"வாழச் செய்கிறவர்-இயேசுகிறிஸ்து"


எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும் அவனை மன்னித்து கடவுளுக்கு முன் உண்மையாய் வாழச் செய்கிறவர்-இயேசுகிறிஸ்து

தண்டித்து இந்த உலகை விட்டே அப்புறப்படுத்துகிறவர் - முஹம்மதுநபி

அன்பு என்ற சொல்லுக்கு அடையாளம் இயேசு கிறிஸ்துவே என்பது உலகோர் அனைவருக்கும் தெரியும். இதை மாற்று கூடாரத்தில் இருப்போர் கூட மறுக்க முடியாத ஒன்று. உலகின் பல்வேறு மதங்;களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்தவ மார்க்கத்தின் போதனைகளின் மேன்மை புரிகிறது. இங்கே சொல்லப்பட்டுள்ள செய்தியை கவனியுங்கள்.

முஹம்மதுநபியிடம் ஒரு பெண் வந்து தன்னைச் சுத்திகரிக்கும்படி (அவளது பாவத்திற்காக தண்டனை அடைவதன் மூலம்) கேட்டாள். அதற்கு அவர் அவள் சென்று இறைவனிடம் பாவ மன்னிப்புக்காக வேண்டிக் கொள்ளும்படிச் சொல்லி அனுப்பிவிட்டார். அவள் நான்கு முறை மறுபடியும் மறுபடியும் வந்து தகாத உறவின் மூலம் தான் கர்ப்பவதியானதை ஒப்புக் கொண்டாள். அவர் அவளிடம் குழந்தை பிறக்கும்வரை பொறுத்திருக்கச் சொன்னார்.  

அதன் பின்பு முஸ்லீம் சமுதாயத்தினரிடம் அவள் குழந்தை பால் மறக்கும் மட்டும் காத்திருக்குமாறு கூறினார். அக்குழந்தை திட உணவு உட்கொள்ளும் காலம் வந்த போது முஹம்மது குழந்தையை சமுதாயத்தினரிடம் கொடுத்து விட்டு அந்தப் பெண்ணை கல்லெரிந்து கொல்ல ஆணையிட்டார்.

அவர் அவளுக்காக கட்டளை கொடுத்து அவள் அவளது மார்பு வரை குழியில் புதைக்கப்பட்டவுடன் மக்கள் அவள் மீது கல்லெரியும்படிக் கட்டளையிட்டார். கலித் பி. அல்வலித் என்பவர் ஒரு கல்லுடன் முன்வந்து அதை அவள் தலையை நோக்கி எறிந்தார். இரத்தம் முகத்திலிருந்து வெளிப்பட்ட போது அவர் அவளைச் சபித்தார்.

(And when he had given command over her and she was put in a hole up to her breast, he ordered the people to stone her. Khalid b. al-Walid came forward with a stone which he threw at her head, and when the blood spurted on his face he cursed her - Muslim, no. 4206)

முஹம்மது, கலித்தை சற்று நிதானமாக (Gentle) இருக்கச் சொன்னது உண்மைதான். ஆனால் மார்பு வரையிலும் புதைபட்டிருக்கும் ஒருபெண்ணை நோக்கி ஒரு கல்லை எறிபவர் எந்த அளவுக்கு நிதானமாக எறிய முடியும்? நாற்பது மைல் வேகத்தில் செல்லவேண்டிய கல் முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டுமா? ஒருவேளை முஹம்மது கலித்தை அவளைச் சபிக்காதிருக்கும்படிச் சொல்லியிருக்கலாம். எது எப்படியாயினும் நபி அந்தப் பெண்ணினுடைய இறந்த சடலத்தின் மீது துவா (ஜெபம்) செய்து பின்பு அடக்கம் செய்தார்.

முஹம்மதுவும் அவரது சமுதாயத்தினரும் அந்தப் பெண்ணை இரக்கமின்றிக் கொலை செய்துவிட்டுச் செய்த அந்த துவா (ஜெபம்) உண்மையிலேயே எந்த அளவுக்கு பலனுள்ளதாய் இருந்திருக்கும்?


இயேசு.... மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.  

அப்பொழுது விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து அவளை நடுவே நிறுத்தி: போதகரே இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.  

இயேசுவோ குனிந்து விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்.

ஆக.....

உலகத்தில் பெரும்பான்யான நாடுகளில் தந்திரமாகவும் தாக்குதலினாலும் தன் கிளைகளை பரப்பி வருகிற முஹம்மதி மத தலைவர் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை தண்டித்து இந்த உலகை விட்டே அப்புறப்படுத்துகிறார்.

முஹம்மதுவுக்கு 571 ஆண்டுகளுக்கு முன் இந்த உலகிலே பிறந்த தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவோ பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரமுடையவரானதால் எல்லாவித பாவங்களையும் மன்னித்து கடவுளுக்கு முன்பாக உண்மையாய் வாழச் செய்கிறார்.

எனவே நீங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதில் பெருமைப்படுங்கள். அநேகரை கிறஸ்தவத்திற்குள் நடத்துங்கள். எனக்கு இயேசு போதும். என்று சொல்லுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து ஆளுகை செய்யட்டும். ஆமென். 

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?