கர்த்தருடைய சபையானது தூய்மையாகி வசனத்தின்படி வாழ வேண்டுமென்று....,


கிறிஸ்து இயேசுவில் எனக்கு மிகவும் பிரிமானவர்களே..! என்னை மீட்டெடுத்த மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன்.

ஒருசிலர் என்னைக் கடுமையாய் விமர்சிக்கிற படியினாலே... நான் எனது நிலையை மாற்றிக் கொண்டு அனைத்து தரப்பினரும் விரும்புகிறபடி எழுத வேண்டும். அல்லது ஸ்தல ஊழியத்தை மட்டுமே கவனித்து அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் நண்பர்களில் சிலர் விரும்புகிறதை அவர்களது எழுத்துக்கள் எனக்கு அறிவிக்கிறது. 

உங்களுடைய எதிர்பார்ப்பு நல்லதுதான். என் நலம் நாடும் நண்பர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறேன். நான் என் மரியாதையையும் என்னுடைய நலத்தையும் மட்டுமே நாடினால்... கர்த்தருடைய ஊழியத்தை போராட்டத்தின் மத்தியில் செய்யப் போவது யார்? உண்மையை உண்மையாய் சொல்வதினாலேதானே பிரச்சனை வருகிறது..! இன்னும் புரியலல்ல..

ஒரு உண்மையை மீன்டும் அழுத்தமாகச் சொல்லுகிறேன். நான் மாம்சத்தின்படி இயங்குகிற சபைகளின் ஊழியக்காரனல்ல... நான் ஒரு ஆவிக்குரிய சபையில் கர்த்தருடைய வேலையைச் செய்ய கர்த்தரால் அழைக்கப்பட்ட கர்த்தருடைய ஊழியக்காரனாக இருக்கிறேன். எனவேதான் என்னால் கர்த்தருடைய வேலையை அசடம்டையாக செய்ய முடிவதில்லை. அதுமட்டுமல்ல...

கர்த்தருடைய சபையானது தூய்மையாகி வசனத்தின்படி வாழ வேண்டுமென்று விரும்புகிறேன். உங்களில் சிலர் என்னைப் போன்று இருப்பீர்களானால் மகிழ்ச்சியடைகிறேன்.  அதேவேளையில் கள்ள போதனைகள் கள்ள உபதேசங்கள் மற்றும் மாய்மால ஊழியம் செய்வோரை கன்டனம்பண்ணி கடிந்து கொள்கிறேன். அதனாலேயே அநேகர் என்னை எதிர்க்கிறார்கள்.

இதை வாசிக்கிற உண்மை கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு சில சம்பவங்கள் தெரிந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். ......,

....நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால்
பொய்யைக் களைந்து அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
                                                                                                                           எபே 4: 25

