சென்னை "ஜெப மாநாடு" திடுக்கிடும் தகவல்கள்.?

"ஜெபமாநாடு" என்ற பெயரில் சென்னையில் பிரமாண்டமான அளவில்..,
"ஆன்மீக அரசியல் மாநாடு" ஒன்றை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் மூலம் லட்சக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கடவுள் பெயரால் ஏமாற்றப்பட்டுள்ளனர். எப்படியெனில்...,



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்ததுபோல சென்னையிலும் 12 மணிநேர உபவாசக் கூட்டமாகவே நடத்துவதுதான் இவர்களுடைய முதல் திட்டம். ஆனால், திடீரென்று 12 மணிநேர உபவாசக்கூட்டம் பிரமாண்டமான ஜெபமாநாடாக மாற்றப்பட்டதின் பின்னனியில்தான் பல்வேறு திடுக்கிடும் செய்திகள் இருக்கிறது என்பதே உண்மை.

சென்னை 12 மணி நேர உபவாசக் கூட்டம், ஜார்ஜ் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியில்லாமலேயே  ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் என்று, அறிவித்துவிட்டார்களாம். இதை தாமதமாகவே அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் கடுமையாக ஆட்சோபித்ததாகவும் அதன் பின்னரே சின்னமலை ஏ.ஜி சபையின் மைதானத்திலென்று முடிவெடுத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

சென்னை 12 மணிநேர உபவாசக் கூட்டத்திற்காக ஏ.ஜி சபை மைதானத்தில் பல லட்சக்கணக்கில் செலவு செய்து அதாவது, மண் மட்டுமே சுமார் 5 அடி உயரத்திற்கு கொட்டி நிரப்பியிருக்கிறார்கள். (இதற்கு  செலவான லட்சக்கணக்கான பணம் ஏழை மக்களுடைய காணிக்கைப் பணமேயன்றி வேறில்லையே?) இத்தனையும் செய்தபின்பு இதற்கென்றே காத்திருந்ததுபோல அரசாங்கம் குறுக்கிட்டுள்ளது. அதாவது அந்த நிலத்தின் ஆவனங்கள் சர்ச்சைக்குரியதாகவும் அந்நிலத்தின் பெரும்பகுதி அரசாங்க நிலம் என்றும் அந்த இடத்தில் சிறு பகுதியே A.G -க் காரர்களுக்கு சொந்தமானதென்றும் இவர்களுக்குரிய நிலத்திற்கான சரியான ஆவனங்களை தாக்கல் செய்து குறிப்பிட்ட நிலத்தின் சிறு பகுதியை மட்டுமேப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அதுவரை அந்த நிலத்திற்குள் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்று மொத்தத்தையும் அரசாங்கம் சீல் வைத்துவிட்டிருக்கிறது.

எத்தனையோ முயற்சித்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கடுமையானதேயன்றி குறையவில்லை. திகைத்துப்போன இந்தப் புதியக் கூட்டணி அவசர அவசரமாக தனியாருக்குச் சொந்தமான இந்த இடத்தைக் கேட்டுப் பெற்று ஒரேஒரு மாத இடைவெளியில் 12 மணி நேர உபவாசக் கூட்டத்தை ஜெபமாநாடாக மாற்றியிருக்கிறார்கள்.

மாநாடு என்றலே அதற்கென்று ஒரு பிரமாண்டம் இருக்க வேண்டுமல்லவா? எந்த ஒரு மாநாட்டின் பிரமாண்டத்தை எடுத்துரைப்பதில் மாநாட்டுப் பந்தலுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த பிரமாண்டத்தை கொடுப்பதற்கு வாய்த்தவர்தான். தஞ்சாவூர் பந்தல்சிவா. இவர் அரசியல் கட்சிகளின் மாநாட்டுப் பந்தல்களை அமைப்பதில் மிகவும் பிரபலமானவர். எனவே இந்த மாநாட்டுப் பந்தல் அமைக்க தஞ்சாவூர் சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டார். எங்கு பந்தல் அமைத்தாலும் அதில் ஒரு புதுமை செய்து ஒரு அசத்து அசத்துவதில் கில்லாடியான இவர். இங்கும் அப்படி சில வேலைகளை செய்தார். கிறிஸ்தவ வட்டாரத்திற்கு இது புதுசு அல்லவா? அசந்து போனார்கள். அரண்டு போனார்கள். அடிபணிந்தார்கள்.??!! விரிவாகப் பிறகு எழுதுகிறேன்.

