Posts

Showing posts from December, 2014

கிறிஸ்தவா்களுக்கு வேதனை தரும்..., கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்.

Image
உண்மை கிறிஸ்தவா்களுக்கு வேதனை தரும் நிகழ்வு இன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள். கிறிஸ்தவ மார்க்கம் தூய்மையும் சத்தியமுமானது. ஆதி அப்போஸ்தலா்களுடைய காலங்களுக்குப்பின் பக்க வழியாய் நுழைந்த தந்திரக்காரா்களால் கணக்கில்லாத கற்பனைக் கதைகள் கிறிஸ்த வ மாா்க்கத்தின் வழக்கமான பழக்கமாக அடையாளப்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் பறக்கும் மான்கள்..! இது வேத வசனத்திற்கும் தேவனுக்கும் விரோதமானது. பூட்டிய சாரட் வண்டியில் பற்பல பாிசுகளுடன் பறந்து வரும் செவ்வாடை அணிந்த கிறிஸ்மஸ் தாத்தா.  விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பதுபோல கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் பறக்கின்ற மான்களை வாகனமாக கொடுத்துள்ளனா். கிறிஸ்மஸ் என்றவுடன்.., கிறிஸ்துவையும் அவரால் வரும் பாவ மன்னிப்பைக் காட்டிலும், பறக்கும் மான்கள், பரிசுகள் நிரப்பப்பட்ட சாரட் வண்டி, கிறிஸ்துமஸ் தாத்தா, பிா் மரம் போன்ற புணையப்பட்டக் கதைகளே நினைவுக்கு வரும் வகையில் நிரப்பப்பட்டுள்ளது. துருவப் பிரதேசங்களில் வாழ்ந்த பழங்குடிகளுடைய சிலை வழிபாடுகளுடன் இணைந்த மிருகங்களை வழிபடுகிற பழக்க வழக்கங்கள் கிறிஸ்தவா்களுடைய நற்செய்தி அறிவிப்ப...

கிறிஸ்மசும், மரங்களும்..!

Image
குளிர்காலம் தொடங்கும்போது, சூரியனுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும்...???! அந்த காலகட்டத்தில்  சூரியன் விரைவில் குணமடைய வேண்டிய சில நாட்டு மக்கள் மூலிகைகளை வீட்டில் வைத்து வழிபட்டதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகி ன்றனர். முதன்முதலாக பைன் மரங்களை அலங்கரித்து வழிபட்ட பெருமை ஜெர்மனியர்களை சாரும் என்று கூறுகின்றனர். அவர்கள்தான் 19ம் நூற்றாண்டில் இந்த வழக்கத்தை அறிமுகப்படுத்தினர். இந்த பைன் மரங்கள் பின்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இடம்பெற்று விட்டது. இந்த மரத்தை பின்விளக்குகள், வண்ண வண்ண ரிப்பன்கள், ஸ்டார்கள், பரிசு பொருட்களால் அலங்கரிக்கின்றனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தனர். 1948ல் அட்லான்டா, நியூயார்க், அடிலெய்ட் போன்ற முக்கிய நகரங்களில் பிரமாண்ட பைன் மரங்கள் காட்சிக்கு வைத்தனர். அதன்பின் பல நாடுகள் இதை பின்பற்றின. கடந்த 1923ம் ஆண்டில் இருந்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், தேசிய கிறிஸ்துமஸ் மரம் ஆண்டுதோறும் புதிதாக வைக்கப்படுகிறது. ஆனால், கால மாற்றத்தால் இயற்கையான பைன் மரங்களுக்கு பதில் செயற்கை மரங்கள் இன்று பல வீடுகளை ஆக்க...

புனைகதைகளை நாடி...,

Image
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றவுடன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு (சான்டா கிளாஸ்) அடுத்தபடியாக நினைவுக்கு வருவது பைன் அல்லது பிர் ஊசி இலை மரங்கள்தான். கட்டுக்கதைதான் என்றாலும் இந்த அறிவிப்பு சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்போடு தொடர்ப ுடையது...?? மாட்டுத் தொழுவத்தில் பிறந்த குழந்தை இயேசுவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எல்லா உயிரினங்களும் பரிசு பொருட்களுடன் பெத்லஹேம் சென்றன..??! ஆலிவ் மரம் பழங்களுடன் வந்தது. பேரீச்சம் மரம் தனது பழங்களுடன் வந்தது. ஆனால், குழந்தை இயேசுவுக்கு கொடுப்பதற்கு ஊசி இலைகளை கொண்ட பிர் மரங்களிடம் எதுவுமே இல்லை. இதை பார்க்க தேவதைக்கு பாவமாக இருந்தது. உடனே வானத்து நட்சத்திரங்களை பார்த்து, நீங்கள் பிர் மரத்தின் அழகான கிளைகளில் இருந்து அலங்கரியுங்கள்'' என்று கூறியது தேவதை. அதன்படி நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக பிர் மரத்தை மொய்க்க ஆரம்பித்தன. பிர் மரம் ஜொலிக்க தொடங்கியது. அதை பார்த்து குழந்தை இயேசு சிரித்து ஆசிர்வதித்தாராம்....?! பரிசுத்த வேதாகமத்தில்.., 2 தீமோ 4 : 3. முதல் 5 வரை உள்ள வசனங்களில்.., “மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். ம...

உண்மை கிறிஸ்தவா்கள்,பிரயாசப்படுங்கள்.

Image
கிறிஸ்தவா்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கோமாளிகளைப் போல வேஷமிடும் கிறிஸ்தவா்கள் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவா்களும் பிரயாசப்படுங்கள். கா்த்தா் உங்களை ஆசீா்வதிப்பாராக.

நமக்கு எந்த சபை வேண்டும்?

தேவகுமாரனாம் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் எனக்கு மிகவும் அன்பானவர்களே..! சர்வலோக மீட்பரும் ஆண்டவருமாகிய அவருடய பெயரால் வாழ்த்துகிறேன். கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இருந்தே வாழ்ந்து வருபவர் தமிழா்..! என்று, தமிழ் பற்றுடையவர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். இந்தியன் என்றாலே அவன் இந்துவாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், நமது தேசத்தில் முதலிலிருந்தே இருப்பது இந்து மதம்தான் என்று, விபரமறியாத இந்து மதப்பற்றாளாகள் சொல்லித்திரிவர். இந்துக்களுடைய பொய் பிச்சாரங்களை முறியடித்து, மிக குறுகிய காலங்களிலேயே இந்துமதம் வந்தது என்றும், பொய்களையும் கட்டுக்கதைகளையும் விட்டுவிலகி உண்மையாய் வந்த இயேசுவைப் பற்றிக்கொண்டு, நிலைவாழ்வு வாழ வாருங்கள் என்று, அழைத்து வழிநடத்தினால்…, மதப் பிரச்சாரம் செய்கிறார்கள், மதம் மாற்றுகிறார்கள் என்று சூலாயுதமும், குண்டாந்தடியும் தூக்குகிறார்கள்..! இந்துமதமென்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் காட்டுமிராண்டிகள். ஆபிரகாமுக்கும் அவருடைய மனைவியாகிய சாராளுக்கும், ஈசாக்கு எனும் மகன் பிறக்கும் முன்னரே, ஆபிரகாமுடைய வேலைக்காரியின் மூலமாக, இஸ்மவேல் பிறந்துவிட்டார். அந்த இஸ்மவேல...