இயேசுகிறிஸ்துவானவா் தமது உடலாகிய திருச்சபையை தம் மீதே கட்டினார்..!

இயேசு தம் சீடரை நோக்கி மானிடமகன் யாரென்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார்.

அதற்கு இயேசு யோனாவின் மகனான சீமோனே நீ பேறு பெற்றவன்.

ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே நான் உனக்குக் கூறுகிறேன். உன் பெயர் பேதுரு

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. என்றார் மத் 16 13..18 வரை,

இயேசுவின் வார்த்தையை கவனியுங்கள்..,

1.இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை.

இதை என்றால் வாழும் கடவுளாகிய மெசியா என்பதை..

2. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபை..

இந்தப் பாறை என்றால்.., யார்? என அறிந்து கொள்ள 

திருவிவிலியத்தில் தேட வேண்டும்.




”ஆண்டவர் என் காற்பாறை.

என் கோட்டை. என் மீட்பர். என் கடவுள். நான் புகலிடம் தேடும் மலை. அவரே என் கேடயம். எனக்கு மீட்பளிக்கும் வல்லமை. என் அரண் என் தஞ்சம். என் மீட்பர். கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே. என்ற இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. ஏனெனில்..,

ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது? 2சாமு 22: 32

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள். ஏனெனில், ஆண்டவர் என் ஆண்டவர் என்றுமுள்ள கற்பாறை! ஏசா 26: 4

முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா? அறிவிக்கவில்லையா? நீங்களே என் சாட்சிகள். என்னையன்றி வேறு கடவுள் உண்டோ? நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ? ஏசா 44: 8

அதனால்தான் பேதுரு சொல்லுகிறார்.

உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே. 1பேதுரு 2: 4

திருத்தூதராம் பவுல் -

இனி நீங்கள் அன்னியர் அல்ல வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள் கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

திருத்தூதர்கள் இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும் கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.

கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது.

நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள். எபே 2 19..22

இயேசுகிறிஸ்துவானவா் தமது உடலாகிய திருச்சபையை தம் மீதே கட்டினார் பேதுருவின் மீது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?