K.R.M சபையின் இந்த மாதத்தின் வாக்குத்தத்த வசனமும், செய்தியும்.



தேவனுடைய அன்பினால்  என் சகோதர சகோதரிகளே…! கிறி;ஸ்துவினிமித்தம் உங்களை வாழ்த்துகிறேன்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
2012 ஆம் ஆண்டு துவங்கின நாள் முதல் இந்த நாள்வரை 11 மாதங்களாக கர்த்தர் நம்மை காத்து நடத்தியிருக்கிறார். 12-ம் மாதத்தின் முதல் நாளாகிய இந்த நாளிலே கர்த்தர் சமூகத்தில்; கூடி வந்திருக்கிறோம்.
நமது கூடுகைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.
நமது கூடுகை, அர்த்தமுள்ளதாக இருப்பதினால் மகிழ்ச்சியடைந்து நம்முடைய கர்த்தரை துதிக்கிறேன்.
நமது கூடுகையானது உலகப் பிரகாரமான ஆசீர்வாதத்தை மட்டுமே குறியாக வைத்து அல்ல. இதுவரை நம்மை நடத்தி வந்த கிருபை மிகுந்த தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி அவரை மகிமைப்படுத்தும்படி கூடி வந்திருக்கிறோம். இப்படி, சபையாய் கூடி இதுவரை நம்மை நடத்தின தேவனைத் துதித்து புதிய மாதத்தை ஜெபத்துடன் கூட துவங்கியிருக்கிறோம்.
பரிசுத்த வேதாகமத்தில் நம்மை தைரியப்படுத்தக் கூடிய வசனங்களில் முக்கியமானது பிலி 4-ம் அதிகாரத்தின் 6; மற்றும் 7-ம் வசனங்கள் ஆகும்.

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்> எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.

அப்பொழுது> எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் - என்று,  இந்த வசனம் நம்மை தைரியப்படுத்துகிறது.

முதலாவது

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படக் கூடாது.
ஏனென்றால் மனிதனுடைய கவலையானது அவனுடைய இருதயத்தையும் உதடுகளையும் ஒடுக்கிப் போடும். என்று நீதிமொழிகள் புஸ்தகத்தில் வாசிக்கிறோம். திரும்பச் சொல்லுகிறேன். கவலைப்படுகிறவன் எந்த ஒன்றையும் நிறைவேற்றும் மனநிலையில் இல்லாதவனாக சோர்ந்து போகின்றான் இது மிகவும் ஆபத்தானதாகும். எனவே கவலைப்படாதிருங்கள். உங்களை விசாரிக்கக் கூடியவர் உங்கள் அருகில் இருக்கிறார்.

அடுத்து

விண்ணப்பம் 
இன்று அநேகர் விண்ணப்பம் செய்யும்போது ஸ்தோத்திரத்தோடே கூடிய விண்ணப்பம் செய்கிறதில்லை. நீங்கள் அவர்களில் ஒருவரப்போல இராதேயுங்கள். நன்றாய் ஸ்தோத்தரியுங்கள். ஏனென்றால்..
ஒரு மனிதன் ஸ்தோத்திரம் பண்ணும்போது கர்த்தர் நடத்தின விதங்களை சிந்தித்து அது ஒவ்வொன்றிற்காகவும் ஸ்தோத்திரம் பண்ணுகிறான். அப்படி ஸ்தோத்தரிக்கும்போதே கர்த்தர் இதுவரை நடத்தின விதங்களை உணருகிறான். உணர்ந்து ஸ்தோத்தரிக்கையில் அவருடைய வல்லமையின் பேரில் அந்த மனிதனுக்கு அழுத்தமான விசுவாசம் உண்டாகும்.
இப்பொழுது அந்த மனிதன் சொல்லுகிறான். இனி கர்த்தர் எனக்கான யாவையும் செய்து முடிப்பார்.
இப்படிப்பட்ட அனுபவத்துடன் நீங்கள் ஸ்தோத்தரிப்பீர்களானால்.. உங்கள் விண்ணப்பம், ஜெபம், வேண்டுதல் என்னவாக இருக்கும்? கன்டிப்பாக அழிந்து போகிற உலக பொட்களை எதிர்பார்த்ததாக இராது. தேவ சமூகத்தையும், அவருடைய சமூகத்திலுள்ள ஆசீர்வாதங்களையும், எதிர் நோக்கியதாக இருக்கும்.
கர்த்தர் தம்மிடத்திலே வேண்டிக் கொள்ளுகிற தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மைகளை மறைப்பவரல்ல நிச்சயமாகத் தந்தருளுவார்.

“உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

உங்களுடைய கவலை, கண்ணீர் எல்லாம் அப்பொழுதே மாறிவிடும். எனவே கவலைப்படாதிருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் உங்கள் குடும்பத்தின்மேல் தேவ சமாதானம் நிலைத்திருக்கட்டும். எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

                              கிறிஸ்துவின் பணியில் 

        உங்களுடன்...>  பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரஹாம். 

                        (Pastor. Immanuel Abraham)


PP

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?