தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாக….,
நோவா என்றால் .. , இளைப்பாறுதல் என்று அர்த்தம் . பரிசுத்த வேதாகமம் கூறும் நோவாவுடைய காலம் கி . மு 4000 வருடங்கள் என்பதை , கல்தேய பட்டணம் இருந்த ஊர் என்கிற பகுதியில் , 1930- ம் வருடத்தில் சர் லியோனார்ட் வொல்லி (Sir Leonard Wolly ) என்பவரது தலைமையில் அமைந்த குழு அகழ்வாராய்ச்சியின் வாயிலாக கண்டுபிடித்து உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் . பரிசுத்த வேதாகமம் நோவாவைக்குறித்து , “ நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் . நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் ” என்று விவலியம் அழகாக எடுத்துரைக்கிறது . தேவனால் வாழ்த்தப்பெற்றவன் நோவா . தொடர்ந்து .., நோவா தேவனால் அழிவில் இருந்து காப்பாற்றவும் பட்டான் . இப்படிப்பட்ட நோவா ஒருநாள் .., கர்த்தர் தனக்கு தந்தருளின பிள்ளைகளில் ஒருவனாகிய கானான் என அடையாளம் காணப்பட்ட காமை சபித்தானாம் ..! திகைப்படைந்தேன் . என்ன காரணம் ? என்ன காரணம் ? என்று மாம்சத்திலே அல்ல .., ஆவியிலே ஆராய வேண்டும் . மாம்சத்திலே யோசிப்பவர்கள் மாம்சத்த...