"கூர்மையைக்கூட மழுங்கடிக்கும் வேலை"

அன்பானவர்களே.., தவறான ஒன்று நடக்கும்போது அதை பார்ப்பதை தவிர்ப்பதல்ல, அடுத்தவருக்கு அதன் ஆபத்தை உணர்த்துவதுதான் ஒரு உண்மை ஊழியனின் கடமை என்பதினாலே எழுதுகிறேன். யாரையும் குறை சொல்ல வேண்டுமென்கிற நோக்கத்தில் எழுதவில்லை.

இணையதளங்களில் வளமையாய் வலம்வரும் ஒருசெய்தியாளர், கிறிஸ்தவ மார்க்கத்தினுள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அவசரப்படாமல், நிதானமாக திணித்துக் கொண்டிருக்கிறார். என்ற எச்சரிப்பின் செய்தியை,  அனுபவத்திலிருந்து அறிவிக்கிறேன்.

படித்த நண்பர்களும், பெரிய பதவிகளில் இருக்கின்ற எந்த ஒரு மதமும் சாராத சன்மார்க்கர்களும் கிறிஸ்தவராக இருப்பவர்களில் சிலரும் இணையத்திலோ தொலைகாட்சியிலோ அல்லது புத்தகங்களிலோ ஒரு செய்தியை படிக்க அல்லது பார்க்க வேண்டுமானால், அதை எழுதியவர் யார்? என்று பார்க்கிறார்கள். அடுத்து, அவர் படித்துள்ள (உலகப்பிரகாரமான) படிப்பை  பார்கிறார்கள். என்பது மட்டுமல்ல, எழுதப்பட்டுள்ள செய்தி சுருக்கமாகவும், சுவராஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார்கள். இவர்களில்....,

அநேகருடைய விருப்பத்திற்கு ஏற்றபடி சாத்தானும் தம்முடைய தூதர்களை அனுப்பி ஏதேனில் விலக்கப்பட்ட கனியை ஏவாள் விரும்புகிற வண்ணமாக காட்டியது போல வேதத்திற்கு புறம்பான எந்த ஒன்றையும் ஜனங்களுடைய இச்சையின்படியே, வடிவமைக்கின்றான். அவர்கள் விரும்புகிறபடியே.., கவர்ச்சியாக காண்பிக்கிறான். அந்தசெய்தி எங்கிருந்து எடுக்கப்பட்டது? என்பது பற்றியெல்லாம் வாசகர்கள் கவலைப்படுவதில்லை. என்பதால்தான், சாத்தானுடைய கூட்டத்திற்கு செம கொண்டாட்டம். ஒருவேளை...

எழுதப்பட்டுள்ள செய்தி பரிசுத்த வேதாகமத்திலுள்ள செய்திபோல தெரிந்தாலும் எழுதப்பட்டுள்ள செய்தி இப்படித்தான் பைபிளில் இருக்கிறதா? என்பதையெல்லாம் படிப்பதற்கு அந்த அப்பாவிகளுக்கு, நேரம் இருப்பதில்லை. அந்த தைரியத்தில்தான் மழுங்கடிக்கும் வேலை செய்கிற விஜயகுமார் தனது தளத்திற்கு போரடிக்கும் இயந்திரம் என்று பெயர் வைத்திருக்கிறார். 

"இந்த வர்த்தகமுறைதான் சகல தீமைகளுக்கும் ஊற்றுக்கண்" என்பதை விளக்க உங்களை கற்காலத்துக்குக் கொண்டுசெல்ல விரும்புகிற விஜயகுமார்  தனது தளத்தில்....,   வேதவசனத்தை திரித்து மறைத்து ஒரு புது செய்தியை அவிழ்த்துவிடுகிறார். அது எப்படியெனில் :- தான் நிர்வாணி என்பதை அறிந்தபின் அவனுக்கு உடை என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாயிற்று. நான் ஒரு நல்ல வேட்டைக்காரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் மான்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை எடுத்து உடையாக மாற்ற என்னால் முடியும். எனக்கு அருகில் வசிக்கும் இன்னொரு நபர் ஒரு நல்ல தோட்டத்தை வைத்து பராமரிக்கிறார். ஆனால் அவரால் வேட்டையாட முடியாது. அவருக்கு உடை தேவை எனக்கு நல்ல ஆரோக்கியமான கனிகள் தேவை. நாங்கள் இருவரும் பண்டத்தை மாற்றிக்கொள்ளுகிறோம்.

