கிறிஸ்தவரல்லாத ஒரு இந்து அரசியல்வாதியுடன்....,


" கிறிஸ்தவ சபைகளின் உள்பிரச்சனை " -
" ஒரு இந்து அரசியல்வாதியுடன் தொடர்பு..... "


"இந்து அரசியல்வாதியுடன் தொடர்புவைக்கும்வரை 
திருநெல்வேலி  டையோசிஸ்ஸானாலும் சரி, 
தூத்துக்குடி டையோசிஸ்ஸனாலும் சரி,
உருபடவே உருப்படாது"

"  தேவபிரசன்னம் இருக்காது".



" (இந்து) அரசியல்வாதியான திரு.வைகுந்தராஜ் அவர்களுக்கு சி.எஸ்.ஐ சபையில் என்ன வேலை? -என்று சொல்லுகிறார் - மருத்துவரும், பத்திரிக்கையாளருமான சேலத்தைச் சேர்ந்த பூராசா என்ற புஷ்பராஜ் அவர்கள்.

மேற்கண்ட செய்தியை படித்தவுடன் மிகவும் வேதனை அடைந்தேன். ஆவிக்குரிய சபையினராகிய நாம் இவைகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் சபை துவேஷத்தினால் இப்படி எழுதுகிறார்கள் என்று பழிச்சொல்லில் படாய்படுத்தியிருப்பார்கள். ஆனால்... இந்த குற்றச்சாட்டை எழுப்புகிற இந்த மருத்துவர் சி.எஸ்.ஐ சபைகளுக்கு அடுத்தவரல்ல. இவரும் அதே சி.எஸ்.ஐ சபையைச்சேர்ந்த தீவிர பக்தர். மட்டுமல்ல.. நல்ல ஆன்மீகஅரசியல்வாதி.

இவர் தான் சார்ந்துள்ள சபையையும் அத்துடன் இணைந்த நிறுவனங்களையும் தொண்டு அமைப்புகளையும்ம் அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல. அந்த அமைப்புகள் தொடர்ந்து இயங்க வேண்டுமென்ற முனைப்புடன் தனது பத்திரிக்கையில் உருக்கமாக எழுதி வருகிறார். ஸ்வாமியின் பக்தர் தினகரன் சாரோட முன்னால் நண்பரல்லவா..?!!! பரவாயில்லை... அவரது நல்ல முயற்சிகளுக்காக மனதார பாராட்டுகிறேன். அத்துடன்...

அவரது தொண்டர்கள் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை அவர் தயங்காமல் தடையில்லாமல் தயக்கமில்லாமல் காரம் குறையாமல் வேகம் வீழ்ச்சியடையாமல் எழுதி வருகிறார். அதற்கு அவருக்கு உதவியாக பல யூதாசுகளுடன் புறங்கூறுகிற புண்ணியவான்களும் இருப்பதாக மருத்துவர் ராசாச்சொல்லிப் பெருமைபட்டுக் கொள்கிறார். ஆனால் இங்கே...

நீங்கள் வாசிக்கப் போகும் செய்தியானது நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் மாற்று மதத்திலிருக்கிற உணர்வில்லாதவர்களுக்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவ சபைகளை காயப்படுத்த பயனுள்ளதாகவும் இருக்கிறது என்பதை இணைய உலகில் நாம் பார்க்கிறோம்.

கீழ்கானும் செய்தியில் காணப்படும் நபர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதால்....,

" இவர்கள் தாங்களாகவே தங்களை கிறிஸ்தவமார்க்கத்தினுள் இருக்கும் கறைகள் குறைகள் களைகள் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான புற்று நோய்க்கிருமிகள் என்றும் அறிவிக்கின்றனர் "


ஆன்மீக அரசியல் நிபுனர் பூராசா அவர்கள் எழுதிய கட்டுரையின் இடையில் "இதில் யாருக்கும் வெட்கம் இல்லை" என்ற தலைப்பில் தொடருகிறார் அதில் :



.....இரண்டு பிரிவினர் இப்போது போராடுகின்றனர். இது கிறிஸ்தவ சபைகளின் உள்பிரச்சனை ஆகும்.   இதில் அரசியல்வாதியான திரு.வைகுந்தராஜ் அவர்களுக்கு என்ன வேலை? அவரோடு தொடர்புபடுத்தி செய்திகள் பலவிதமாக பேசிப்படுகிறதே? எனக்கும் இவர்கள் பிரச்சனையில் சம்பந்தம் இல்லை. ஆனால் என் வாசகர்கள் இந்த டையோசிஸ் பிரச்சனையில் ஆலோசனை கேட்டார்கள். அதனால்தான் ஆலோசனையாக இதை எழுதுகிறேன்.

 

இப்போது கோர்ட்டுக்குபோகும் இரு பிரிவினரும் பாரம்பரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் இருவரும் தினசரி வெளியிட்ட துண்டுபிரதிகள் அனைத்தும் நான் வாசித்தேன்.   குறிப்பிட்ட அரசியல்வாதியுடன் தொடர்புக்கொண்டு அவரிடம் பணம்வாங்கி செலவழிக்கிறார்கள் என்று மற்ற குழுவினரை குற்றம்சாட்டியவர்களே ஒருகாலத்தில் அதே திரு.வைகுந்தராஜ் அவர்களோடு தொடர்புகொண்டு லாபம் அடைந்தவர்கள்தானே? அப்போது அவர் அரசியல்வாதி என்று இருபிரிவினருக்கும் தெரியவில்லையா?

 

அதனால்தான் என் வாசகர்கள் ஏராளமானவர்கள் திருநெல்வேலி டையோசிஸ்ஸில் இப்போது நடக்கும் பிரச்சனைப்பற்றி ஆலோசனை கேட்டு எனக்கு தினம் ஒரு கடிதம் எழுதியும் அவர்களுக்கு உடனே ஆலோசனை கூற மனமற்று இருந்தேன். இருபிரிவினராலும் அல்லது வேறு எந்த பிரிவினரானாலும் சரி கிறிஸ்தவரல்லாத ஒரு இந்து அரசியல்வாதியுடன் தொடர்புவைக்கும்வரை திருநெல்வேலி டையோசிஸ்ஸானாலும் சரி - தூத்துக்குடி டையோசிஸ்ஸனாலும் சரி உருபடவே உருப்படாது. தேவபிரசன்னம் அங்கு இருக்காது.


மேற்கண்ட  செய்திக்கு :
 http://www.jamakaran.com/tam/2008/february/sabaiyin_marana.htm



 









இவர்கள் இங்கே உட்கார்ந்திருப்பது...,
பாவிகளை மனந்திரும்பும்படி அழைக்கவா...?

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?