ஈஸ்டர் 

கிரேக்கா்களுடைய புராணக் கதையில், இஸ்தார் என்ற பெண் தெய்வம் தன் மகனையே மணந்து கொண்டதாக உள்ளது. இந்த அசுத்த தேவதைதான் கிரேக்க, பாபிலோனிய பாரம்பரியங்களில் கடவுளாகவும் இருந்துள்ளது. 

இந்த இஸ்தார் தனது செத்துப்போன கணவனை உயிர்த்தெழ வைப்பதற்காக 40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து பின்னர் அவனை உயிருடன் மீட்டதாகவும் புராணம் கூறுகிறது. 

இந்த இஸ்தார் தேவதையின் 40 நாள் விரதத்தையே கத்தோலிக்கா்கள் கஸ்தி நாள் எனவும், C.S.I சபையினா் "லெந்து" நாட்கள் எனவும் கடைபிடிக்கின்றனா். 

இந்த அசுத்த தேவதையின் பெயரே "ஈஸ்டர்" எனவும் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது. 

இந்த பிசாசின் வஞ்சகத்தை பைபிளுடன் கோர்த்து விடுவதற்கு ஏதுவாக, இஸ்ரவேலர் (யூதர்) இன்றும் கடைபிடிக்கும் பஸ்கா பண்டிகை காலக்கனக்கையொட்டி நடைமுறைப்படுத்தி கிறிஸ்தவ விசுவாசிகளை நம்ப வைத்தது ஆதிகாலத்தில் தோண்றிய RC திருச்சபை.

முதல் நூற்றாண்டில் ஆதித் திருச்சபையை வழி நடத்திய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு போன்ற நிகழ்வுகளை விழாக்களாக அனுசரிக்கவில்லை, புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்கள் இந்த சடங்காசாரங்களை கடைபிடிக்க அறிவுறுத்தப் படவுமில்லை. மற்றபடி தங்கள் மாம்ச விருப்பத்தின்படி பண்டிகைகளை கடைபிடிக்கும் அவர்களை கலாத்தியர் 3:1-3 ல் புத்தியில்லாத கலாத்தியரே என்பதுபோல அழைக்கலாம். 

பலி செலுத்தும் நாட்களை மையமாக வைத்தே பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டது என பழைய உடன்படிக்கையில் காண்கிறோம். ஆனால் புதிய உடன்படிக்கையில் இயேசு ஒரே தரம் பலியாகி, அவர் சொன்னபடியே உயிர்தெழுந்து விண்ணகத்தில் வீற்றிக்கிறார். 

வேதத்தில் சொல்லபடாத இந்த சொல்லை பயன்ப்படுத்தும் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு சமமானது???

"மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்." (வெளி 1: 18). என்று சொல்லியபடி சதாகாலமும் உயிரோடிருக்கிற மெய்த் தேவனாகிய இயேசுவை வருடா வருடம் சாகடிப்பதும் பின்னர் உயிர்ப்பிப்பதும் வழக்கமாகி "ஈஸ்டர்" என்ற வேதத்திற்கு புறம்பாக ஒரு பண்டிகையை திருச்சபைகளும் விசுவாசிகளும் கொண்டாடுவது வேதனை அளிக்கிறது. 

ஈஸ்டர் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதத்திலும் ஒரே தேதியிலும் வருவது இல்லை.  ஒரு நபரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் ஒருபோதும் மாறுவதில்லை. கடந்த 2016ம் ஆண்டிற்கும் இந்த 2017ம் ஆண்டிற்கும் இடையிலான ஈஸ்டா் வித்தியாசம் 20 நாட்களுக்கும் அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பிறை நிலவு தோன்றும் கணக்கை கடைபிடித்து கொண்டாடப்படுவதால் வருடா வருடம் வெவ்வேறு நாட்களில் வருகிறது. இதிலிருந்தே இந்தப் பண்டிகை புற இனத்தாரின் விழா எனத் தெரியவில்லையா? 

ஈஸ்டர் என்று சொல்லைப் பயன்ப்படுத்தாமல் "உயிர்த்தெழுந்த ஞாயிறு" என்று வருடத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையையோ அல்லது எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலுமோ இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடலாமே!!!



#ஈஸ்டர் முட்டை என்று கொண்டடுவது அசிரிய காம தேவதையின் மகன் தமூஸ் இறந்த பிறகு 40 நாள்கள் எல்லோரும் நோன்பிருக்கவும், 41வது நாள் முட்டையை உடைத்து கோழி குஞ்சு வெளியே வருவதுபோல தமூஸ் வருவான் என்பதுவுமே அதற்கான விளக்கம்.... ஆகவே, இவைகளை விட்டு விலகுவோம்.

கர்த்தரின் உயிர்த்தெழுதலை கொண்டாட விரும்பினால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் அவா் உயிரோடு இருப்பதை அறிவிக்கும் வண்ணம், இரட்சிக்கப்பட்ட தேவ ஜனம், தேவ சபையாகக் கூடி வந்து ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை ஆராதித்து, இப்பூமியில் சாட்சியாக வாழுவோம்

கா்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?