சபை என்ற தேவ வடிவமைப்புக்கு எதிராக போர் தொடுப்பவர் யார்?

அனுபவமும் வயதில் மூத்தவருமான ஒரு பெந்தகோஸ்தே பாஸ்டரிடம் சில நாட்களுக்குமுன் பேசிக் கொண்டிருந்தேன். எங்களுடைய பேச்சின் நடுவே சபைகளுக்கு எதிராக நடக்கிற சில விரும்பத்தகாத விமர்சனங்களைப் பற்றி அந்த அனுவம் வாய்ந்த பாஸ்டரிடம் பேச வேண்டியதாயிற்று. அப்போது...

நான் : இது கடைசி காலம் என்றும் கர்த்தருடைய வருகை அதி சீக்கிரத்தில் இருக்குமென்றும் அறிந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் கிறிஸ்தவ சபைகளுக்கு எதிரான தாக்குதலை பல வழிகளில் சாத்தானானவன் தொடுத்திருக்கிறான்.

பாஸ்டர் : இது சபையின் தொடக்க நாட்களிலிருந்தே பிசாசானவன் தனது அடியார்களைக் கொண்டு நிறைவேற்றுகிற செயல். இப்போது இருக்கிற விசுவாசிகளுடைய பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டார்கள். பல இடங்களுக்கு பல நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கலாச்சாரங்களைப் பார்க்கிறார்கள். நமது சபையும் மேலை நாட்டு முறைமைகளின்படி மாறவேண்டுமென ஆசைப்படுகிறார்கள். ஒருசிலர் சற்று வித்தியாசமாக நமது முந்தைய முறைமைகளின்படியே தொடரவேண்டுமென்கிறார்கள். எல்லாருடைய ஆசைகளின்படியேயும், விருப்பத்தின்படியேயும் சபையை நடத்த முடியாதல்லவா? நமக்கு வேதாகமம்தான் மாதிரி அதன்படியே செய்வோம்.

நான்: ஆசைப்படலாம்.. ஆனால் அதை ஆண்டவர் விரும்புகிறாரா? என்று அவர்கள் யோசிப்பதில்லையே..? சபைகளை திருத்த வேண்டும் என்று பேசுகிறார்கள். அதே நேரம் இவர்கள் எந்த ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல்... பாஸ்டர்களை ஊழியங்களை கொடூரமாக குற்றம் சுமத்துகிறார்களே...?

பாஸ்டர் : தம்பி சொல்லுகிறவர்கள் யார்? என்று கேட்டீர்களா..? அவர்களைக் குறித்து ஏதாகிலும் உங்களுக்குத் தெரியுமா?

நான் : கேட்டேன் ஐயா.. அதற்கு இதுவரைக்கும் அவர்கள் பதில் தரவில்லை. நான் ஊழியம் செய்கிற பகுதியில் வசிப்பவர்களில் ஆவிக்குரிய சபைகளுக்கு எதிரான நபர்களைத் தெரியும். நாம் அவர்களோடு அமர்ந்து சத்தியத்தைப் பேச அவர்கள் வாய்ப்பு தரப்போவதில்லை.

ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்த நாட்களில் தகவல் தொடர்பு சாதனங்களை பிசாசானவன் மிக கவனமாக பயண்படுத்துகிறான். அவனது ஆயுதங்களில் முக்கியமாக அவன் அதிகமாக பயன்படுத்துவது இணையதளம் என்கிற வலுவான ஆயுதம். இணையதளத்தில்தான் இப்படிப்பட்ட பொல்லாத ஆவியையுடைய நவீன தீவிரவாதிகளும் அவர்களது அடிவருடிகளும்  பல தலைப்புகளில் ஆவிக்குரிய சபைகளை மட்டுமே விரோதித்து எழுதி அநேகரை குழப்பி வருகிறார்கள்.   

பாஸ்டர் : கிறிஸ்தவர்களில் பல பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் முறையற்று பிறந்தவர்கள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்பதுடன் நம்முடைய முறையான கேள்விகளுக்கு தகுந்த பதில் தரமாட்டார்கள்.