என்ற வசனத்தின்படி நடந்தவைகளை மட்டுமே உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இணைய உலகத்தில் நான் பிரவேசித்த சில தினங்களுக்குள்ளாகவே அன்றைய நண்பர் பொன்னுத்துரை ஜோசப் என்பவருடைய புகைப்படத்திற்கு ஒரு பிண்ணூட்டமிட்டேன். அதுமுதல் அவருடைய உள்ளத்திலிருந்த ஆவேசம் அனைவருக்கும் முன்பாக வெளிப்பட்டது. அது மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவரை ஏராளமான நண்பர்கள் எவ்வித சபை பாகுபாடுமில்லாமல்??? அவருடன் சமத்துவமாக நட்பு பாராட்டி வந்தார்கள். என் பதிவுகளுக்குப் பின்னரே அவரது பாரம்பரிய சபை பாசம் ஆதரவு நிலைப்பாடு எப்படிப்பட்டதென அறிந்தனர். அந்த நாள் முதல் அவருடைய மாய்மாலம் விலகி சுயரூபம் வெளிப்பட்டது. அவரது இயல்பின்படியே அந்த அசுத்த ஆவி அருமையாக வேலை செய்தது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் தமிழகம் உட்பட உலக முழுவதுமுள்ள ஆவிக்குரிய சபைகள் மீதும் சபை பாஸ்டர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவிகள் மற்றும் பிள்ளைகள் குறித்தும் அவர் எழுதி விமர்சித்ததை கண்ட அநேகர் ஆவிக்குரிய சபைகள் மீது அவர் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியை அறிந்து முகம் சுளித்தனர். என்றாலும்.. எதிர்த்துக் கேட்பதற்கு தைரியம் இல்லை. நானோ பொன்னுதுரை அவர்களே நீங்கள் இத்தனை தைரியமாய் யாரை குற்றஞ்சாட்டுகிறீர்கள்? நானும் வருகிறேன். நேரில் போய் அந்த பாஸ்டரை கேட்போம். தவறு இருக்குமானால் கன்டிப்போம் என்று அழைப்பு விடுத்தேன். பதிலளிக்க முடியாத பொன்னுத்துரை தன்னுடன் இசைந்த கோழைக் கூட்டத்துடன் எனக்கு எதிராக திரும்பினார் என் மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. தொடர்ந்து

தேவபெலத்தால் எதிர்கொண்டேன். அனைவரும் ஆச்சர்யப்படும்படி தன் விருப்படியெல்லாம் என்னைத் திட்டிவிட்டு திடீரென ஒரே நாளில் என்னுடனான கணக்கை பிளாக் (Block) பண்ணீட்டு மாயமானார். நண்பர் கிறிஸ்தவ பெயர்தாங்கியான பி.ஜே என்ற பொன்னுதுரை ஜோசப். (இவருடன் நடந்த விவாதங்களை பற்றின முழு விபரங்களை எனது Blog-ல் படிக்கலாம்.) அவரைத் தொடர்ந்து..

வாட்ச்மேன் ( Watch Man Brothers ) சகோரர்களின் இரண்டாம் கட்ட தலைவரும் பொன்னுதுரையின் குடும்ப நண்பரும் எல்லாராலும் மிகவும் புகழப்பட்டவருமான திருதிரு விஜயகுமார் பொங்கி எழுந்தார் எனது எல்லைக்குள் புகுந்தார் சடுகுடு விளையாடி பார்த்தார்.

இவரிடம் உள்ள ஒரே பிரச்சனை இவர் ரொம்ப படிச்சுட்டாரு. சர்வ வல்லவருக்கும் மேலே நெறய கற்றுக்கொண்டதாக நினைக்கிறார் போல...! அதனாலதான் என்னவோ தேவனுடைய திட்டங்களையே முற்றிலும் மாற்றி அமைக்க தீர்மானிச்சு திட்டமிட்டார். அசிங்கம்பிடிச்ச உலகமும் இவருக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஏகபோக ஆதரவளித்து மட்டுமல்ல...

இவர் எழுதின எல்லாவற்றிற்கும் ஆமாஞ்சாமி போட்டதுடன் இவரை தேவதூதனைப் போல எண்ணியதுதான் உச்சக்கட்டம். இதனிமித்தம் இவருடன் சிலகாலம் பயங்கர போராட்டம். இவருடைய ஆதரவாளர்கள் எனக்கெதிராக கொதித்து பொங்கி எழுந்தனர். ஆத்திரமாக ஆர்ப்பரித்தார்கள். அநேக பதிவுகளை இட்டார்கள். என்னை யார்? என்றே தெரியாத ஆட்களெல்லாம் என்னை நன்கு தெரிந்தது போல இல்லாததையெல்லாம் எழுதிப் பார்த்தனர். சில வீடியோக்களை உருவாக்கினர் என்னைப் போன்ற உருவ ஒற்றுமை உடையவர்களுடைய வீடியாக்களைப் போட்டு அந்த ஆராதனைகளை குற்றம் சாட்டினார் பார்வையாளர்களாலேயே அந்த வீடியோவில் இருப்பது நானில்லை என்று அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதையார்? என்று சொன்னபடியினாலே; அடங்கினார்கள்.

