"அரசியல் வியாபாரிகளிடம் பிச்சை"


நமது இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் ஏதாகிலும் ஒரு உணர்வுடனேயே கட்சியை ஆரம்பிக்கின்றனர். அல்லது தங்களது தொண்டர்களை வீறுகொண்டு எழும்பப்பண்ணுவதற்காக ஏதாகிலும் ஒரு உணர்வை ஊட்டிவிடுகின்றனர். சில கட்சிகள் ஜாதிவெறியையும் சிலகட்சிகள் மொழிவெறியையும் சில கட்சிகள் மதவெறியையும் சர்வசாதாரணமாக தங்களது கட்சித் தொண்டர்களுக்குள் திணிக்கின்றனர். உதாரணமாக பா.. (ஜாதி) மற்றும் பா.. (மதம்) மற்றும் பல்வேறு கட்சிகள்

இது ஒரு பக்கம் என்றால் இன்னொருபுறம்  "காலம் காலமாக திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட ஓரு சமூகத்திற்கு இடஓதுக்கீடு என்பது அடிப்படை உரிமை" இதை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. கடமையை செய்ய தவறும் அரசாங்கத்தை தட்டிக்கேட்பதும் மறுக்கப்பட்ட உரிமைகளை போராடிபெறுவதும் அடிப்படை உரிமை.

ஆனால் தங்கள் அடிப்படை உரிமைகளைக்கூட போராடி பெறத் தெரியாத முஸ்லிம் இயக்கங்கள். முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை அடமானம் வைத்து ஆளும் வர்க்கத்திடம் யாசித்து நிற்கின்றன.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் முஸ்லீம்களுக்காக உழைப்பதாகச் சொல்லும் 'முஸ்லிம் இயக்கங்கள் நாங்கள் எப்போதும் சந்தர்ப்பவாதிகள்தான்" என்பதை மீண்டும். மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். நாங்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது எங்கள் தனிப்பட்ட விருப்பம். காலம் காலமாக புறக்கணிப்பட்ட எங்கள் சமூகத்திற்கு இடஓதுக்கீடு கொடு.! கொடுக்க வேண்டியது உன் கடமை என்று சொல்ல திராணி இல்லாத இவர்கள் நாங்கள் உங்களை ஜெயிக்க வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கு இடஓதுக்கீடு தருவீர்களா?" என்று  அரசியல் வியாபாரிகளிடம் பிச்சை கேட்கிறார்கள்.

முஸ்லீம் ஓட்டுக்களைக் கொண்டு அரசியல் செய்யும் ஒவ்வொரு முஸ்லீம் கட்சிகளுக்கும் ஒரு பேராசை ஒட்டுமொத்த முஸ்லிம்;களும் தங்களது ஆதரவாளர்களாக மட்டுமே இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அதேநேரம் முஸ்லீம்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றுவதற்கும் தங்களது தொண்டர்களை தங்களுடனே தக்கவைத்து கொள்வதற்கும் இவர்களால் எந்த ஒரு கொள்கையையும் உருப்படியாக அறிவிக்க முடிவதில்லை. உதாரணமாக :- 

முஸ்லிம் லீக்
கருணாநிதி வந்தாலும் தொப்பி கொடுத்து கஞ்சி கொடுப்பார்கள். ஜெயலலிதா வந்தாலும் ஓல்னி (தலைக்கு மட்டும் போடும் முக்காடு) கொடுத்து கஞ்சி கொடுப்பார்கள். கருணாநிதியோ. ஜெயலலிதாவோஉதயசூரியனிலோ இரட்டை இலையிலோ! யார் எங்க நிக்க சொன்னாலும் கூச்சப்படாம நிப்பாங்க  எனவே இவர்களும் தங்கள் கொள்கைகளில் உறுதியா இருக்க முடியாது. அதுபோன்றே

.மு.மு. -வும் அதன் சந்தர்ப்பவாத கொள்கைகளும்!!
பாபர் மசூதி இடிப்புக்குப்பின். சுமார் பத்து ஆண்டுகளாக (ஓவ்வொரு டிசம்பர் 6-ஆம் தேதியும்) தொடர்ந்து குரல் கொடுத்த வந்தவர்களும் இஸ்லாமிய சமுதாயத்திலேயே எங்களைப் போல் யாரும் பாபர் மசூதிக்காக போராடியதில்லை என்று பெறுமை பேசிக்கொண்டவர்களுமான தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம். இப்போது பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து அந்த இடத்தில் இராமர் கோயில்தான் கட்டவேண்டுமென அறிவித்ததுடன் அதற்காக செங்கற்களை அனுப்பிய .தி.மு. - வுடன் கூட்டணி வைத்துள்ளது.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பாபர் மசூதி இடிப்பை கண்டித்த போது அதை ஆதரித்த ஓரே தலைவர் ஜெயலலிதாதான். தமுமுக-வினராகிய  இவர்களும் தங்களுக்கென்று ஒரு கொள்கையையும் வைக்க முடியாது.

