ஒரு குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது.
கிறிஸ்துவில் பிரியமான சகோதர, சகோதரிகளே உங்கள் நிமித்தமாக கர்த்தரைத் துதிக்கிறேன். தற்போது சமூக வலைத்தளங்களில் குறிப்பாக " What's App " -பில் தன்னை இந்து என்று அறிவித்துக்கொள்ளும் ஒருவர் கிறிஸ்தவர்களிடம் பேசி விவாதிக்கும் ஒரு குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது. அந்தக்குரல் பதிவில் பேசுகிறவர் தனது பெயர் குமார் என்றும் தன்னை ஒரு வக்கீல் என்றும் சொல்லுகிறாா். இந்த இந்து நண்பர், தான் வேறு பல கிறிஸ்தவ நண்பர்களிடம் பேசி தோற்றுப் போன குரல் பதிவுகளை வெளியிடாமல், தான் திறமையாய் பேசின அதாவது, எதிரே பேசுகிற கிறிஸ்தவரை பேச விடாமல், திறமையாக பேசி விட்டதாக நம்புகிற குரல் பதிவுகளை மட்டும் வெளியிட்டு பரப்புரை செய்து வருகிறார். இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்னவெனில், நாம் நம்முடைய கிறிஸ்தவ மார்க்கம் சார்ந்த ஜனங்களை தனி மனிதனுக்கு பக்கமாக திருப்புகின்ற வித விதமான ஜெபங்கள், ஆடல்கள், பாடல்கள், பற்பல ஆராதனைகள் போன்றவைகளை மட்டுமே போதித்து நடத்துவதை குறைத்துக்கொண்டு, வேத சத்தியத்தையும், வரலாற்றையும், பிற மதங்களின் தோற்றம், உருமாற்றம், வளர்ச்சிகளையும் ...