பாம்பை என் கால்களுக்கு கீழே...,

Face - Book ல் எழுதியதை
எனது நண்பர்களாகிய உங்களுடைய
பார்வைக்காக இங்கும் பகிர விரும்புகிறேன்.
 ---------------------------------------------------------








"பாம்பு" "பாம்பு" என்று
கத்திக் கொண்டு ஓடுபவன்
ஜனங்களை எச்சரிப்பதாக
தம்பட்டம் அடித்தாலும்.. - அவன்
உயிருக்குப் "பயந்து ஓடுகிற கோழை"
என்பதுதானே உண்மை...!

நான் பயந்து ஓடுகிற கோழையாக
இருக்க விரும்பவில்லை. ஏனெனில்…
அந்த பாம்பையும் என் கால்களுக்கு கீழே
நசுக்கிப் போடுபவர் கர்த்தர் அல்லவா?

மரணத்தையும் ஜெயித்தவர்
ஜெயம் பெறுவதற்கு தயங்குகிற
கோழைகளை தன் எல்லைக்கு வெளியே
புறம்பாக்குவார்.. புரிந்து கொள்ளுங்கள்.

நண்பர்களே.. நீங்கள் என்னை
சுலபமாய் புரிந்துகொள்ள - நான்
சாலையோரம் நாட்டப்பட்ட
"மைல்கல்" அல்ல.. 

ஜீவனுள்ள கல்லாகிய
கிறிஸ்து இயேசுவுடன்
இணைக்கப்பட்டவன் நான் . ஒருவேளை

நாம் இணைந்து
பயணம் செய்தோமானால்
என் தனித்துவம் புரியும்.
சிலருக்கு சற்று தாமதமாகும்.

அவசரமாய் வந்து
அதிரடியாய் வெளியேறினால்..
எதுவுமே புரியப் போவதில்லை.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?