தரித்திரனாகக் காணப்பட்ட லாசரு - நமக்கெல்லாம் மாதிரி..!
தரித்திரனாகக் காணப்பட்ட லாசரு
ஐசுவரியவானாக
வேண்டுமென விரும்பவில்லை.
விரும்பினால்.
அது சோதனையிலும், கண்ணியிலும், கேட்டிலும், அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேட்டிலும் விழத்தள்ளும் என்பதை அவன் தெளிவாக
அறிந்திருந்தான். அவனுக்குத் தெரிந்து செல்வ செழிப்பை முன்னிருத்தும்
ஊழியா்கள் விழுந்து போனது போல பலா்
அந்த நாட்களிலேயே பல்வேறு இச்சைகளில் விழுந்துபோனதை
லாசரு நன்றாக அறிந்திருந்தான்.
அந்த ஐசுவரியவானோ, பணத்தை முக்கியப்படுத்தும் சபை
உபதேச ஆதரவாளா்கள் போன்று எப்பொழுதும் பண
ஆசை கொண்டவனாகவே இருந்தான்.
அதுவே அவனுடைய எல்லாத் தீமைக்கும்
வேராயிருந்தது எனவே இவனும் பணத்தை
இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே
தன்னை உருவக் குத்திக்கொண்டான் அதன்
காரணமாகவே பாதாளத்தை அடைந்து கொடிய வேதனை
அனுபவித்தான். எனவே,
இதை வாசிக்கிற தேவனுடைய மனுஷா்களே, பண ஆசை செல்வம்
செழிப்பு என்றதான இவைகளை விட்டோடி,
நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடுங்கள்.
நாங்களும்
தேவபக்தியாய் நடப்பதனால் பல பாடுகள் படுகிற
நிலையில் இருந்தாலும், விசுவாசத்தை எங்களில் துவக்கினவருடைய கிருபையினாலே விசுவாசத்தினால் நல்ல போராட்டத்தைப் போராடி
வருகிறோம். எங்கள் நோக்கம் நாங்கள்
இந்த உலகில் எந்த நிலையில்
இருந்தாலும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளப்
பிரயாசப்படுகிறோம்.
நீங்களும் பரிசுத்த
வேதாகமத்தின் பரிசுத்தவான்கள் கைக்கொண்ட உபதேசத்தை கடைபிடித்து நடக்கிற எங்களை மாதிரியாக
நோக்குங்கள்.
Comments
Post a Comment