பதை, எப்படி அா்த்தப்படுத்துகிறார்கள் ?


சாம் பி செல்லதுரையின் போதனைக்குறித்து நான் இட்டிருந்த பதிவிற்கு சாடையாய் பதில் எழுதபட்டிருந்தாலும், அந்த பதிவிற்கு பதில் எழுதவேண்டியது என்னுடைய கடமையாக அதனாலே,

இது குறித்த என் விளக்கம்..

பரிசுத்த வேதாகமம் இவ்வுலக ஐஸ்வரியத்தை போதிக்கிறதா? என்றால், “இல்லை என்பதுதான் எமது பதில்

இதை விரிவாக பார்க்க முயன்றால்.. 2 கொரிந்தியர் 8 :9 ல்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே அவர் ஜசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஜசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. – என்ற வசனத்தில்

அவா் ஐஸ்வா்யமுள்ளவா் என்ற வார்த்தையை எப்படி அா்த்தப்படுத்துகிறார்கள் ?


பாலு ஜூவல்லர்ஸில் போய் தங்கம் வாங்கும் அளவில் அவா் ஐஸ்வா்யமுள்ளவா் என்றா? அல்லது தாஜ் ஹோட்டலில் பா்கரும் பீட்ஸாவும் சாப்பிடும் அளவிற்கான ஐஸ்வா்யவான் என்றா?

இயேசு பூமியில் மனிதனோடு மனிதனாக வாழும்போது ஐசுவரியனாக வாழ நினைத்திருந்தால் ஏழ்மையான நாசரேத் ஊர் தச்சனையும் அவருக்கு நிச்சயமிக்கப்பட்டிருந்த மரியவையும் அவா் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்கிறேன். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார். தன்னுடன் இருந்தவா்களை அப்படியே பழக்குவித்தார்.

தன்னைப் பின் தொடரும்படி அழைப்பு கொடுத்தபோது பேதுரு உட்பட அனைவரும் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆண்டவா் தம்மால் அன்பு கூறப்பட்டவா்களிடம் கொடுத்த கட்டளைகளில் பிரதானமானது உணக்குண்டான யாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு.

பின்பு என்னை பின்பற்று என்பதுதானே மாற்கு 10: 21, 25 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு.

நீ போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.

அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து துக்கத்தோடே போய்விட்டான்.

அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!

ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

உண்ணும் உணவு உடுத்தும் உடை போன்றவற்றைக் குறித்து இயேசுகிறிஸ்து ஆலோசனை கொடுத்த வேளையில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை உயா்த்திக் காட்டாமல்,

பகட்டாக உடுத்திய சாலமோனை காட்டுப் புஷ்பத்தைவிட கீழாக்கினாரே ஒழிய உயா்வாக அடையாளப்படுத்தவில்லை.

சாம் பி செல்லத்துரை போன்ற நவீன ஊழியா்களோ, வேத வசனங்களை இருக்கும் வண்ணமாக போதிக்காமல் புரட்டி போதித்து வருகிறார்கள். 

ஜனங்களுக்குள் உலக ஆசையையே முக்கியப்படுத்துகிறார்கள்.

பழைய ஏற்பாட்டில் கூட உயா்ந்த அனுபவம் என்பதும் தேவனோடு மனிதனை நேரடியாய் இணைப்பதற்கு ஏனோக்கு எலியா போன்றோருடைய வாழ்க்கையையே உதாரணமாக்குகிறாரே ஒழிய வேறல்ல.

எலியா எலிசாவை அழைத்தபோது, எலிசா எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார். நானும், நீங்களும் கிறிஸ்துவுக்காக வாழ்வதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

உலக ஐஸ்வா்யம் சம்பத்துக்களை விட்டவனே தேவனுக்காக வாழமுடியும். ஊழியம் செய்ய முடியும். ஒரே சமயத்தில் இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்வதை தேவன் விரும்புவதில்லை.

புதிய உடன்படிக்கையின்படி சீஷராக்கப்பட்டவா்களுக்கு நிரூபங்களை எழுதின பவுல் பிலி 3: 17…20 ல் சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். ஏனெனில்,

அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். என்றுதான் எழுதியிருக்கிறார். எனவே,






நாம் குணிந்து உலகத்தைப் பார்த்து பன்றிகளைப் போல அல்ல. வானத்தை அண்ணார்ந்து பார்க்கும் ஆட்டுக்குட்டிகளாக வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?