இவருக்கு எதிரான எனது மறுப்புகளும் அதன் தொடர்ச்சியாக கன்டனங்களும் இவருடைய ஆதரவாளர்களுடைய ஆராவாரத்தால் கீழ் நோக்கி தள்ளப்பட்டதென்னவோ உண்மைதான். என்றாலும்.. முதலும் கடைசியுமாக நான் எழுப்பிய ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லத் முடியாயாமல் கடைசிவரை திரு திரு என முழித்து தன் பெயருக்கு முன்னாள் இந்த பட்டத்தைப் பெற்றதுடன். இந்த சிறியவனுடைய எதிர்ப்பைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத பலஹீனமான விஜயகுமார் என்னை பிளாக் செய்துவிட்டு மாயமாக மறைந்துவிட்டார்.

இந்த திருதிரு விஜயகுமார் என்னுடன் நட்பாக இருந்தபோதும் ஓடி ஒளிந்த பின்னும்..,

திருதிரு விஜயகுமாருடைய குழுவினர் எல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள். இந்த குழுவிலுள்ள இளைஞர்களால் சாத்தானுடைய ராஜ்யத்திற்கு பயங்கரஅடி அதனாலதான் இந்த ரவுடி பாஸ்டர் விஜயகுமாருடைய குழுவினரை எதிர்க்கிறார். என்று என்மீது குற்றப் பத்திரிக்கை வாசித்து அழைப்பே இல்லாமல் ஆர்ப்பரித்தவர் சில்சாம் என்ற போலி கணக்கின் முடிசூடா மன்னன். இவர் யாரென்றால்?. இவரும் ஒரு பாஸ்டரே! இவர் இணைய உலகின் பேரொலி??? என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுவார்.

“சில்சாம்” - அர்த்தமுள்ள உலகில் அவசியமில்லாத மனிதர்.

தன் நிழல்கூட தன்னை விட நீளமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக காலையிலும் மாலையிலும் வீட்டைவிட்டு வெளிப்படாமல் மத்தியான உச்சி வெயிலிலும் வெளிச்சமே இல்லாத இரவுகளிலும் சந்தடி பண்ணி உலாவுவதால் சற்று மூளை குழம்பிப் போன குழப்பவாதி.

இவருடைய உண்மையான பெயர் சாமுவேல் சர்ச்சில் என்பதாகும். பல்வேறு சபைகளை பலமுறைத் தாண்டி குதித்த தரமற்ற தமாஷ் பேர்வழி. இவர் இவருக்கே வைத்துக் கொண்ட பெயர் தேவஊழியர் (இவரைப்பற்றின முழு விபரங்களையும் எனது  Blog -ல் படிக்கலாம். 

இவர் பின்னாளில் தன்னை யுவனஜனம் என்று மாற்றிக்கொண்டார் என்பது முக்கிய செய்தி.

இங்கே ஒரு செய்தியை பதிவிடுவது அவசியம் என உணருகிறேன்.

நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். எனக்கு மாய்மாலம் செய்யத் தெரியாது. செய்வதை கண்டுபிடித்தால் அவரை என்றுமே பிடிக்காது. மாய்மாலம் பண்ணி பிழைப்பதற்காக நான் ஊழியத்திற்கு வரவுமில்லை.

எனவேதான் எங்களுடைய சபையின் விஷேசித்தக் கூட்டத்திற்கான நோட்டீஸ்கள் மற்றும் விளம்பரங்களில் சபை பாகுபாடற்றது என நான் என்றுமே குறிப்பிடுவதில்லை. ஏனென்றால்.. எனது அழைப்பில் நான் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில்...

