எந்த கறி சாப்பிடலாம்...? சண்டைய மூட்டறான் ஜாக்கிரதை..

நண்பனுடன் ஒரு உரையாடல்,

நண்பன் : ஆட்டுக்கறி ரூ.450, ரூ500 என விலை ஏறி போச்சு
               ஜனங்க என்ன பண்ணுவாங்க?

நான்: மாட்டு கறியை சாப்பிட விடாமா.. 
               BJP காரனுங்க வேறா கலகம் பண்றானுங்க.

நண்பன்: இயற்கையால் படைச்சது எல்லாம் மனிதன் வாழாத்தான்.. 
         ஆனா.. இதுல அரசியல் பண்றாங்களே..

நான் : அசைவம் சாப்பிட்டே ஆகனும்ன்னா... 
         வேற கறிக்கு மாற வேண்டியதுதான்.. 
           சேவல், கோழி சாப்பிட வேண்டியதுதான்

நண்பன்: சேவல், மயில் எல்லாம் முருகன் வச்சு இருக்காரு ..
          முருக பக்தர் பிரச்சனை பண்ணுனா ..

நான். மீன் சாப்பிட வேண்டியது தான்

நண்பன்: அது முடியாது, தசாஅவதாரத்தில் கடவுள் எடுத்ததே 
           மச்ச அவதாரம் தான் ..

நான் : சீனாக்காரன் மாதிரி பாம்பு கறி ..

நண்பன்: பாம்பு சிவபெருமான் கழுத்து லேயே சதா இருக்குது

நான் : அப்ப பன்றி கறி தான்

நண்பன். அதுவும் பிரச்சனை தான், விஷ்ணு அவதாரத்துலே 
          முக்கியமானதே கூர்மா அவதாரம் தான்.

நான் : அப்ப எலி ,பெருச்சாளி

நண்பன்: விநாயகரின் வாகனமே அதுதான்

நான் : குரங்கு கறி

நண்பன்: ஆஞ்சநேயரை சாப்பிடறதா அது பெரும் பிரச்சனை

நான் : யானைய போட்ட கறிக்கு பஞ்சமே இருக்காது.

நண்பன்: ஆனைமுகத்தான் கணபதி மறந்துட்டியா..

நான் : காட்டுலே போயி புலி வேட்டை தான்

நண்பன்: அய்யப்பன் புலி மேல்தான் வர்ராறு

நான் : சிங்கம்

நண்பன்: துர்கா, காளிக்கு சொந்தம்.

நான் : பேசமா குதிரைக்கறி.. தொல்லையே இல்லை.

நண்பன்: முனிவர்கள் நடத்துன அஷ்வமேதா யாகத்துலே 
           குதிரைத் தான் பிரதானமே...

நான் : நாய்த்தான் நிறைய திரியுது. நாய்க்கறி பெட்டர்

நண்பன்: அது காலபைரவன் சாமி

நான் : அப்ப கழுகு, காக்காய சுட்டு திங்க வேண்டியதுதான்.'

நண்பன்: அங்கேயும் சிக்கல் தான். கழுகு பெருமாளுக்கு சொந்தம்
            காக்கா சனிஷ்வரனுது நவக்கிரகத்துல நீ பார்க்கல..

நான் : அப்ப எததான்டா.. மனுஷன் சாப்பிடறது.. புல், பூண்டு தான் திங்கனுமா.. அநியாயமா இருக்கு.. பூமியிலே இருக்கிற எல்லா உயிரினங்களையும் ஆளுக்கொரு சாமி குத்தகைக்கு எடுத்துகிட்டா மனுஷன் எப்படித் தான் பிழைக்கிறது.

நண்பன்: மனுஷனா பொறந்த நம்மள அந்த கறி சாப்பிடகூடாது .. 
           இந்த கறி சாப்பிடகூடாதுன்னு கலகம் பண்றவங்களை 
            அடிச்சே துரத்தனும்.

நான் : நீ என்ன சாப்பிட வேண்டும்? என்பத சொல்றவன் வளர்ந்தா 
        நாடு நாசமா போயிரும்..  ஊர்லே எல்லோருக்கும் சொல்லி 
         நாட்டை காப்பாத்தனும்.

நண்பன்: ஆமா.. ஆமா.. நான் என்ன திங்கறது?
                   அப்படிங்கறது அவன் யாரு தீர்மானிக்கறது.

நான் : நண்பா மனிதன் சாப்பிடற விஷயத்துலே இருந்து 
        சண்டைய மூட்டுறான் ஜாக்கிரதை.....

வாட்ஸ்-அப்பில் இருந்து பெற்றது.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?