"தேவனுக்கே மகிமை" உண்டாகட்டும்.
கர்த்தருடைய பெரிதான கிருபையால்..., சென்னை ஆவடி ACA சபையில் இருந்த என்னை கர்த்தர் தம்முடைய ஊழியத்திற்காக அழைத்தார். அவர் கொடுத்த வெளிப்பாட்டின்படி, இந்த கள்ளிகுளம் என்ற சிறிய கிராமத்தில் தேவனுடைய வேலையை செய்ய தேவனுக்குக் கீழ்ப்படிந்தேன். அதை என்னுடைய ஆவிக்குரிய தகப்பனார் பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களிடம் பரிமாறிக் கொண்டபோது அவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, சில ஆலோசனைகளை அளித்து தன்னுடைய ஊழியப் பாதையின் அனுபவங்களை சொல்லி எனக்காக ஜெபித்து என்னை அனுப்பி வைத்தார்கள். நான் இன்று ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதற்கு ஐயா அவர்களின் ஜெபமும் ஒரு காரணம். அங்கிருந்து வந்து கள்ளிகுளத்தில் ஊழியத்தை துவங்கியபின் மாரநாதா பத்திரிக்கை ஆசிரியரும் மாரநாதா பெண்கள் வேதாகம கல்லூரியின் முதல்வருமான பாஸ்டர் ஜோசப்பால் ஐயா அவர்களிடம் உதவி போதகராக இருந்தேன். கள்ளிகுளம் என்ற சிறிய கிராமத்தில் கர்த்தருடைய ஊழியத்தை துவங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கர்த்தர் கள்ளிகுளம் ஊழியத்தை அபரிதமாக ஆசீர்வதித்திருக்கிறார். இன்றும் அந்த இரண்டு மூத்த தேவ ஊழியர்களுடனும் ஐக்கியமாகவும் ஊழியத்தில் பங்கு கொண்டும் வருகிறேன். என...