என்னை சிருஸ்டித்தவரும் என்னை மீட்டெடுத்து பரிசுத்தப்படுத்தி பாதுகாத்து வழிநடத்தி வருகிறவருமான "இயேசுகிறிஸ்துவானவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்" எனவே அவரைப் போலவே வாழவும் ஊழியம் செய்யவும் விரும்புகிறேன். சத்தியம் அறிவிப்பதற்காக எவர் ஒருவரையும் பொய் சொல்லி அழைக்க வேண்டாமே..! இது என் நிலைப்பாடு.

நான் மேலே குறிப்பிட்டுள்ள சில்சாம் (Chill Sam) இன்று யுவனஜனம் (Yauwana Janam) என்று அழைக்கப்படுகிறார் இவரோ...

தன்னை யார்? என அடையாளப்படுத்திக் கொள்ளமாட்டாராம். காரணம்.. இவர் மறைந்து மறைந்து பவுலைப் போல??? (என்னாங்க கதை இது?) ஊழியம் செய்வாராம்.. உதாரணமாக..

இணையதளத்தில் பல்வேறு ஊழியங்களை ஊழியர்களை தாக்கி தாறுமாறாக எழுதுகின்ற இவர் பாஸ்டர் மீட்டிங்குகளுக்கும் போவார். பிரபல ஊழியர்களுடைய கூட்டங்களுக்கும் போவார். இந்த சபை அந்த சபை இந்த போதனை அந்த போதனை என்று இல்லாமல் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொள்வார். அங்குள்ள யாருக்கும் இவர்தான் சில்சாம் என்றுத் தெரியாது. தன்னை யாருக்கும் முன்பாக வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். கூட்டம் முடிந்து வெளியில் வந்தவுடன்...

விஸ்வரூபமெடுப்பார் தன் வேலையை காட்டுவார். அப்பாவிகளான அந்தக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் அந்தக் கூட்டத்தில் செய்யப்பட்ட பிரசங்கத்தையும் பற்றியெல்லாம் இணையதளத்தில் தாறுமாறாக எழுதுவார். மற்றொரு நாளில் இணையதளத்தில் யாரையெல்லாம் பழித்து எழுதினாரோ...! அவர்களைப் பார்த்து கூழை கும்பிடு போடுவார். பிரைஸ் த லார்ட் ( Praise the Lord ) என்பார். எதிரில் நிற்கும் அந்த பரிதாபமான போதகருக்கு இவர்தான் தன்னை தாக்கி தரக்குறைவாக எழுதிய சில்சாம் என்றோ யுவனஜனம் என்றோ தெரியவே தெரியாது. இது எப்படிப்பட்ட ஊழியம்? என்று இதை வாசிக்கிற உங்களுக்குப் புரிகிறதா? காரணம் ஒன்றே ஒன்றுதான் காணிக்கை காலனா குறையக் கூடாது என்'பதுதான். அதற்குத்தான் இந்த மாபெரும் நடிப்பு. இப்படி ஒரு ஊழியம். இதில் இவருக்கு பெருமை வேறு. இதை சுட்டிக் காட்டுகிற கன்டிக்கிற நான் ரவுடி பாஸ்டராம்..?! நல்லா இருக்குதுல்ல? இவுங்க நியாயம்..!!!

அந்த கள்ளன் சில்லரை சாமான் இன்றைய யுவன ஜனம் தனது வழக்கப்படியே ஏதாகிலும் ஒரு கள்ள கணக்கில் வந்து இந்த கட்டுரையை படிப்பார் என்று எனக்குத் தெரியும்.

“வாழ்வது ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் செத்தாலும் அது என் ஆண்டவருக்காக” என்று வாழுகின்றவன் நான். அதனால்தான்...