தவ்ஹீத் ஜமாஆத் (TNTJ)
2006 தேர்தலில் தி.மு.-வையும் அதன் தலைவரையும் மிகமோசமாக விமர்சித்த தவ்ஹீத் ஜமாஆத் (TNTJ) இப்போது வெட்கமே இல்லாமல். தி.மு. -வுடன் கூட்டணி வைக்க துடிக்கிறது. இதில் தங்கள் திறமையைகாட்ட 3% என்ற இடஓதுக்கீட்டை 5% உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைவேறு. ஊழலுக்கும். அதிகார துஷ்பிரயோகத்திற்கும் பெயர்போன ஓரு கட்சியுடன்; 1.76.329 கோடி ரூபாய் மக்கள் பணத்தை திருடி கையும்களவுமாக பிடிபட்டு. நாடே நாறும் தி.மு. -வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது என்றால். இவர்களது கொள்கை எப்படிபட்டது? என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படியாக இவர்கள் தங்களது கூட்டணி கட்சியும் பிரதான கட்சியுமாயிருக்கிற கட்சிகளுக்காக தங்களது கொள்கைகளில் சமரசம் செய்து ஆகவேண்டியதாக இருக்கிறது.. எனவே இவர்கள் உறுதியாக எந்தஓரு கொள்கையிலும் நிரந்தாமாக இருக்கவேமுடியாது. அதேநேரம் இவர்களுடைய தொண்டர்கள் இப்படியே இருந்தால் போவார்கள். என்பது இவர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை.

முஸ்லீம்களுடைய கவனத்தை தங்கள் பக்கம் இழுப்பதற்காக இவர்கள் பல்வேறு வழிகளை கையாளுகிறார்கள். அவைகளில் முக்கியமானது முஸ்லீம்களை இரண்டு அணிகளாக மாற்றிவிடுவது ஆகும். இதற்காக இவர்கள் ஒருகட்சி மற்ற முஸ்லீம் கட்சியைக் காட்டிலும் உயர்வானது என்று கூறிக்கொள்வதில் போட்டி போடுகின்றனர். மட்டுமல்ல இதன் ஒரு பகுதியாக இவர்கள் தங்கள் தொண்டர்களை கிறிஸ்துவர்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவ உபதேசத்திற்கு எதிராகவும் கொம்புசீவி விடுகிறார்கள்.

முன்நாட்களில் முஸ்லீம்கள் இந்துக்களுடைய சில தவறான அணுகுமுறைகளைக் கண்டு அதை எதிர்ப்பதற்காகவும் சும்மா இருக்கின்ற முஸ்லீமை வம்பிழுக்கும் இந்துக்களுக்கும் எதிராக போராடும்படி முஸ்லீம்களை தூண்டிவிட்டது உண்டு. அதனால் பல்வேறு உயிரிழப்புகள். ஆனால் முஸ்லீம்களுடைய வன்முறைக் கலாச்சாரம் தொடரவில்லை. நாட்கள் செல்ல இந்திய அரசாங்கம் தனது இரும்புக் கரம் கொண்டு வன்முறையில் ஈடுபடும் முஸ்லீம்களை அடக்கியது. குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை மணி அடக்கப்பட்டது. இந்துக்களும் முஸ்லீம்களுக்கு இணையாக வன்முறையினால் பதிலடி கொடுப்பார்கள் என்பதை உணர்ந்தணர். முஸ்லீம்களின் வன்முறை செயல்கள் ஓரளவுக்கு அடக்கப்பட்டன.

இவர்கள் தங்கள் உண்மையான முகங்களுக்குமேல் பொய்யான புதுமுகமூடி அணிந்தனர்:- "முஸ்லீம் அரசியல்கட்சிகள்" இப்போது புதுப்பொழிவுடன் புறப்பட்டுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகள்  தங்களது ஆதரவாளர்களை திசைமாற்றுகிறார்கள். எப்படியெனில் வன்முறைக்கு எவ்விதத்திலும் இடமளிக்காமல் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை திருப்பிக் கொடு என்று போதித்தவரும் பட்டயத்தை எடுப்பவன் பட்டயத்தால் சாவன் என்ற எச்சரிப்பை கூறியவருமான இயேசுகிறிஸ்துவின் வழிநடக்கிற கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலகம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட வேலையை எல்லா முஸ்லீம் அமைப்புகளை விடவும் தவ்ஹீது ஜமாஆத் திறம்பட செய்து வருகிறது.

அன்பானவர்களே> அன்புக்குரியவர்களே முஸ்லிம் ஓட்டுக்களை அடமானம் வைத்து. அடிப்படை உரிமைகளையே விலைபேசும் இந்த சந்தர்ப்பவாத தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மற்றும்முஸ்லீம் லீக் போன்ற அமைப்புகளைப் புறக்கணித்துவிடுங்கள். 


- அர்ஷத் என்பவர் எழுதியதிலிருந்தும் சில வார்த்தைகள் இக்கட்டுரையில் கையாளப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?