ஆஹா எத்தனை அருமையான உறவு! ஆனால் பிரச்சனை எங்கு உருவாகிறது தெரியுமா?

இங்கு காட்சியில் இன்னொரு புது நபர் நுழைகிறார். அவர் என்னைவிட சிறந்த வேட்டைக்காரன் என்று வைத்துக் கொள்ளுவோம். அவரால் புலிகளளைக் கூட வேட்டையாட முடியும். அவர் புலித்தோலில் அழகான உடை செய்து என் நண்பருக்குக் காட்டுகிறார். மான்தோலை விட புலித்தோல் உடை அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. வியாபாரம் அவர் கைக்கு மாறுகிறது. நான் நஷ்டப்படுகிறேன். எனவே நான் எனது விட்ட வியாபாரத்தை மீண்டும் பிடிக்க ஏதேனும் புதுமையைப் புகுத்தி என் வாடிக்கையாளரை கவர வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறேன். இல்லாவிட்டால் என்னால் நிலைக்கவும் பிழைக்கவும் முடியாது. இங்குதான் போட்டி பிறக்கிறது இங்குதான் முன்னேற்றமும் பிறக்கிறது. இன்று நாம் தொலைதொடர்பு சந்தையில் காணும் சகல அதிநவீனப் பொருட்களும் வர்த்தகப் போட்டியினால் விளைந்தவையே! இந்த வர்த்தகப் போட்டியே தெருவோர வியாபாரிகளிலிருந்து வல்லரசுகள்வரை யாவரையும் ஆட்டிவைக்கிறது. நம்மையெல்லாம் எங்கோ ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லுகிறது.

என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிற தேவசெய்தியையே குலைத்துப் போட முயற்சிக்கிறார், இந்த விஜயகுமார். 

நான் இவரை பார்த்து கேட்கிற கேள்வி என்னவென்றால்.. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தியிலைகளைத் தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். என்ற வேதம் சொல்லுகிற செய்தியையும் அதன்பின்னர் தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். என்பதையெல்லாம் மறைத்து எழுதுவதற்கான அவசியம் என்ன வந்தது?

வர்த்தகம் இவர் பார்க்கும் கோனத்தில் வேதாகமத்தில் துவங்கவில்லை தொடரவும் இல்லை. அதன் துவக்கமும் தொடர்ச்சியும் வேறு ஒரு கோனத்திலேயே இருக்கிறது. என்பதை வேதம் வாசித்து அனுபவமுள்ள தேவஜனங்களுக்கு தெரியும். இப்படித்தான் துவங்கி இருக்க வேண்டுமென்பது விஜயகுமாரின் ஊகம். ஊகம் உண்மையாகிவிடாது. உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள் என்று தேவனாகியகர்த்தர் நமது கைகளில் வேதத்தை கொடுக்கவில்லை. உள்ளதை உள்ளபடியே புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். ஏஞ்சல் டி.வி சாதுவுக்கும், இவர்களுக்கும் வித்தியாசம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பல்வேறு ஊழியப் பணிகளுக்கு மத்தியிலும் இணையதள ஊழியத்தை செய்து வருகிறேன். சிலநேரங்களில் ஒதுங்கிவிடலாமா? என்று சிந்தித்ததும் உண்டு. வேதபுரட்டர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், ஓரளவுக்காவது ஜனங்களை தப்புவிக்கவுமே, இயண்ற மட்டும் எழுதுகிறேன். இன்னும் எழுதுவேன். காலங்கள் கிடைக்குமானால் காத்திருங்கள் வர்த்தகம் பற்றி எழுதுகிறேன்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?