மாய்மாலத்தை மனப்பூர்வமாக எதிர்க்கிறவனாக காணப்பட்டாலும்.. கிறிஸ்துவின் உபதேசத்தை மக்களுக்கு முன் சாந்தமாய் உபதேசிக்கிறேன். நான் பொறுப்பிலிருக்கும் அல்லது என்னை அழைக்கும் சபைகளிலுள்ள ஜனங்களை ஆவிக்குரிய முறைமையில் சரியாய் நடத்துகிறேன். அதற்கு நான் ஊழியம் செய்யும் ஸ்தலங்கள் சாட்சி. கேட்கிறவர்களும் கீழ்படிகிறதுமான ஜனங்களே சாட்சி எல்லாவற்றிற்கும் மேலாக என் தேவனே எனக்கு சாட்சி..

இதைத் தவிர அனைத்து புரட்டு உபதேசத்திற்கும் எதிராக நிற்கிறேன். எனவேதான் இந்துக்கள் முசுலீம்கள் சிலை வழபாட்டினரான கத்தோலிக்கர் பாரம்பரிய சபையினர் கள்ள உபதேசக்காரர்கள். வேதவசனம் உட்பட எதற்கும் கீழ்படியாத சுவிஷேசகர்கள் மாய்மாலமாக வாழும் பெந்தகோஸ்தே சபையினர் போன்ற அனைவரும் நம்முடைய எழுத்து எல்லைக்குள் நுழைந்து கலவரம் பண்ணினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றனர். சில சமயங்களில் பிரம்பை கையாள வேண்டியதாகவும் இருக்கிறது.

இப்படியிருந்தால் எதிரிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும் என்று எனக்குத் தெரியும். இப்போது முசுலீம்களிலும் இந்துக்களிலும் கிறிஸ்தவர்கள் என தங்களை தாங்களே அழைத்துக் கொள்ளுகிற மாய்மாலக்காரர்களிலும் ஏராளமான எதிரிகள் எனக்கு இருக்கிறார்கள் என்றாலும்

என் தலையில் உள்ள கொஞ்ச முடியும்கூட என் தேவனால் எண்ணப்பட்டிருக்கிறது. நான் அடைக்கலான் குருவியைக் காட்டிலும் நான் மிகவும் விஷேசித்தமானவன்.

இன்று என்னுடன் நட்பாக இருக்கிறவர்களும் என்னுடைய பதிவுகளுக்கு குறைந்த பட்சம் லைக் போடுகிறவர்களுமான உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். நீங்களெல்லாம் ஆரம்ப நாட்களில் என்னுடைய பக்கத்தை பார்த்து எரிச்சலடைந்தவர்கள்தானே..?

"பாம்பு" "பாம்பு" என்று
கத்திக் கொண்டு ஓடுபவன்
ஜனங்களை எச்சரிப்பதாக
தம்பட்டம் அடித்தாலும்.. - அவன்
உயிருக்குப் "பயந்து ஓடுகிற கோழை"
என்பதுதானே உண்மை...!

நான் பயந்து ஓடுகிற கோழையாக
இருக்க விரும்பவில்லை. ஏனெனில்...
அந்த பாம்பையும் என் கால்களுக்கு கீழே
நசுக்கிப் போடுபவர் கர்த்தர் அல்லவா?

மரணத்தையும் ஜெயித்தவர்
ஜெயம் பெறுவதற்கு தயங்குகிற
கோழைகளை தன் எல்லைக்கு வெளியே
புறம்பாக்குவார்.. புரிந்து கொள்ளுங்கள்.

நண்பர்களே.. நீங்கள் என்னை
சுலபமாய் புரிந்துகொள்ள - நான்
சாலையோரம் நாட்டப்பட்ட
"மைல்கல்" அல்ல.. 

ஜீவனுள்ள கல்லாகிய
கிறிஸ்து இயேசுவுடன்
இணைக்கப்பட்டவன் நான் . ஒருவேளை

நாம் இணைந்து
பயணம் செய்தோமானால்
என் தனித்துவம் புரியும்.
சிலருக்கு சற்று தாமதமாகும்.

