கிறிஸ்தவரல்லாத ஒரு இந்து அரசியல்வாதியுடன்....,
" கிறிஸ்தவ சபைகளின் உள்பிரச்சனை " - " ஒரு இந்து அரசியல்வாதியுடன் தொடர்பு..... " "இந்து அரசியல்வாதியுடன் தொடர்புவைக்கும்வரை திருநெல்வேலி டையோசிஸ்ஸானாலும் சரி, தூத்துக்குடி டையோசிஸ்ஸனாலும் சரி, உருபடவே உருப்படாது" " தேவபிரசன்னம் இருக்காது". " (இந்து) அரசியல்வாதியான திரு.வைகுந்தராஜ் அவர்களுக்கு சி.எஸ்.ஐ சபையில் என்ன வேலை? -என்று சொல்லுகிறார் - மருத்துவரும், பத்திரிக்கையாளருமான சேலத்தைச் சேர்ந்த பூராசா என்ற புஷ்பராஜ் அவர்கள். மேற்கண்ட செய்தியை படித்தவுடன் மிகவும் வேதனை அடைந்தேன். ஆவிக்குரிய சபையினராகிய நாம் இவைகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் சபை துவேஷத்தினால் இப்படி எழுதுகிறார்கள் என்று பழிச்சொல்லில் படாய்படுத்தியிருப்பார்கள். ஆனால்... இந்த குற்றச்சாட்டை எழுப்புகிற இந்த மருத்துவர் சி.எஸ்.ஐ சபைகளுக்கு அடுத்தவரல்ல. இவரும் அதே சி.எஸ்.ஐ சபையைச்சேர்ந்த தீவிர பக்தர். மட்டுமல்ல.. நல்ல ஆன்மீகஅரசியல்வாதி. இவர் தான் சார்ந்துள்ள சபையையும் அத்துடன் இணைந்த நிறுவனங்களையும் தொண்டு அமைப்புகளையும்ம் அழிந்து போகாமல் காப்ப...