நான் : ஐயா சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்.

பாஸ்டர் :  தம்பி சபை என்பது ஒரு குடும்பம் போன்றது என்பதை 1தீமோ 3: 5-ல் ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?  என்று வாசிக்கிறோம். அப்படியானால் கர்த்தர் சபையை ஒரு குடும்பத்தைபோன்று பார்க்கிறார். சபைகளுக்கு எதிராக பேசுபவர்கள் யாரென்று கவனியுங்கள் அவர்கள்

1. பிதாவாகிய தேவனோடும் குமாரனாகிய இயேசுவோடும் பரிசுத்த ஆவியானவரோடும் ஐக்கியமாக இருக்கிறதும் அறிக்கை பண்ணுகிறதுமான சபையில் உள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட தேவமனிதன் மூலமாக புறப்படுகிற கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்படியாமல்...,
உலகத்தோடு உலகமாக கலந்து இருக்கிற வேசி தன்மையுள்ளதானப்பட்டபோதும் தன்னை உத்தமியாக காட்டித் திரிகிற சபை மூலமாகப் பிறந்தவர்களும்

2. பிதாவாகிய தேவனின் சித்தப்படி கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் வடிவமைத்த குடும்பம் போல செயல்படாத எந்த ஒரு சபையிலும் ஐக்கியமாக இராமல்… எங்கும் ஐக்கியம்.., எவரோடும் உறவு என்று அலையும் சுவிஷேசகர்களுடன்… தங்கள் பெயர் பிரஸ்தாபத்திற்காக தங்களிடம் இருக்கும் பணம் மற்றும் செல்வாக்கின் மீது பெருமை கொண்டு..., தங்கள் ஆசை இச்சைகளுக்காக சபைகளை மதிக்காமல் தேவஊழியர்களை அசட்டை பண்ணுகிற சில பணக்காரர்களும் ஒன்றிணைந்து மைதானங்களில் திருமண மண்டபங்களில் லாட்ஜ் – களில் உள்ள மீட்டிங் ஹால்களில் கூடியதால் பெற்றெடுக்கப்பட்டவர்களும்

3. பிதாவாகிய தேவனோடும் குமாரனாகிய இயேசுவோடும் பரிசுத்த ஆவியானவரோடும் ஐக்கியமாக இருக்கிறதும் அறிக்கை பண்ணுகிறதுமான சபையில் பிறந்த போதும் ஒழுங்குகளுக்கு கட்டுப்படாமல் ஓடிப்போனவர்களும்.. ஆகாத காரியத்தில் ஈடுபட்டு துரத்தப்பட்டவர்களும் ஒழுங்கற்றவர்களும்

4. நல்ல ஆவிக்குரிய சபையில் பிறந்தபோதும் சபையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத காரியங்களால் ஆவிக்குரிய ரீதியில் அனாதைகளாக்கப்பட்டோரும்

5. பிறந்தது முதலே அனாதைகளாக ஆவிக்குரிய ரீதியில் ஆதரிக்க ஆள் இன்றி.. ஆதரவு தேட மனமின்றி பரிதாபமாக ஆவிக்குரிய ரீதியிலான அனாதை விடுதிகளில் வளர்ந்தோராக இருப்பார்கள் அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். முறையான கேள்விகளுக்கு தகுந்த பதில்கூட தரமாட்டார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்காக நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும் என்றார்.

தேவனோடும் தேவசபையோடும் அனுபவம் பெற்ற இப்படிப்பட்டவர்களுடைய வார்த்தைகள் கவனிக்கப்பட வேண்டியவைகள். என்று நினத்த அதே வேளையில்...
நமது முன்னாள் நண்பர்கள் திருதிரு விஜயகுமாரும் சில்லறை சாமான் என்ற சில்சாமும் அவர்களுடைய நண்பர்களான அடிவருடிகளும் இதில் எந்த ரகம்? என்று யோசிக்கத் துவங்கிவிட்டேன்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?