அவசரமாய் வந்து
அதிரடியாய் வெளியேறினால்..
எதுவுமே புரியப் போவதில்லை.

ஆக... இந்த யுவனஜனம் விஜயகுமார் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தார். என்னை மிகவும் தீவிரமாக எதிர்த்தார். நம்மதான் எதற்கும் அசர மாட்டோமல்லவா? அத்தத்தில அதாங்க கடைசியில என்னுடனான இணைப்பை துண்டித்துக் கொண்டு எல்லாரையும் போல இவரும் காணாமல் போய்விட்டார்.

இந்த சாமுவேல் சர்ச்சில் பாஸ்டருடன் நடந்த விவாதங்களை இணைய உலகம் உள்ளவரை இருக்கும்.

அவர் எம்முடனான தொடர்பை துண்டித்து வெளியேறியபின் நான் ஏஞ்சல் டி.வி மற்றும் சாதுவைப்பற்றி நான் எழுதும்வரை மிகுந்த அமைதி. நான் ஏஞ்சல் டி.வி சாது மற்றும் அவர்களது போதனை பற்றி சில பதிவுகளை வெளியிட்டேன். இப்போது...

ஜெயக்குமார் ஓசன்னா, (Jeyakumar Hosanna) ஜவஹர் நாஞ்சில் (Jawahar Nanjil) மற்றும் இவர்களுடைய நண்பர்கள் சுமார் 82 பேர். இத்துடன் இவர்கள் உருவாக்கி வைத்து கையாளும் கணக்கிலடங்காத போலி கணக்குகள். இதன் வாயிலாக எனக்கு எதிரான இவர்களுடைய விமர்சனங்கள் மற்றும் தூஷனங்கள். என்ன சொல்ல..? இவர்களுக்கு எதிராக மறுப்பு தெரிவித்து நான் பதிவிடும் பதில்கள் எல்லாம் உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். போராடினோம். தற்சமயம் இவர்களை சற்று அடக்கியிருக்கிறோம். இது நிரந்தரமா? என்றால் அது என் கையில் இல்லை என்பேன். கர்த்தர் வரும்வரை இது தொடரும்.. ஏன்னா..? பிசாசு அதுவரை ஆட்டம் போடவேச் செய்வான். நாம் அவனை அவ்வப்போது துரத்திக் கொண்டே இருப்போம். 

அவைகளும் வெவ்வேறு பெயர்களில் வந்து வாலாட்டவே செய்யும்.

நான் யாரையும் இனி தேடிப் போகப் போவதில்லை. அதேவேளைகளில் அவர்கள் எனது நண்பர்கள் எல்லைக்குள்ளேயோ எனது வட்டத்திற்குள்ளே நுழைந்து ஏதேன் தோட்டத்தில் செய்தது போல சாத்தானுடைய ஏவலாட்கள் வாலாட்டுவார்களானால் கடிந்து கொண்டு விரட்டி அடிப்பேன். காரணம் என்தகப்பனுடைய ஆடுகளாகிய விசுவாசக் கூட்டத்தார் “கழுகின்” பார்வையில் படுவதையோ “சிங்கத்தின்” வாய்க்குள் அகப்படுவதையோ “கரடி”க்கு இரையாவதையோ நான் அனுமதிக்கப் போவதில்லை.

கடைசியாக:-
மிருகங்களை மட்டுமல்ல தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கொக்கரிக்கிற கோலியாத்துக்களையும் இல்லாமல் ஆக்க கர்த்தர் என்னை அபிஷேகித்திருக்கிறார். அதேநேரம்..,

கர்த்தர் எனக்கு கொடுத்துள்ள சபை மற்றும் ஊழியங்களை சிறப்பான முறையில் செய்துவருகிறேன். தொடர்ந்து எனக்காக ஜெபியுங்கள். கர்த்தர் நாமம் மகிமைப்படுவதற்காக...

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?