பெந்தகோஸ்தே சபைகளை அவதூறு செய்கிற பொன்னுதுரை ஜோசப் அவா்களுக்கான சிறப்பு அழைப்பு..

இதெல்லாம் பிழைப்பா? அல்லது, இதுதான் பிழைப்பா? என்ற தலைப்பில்..,

// பிழைப்புக்கு வழியில்லாமல் சபைகளை ஆரம்பித்து பாஸ்டர்களாகி திருட்டுத்தொழில் செய்து நடத்துகின்றவர்கள் செய்கின்ற அட்டூழியங்கள்தான் இவைகள். இவர்கள் கேயாரம் சபை என்றும் அகாபே சபையென்றும் தங்கள் கட்டிடங்களுக்கு பெயர்களை வைத்துக்கொண்டு பண்ணிக்கொண்டிருப்பதே அட்டூழியங்கள்தான். //  என்ற –( Ponnudurai Joseph)

பொன்னுதுரை ஜோசப் அவா்களுக்கான சிறப்பு அழைப்பு :-


P.J அவா்களே நான் ஊழியம் செய்யும் சபைக்கு எவ்விதத்திலும் தொடா்பற்ற நீா் முறையற்று நடந்து கொள்வதுடன், K.R.M சபையின் பெயரையும் மற்றும் சில சபைப் பெயா்களையும் அடையாளப்படுத்தி ஒரு (Status) பதிவிட்டு பெந்தகோஸ்தே சபைகளை அவதூறு செய்திருக்கிறீா்.

உமது பதிவில் உள்ளதையெல்லாம் படிக்கும்போது நீா் உண்மையிலேயே அக்கரையினால் எழுதுகிறீரா? அல்லது ஆவிக்குரிய சபைகளை குற்றப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், வேண்டுமென்றே எழுதுகிறீரா? என்ற சந்தேகம் என்னைப் போன்ற பாஸ்டா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதைப்பற்றின எங்கள் சந்தேகத்தை அறிய உமக்கு 2 வாய்ப்பு தருகிறேன்.

1.நீங்கள் ஏதாகிலுமொரு தலைப்பி்ல் அனைவரும் பார்க்கும் வண்ணம் முகநூலில் என்னுடன் விவாதிக்கலாம்..! அல்லது, 

2.ஒரு நாளைக்குறித்துக் கொண்டு உங்கள் சபைப் போதகருடைய ஒப்புதல் கடிதம் அல்லது நீங்கள் போதகராக இருப்பின் போதகா் ஐக்கியத்தின் கடிதத்துடன் கேயாரம் (K.R.M) சபையின் பாஸ்டரான என்னை நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்கலாம்.

இந்த இரண்டும் உங்களுக்கு சரிப்பட்டு வராது எனில் இதற்கு மாற்றாக இரண்டு வாய்ப்புகளை நீங்கள் தாருங்கள். அது நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் அதை பரிசீலிப்போம்.

P.J என்ற பொன்னுதுரை ஜோசப் அவா்களே நீங்கள் கிறிஸ்தவராகவோ நியாயமான மனிதனாகவோ இருந்தால் இதை ஏற்பீா்கள். என்று நம்புகிறேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நன்றி.
                                                                       இப்படிக்கு,             
                                     பிதாவாகிய தேவனுடைய திட்டத்தின்படி
                             தேவகுமாரனாம்  இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைப்படி
                         பரிசுத்த ஆவியானவரால் வடிவமைக்கப்பட்ட      

               பெந்தகோஸ்தேசபையின் பாஸ்டா் இம்மானுவேல் ஆபிரகாம்.


நண்பா்களுக்கான முக்கிய அறிவிப்பு –

சில வருடங்களுக்கு முன்னதாகவே பொன்னுதுரை ஜோசப் என்னை Block பண்ணிவிட்டார். அதனால் நான் அவருடைய பதிவுகளையோ அவா் என்னுடைய பதிவுகளையோ பார்க்க முடியாது. எனவே

நண்பா்கள் இதை தங்களது சுவற்றில் (Whall-ல் ) மீள்பதிவிட்டு அனைவரும் அவரும் பார்க்கும்படி செய்யவும். எல்லாருக்கும் நன்றி.

Comments

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?