ஜெப மாநாட்டின் பிரமாண்டத்திற்காக தண்ணீராக பணம் இரைக்கப்பட்டதுடன். இரவு பகலாக பலர் வெறியுடன் வேலை செய்தார்கள் இந்த மாநாட்டுப் பந்தலை அமக்க இரவு பகலாக வேலை செய்தவர்களை வைத்து சுவிஸேஷம் அறிவித்திருந்தால் சத்தமில்லாமல் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணியிருக்க முடியும்.

இந்த மாநாட்டை பார்த்த ஏழை ஊழியர் ஒருவர் ஒரு நாள் கூத்துக்கு இவ்வளவு செலவு பண்றாங்களே...!? வண்டலூருக்கு அருகிலே எத்தனையோ ஊழியர்கள் நிரந்தர சபைகள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றார். இந்த செய்தி உபவாச மாநாடு....?!!! நடத்திய இவர்களுக்கும், இந்தக் கூட்டத்திலே கலந்து புளங்காகிதமடைந்த அநேகருக்கும் தெரியுமா? தெரியாதா?

இந்த மாநாட்டின் பின்னனியில் ஆளுங்கட்சிக்கு மறைமுக மிரட்டல் விடப்பட்டதென்றே சொல்ல வேண்டும்.

நான் முன்னரே சொன்னபடி ஏ.ஜி மைதானம் உட்பட இவர்களது அநேக செயல்பாடுகளில் ஆளும்கட்சியின் ஆதரவு சிறிதும் இல்லாதபடியினாலே, அரசாங்கத்திற்கு தங்களது பலத்தை காண்பித்து அதிமுக அரசை அடிபணிய வைக்க திட்டமிட்டே இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது. ஓரளவிற்கு அது நடந்தேறியதென்றே சொல்ல வேண்டும்.

அரசியல் கட்சி மாநாட்டுக்கு உரிய அத்தனை தோறனைகளுடன் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்காக பல கட்டடங்களை இடித்தது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான மரங்களையெல்லாம் வெட்டி அழித்து "உலகு வெப்பமயமாவதை மேலும் ஊக்கப்படுத்தினார்கள்" என்றே சொல்ல வேண்டும். சுமார் ஒரு மாதத்திற்குமேல் வேலை செய்து மைதானம் ஒழுங்கு செய்யப்பட்டதாம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜெபமாநாடு நடத்தியதின் மூலம் கிறிஸ்தவர்களுடைய ஆதரவு தங்களுக்கு எந்த அளவு இருக்கிறது பாருங்கள்? என்று பல்வேறு கட்சிகளுக்கு அறிவித்து அவர்களை பயமுறுத்துவதற்குப் பயண்பட்டதேயன்றி வேறில்லை. ஆளும்கட்சியின் மந்திரி ஒருவரும் நடப்பு எம்.எல்.ஏ - வும் வந்து கலந்து கொண்டதால் நாங்கள் அதிமுகவிற்கு ஆதரவான நிலையையும் எடுக்கக்கூடும் என்பதற்கான அறிவிப்புவுமாகவே இந்த மாநாடு காட்சியளித்தது.

இந்த மாநாட்டின் மூலம் அமைச்சர் அவர்கள் தன்னுடைய செல்வாக்கை கட்சியின் தலைமைக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் ஆளும்கட்சி எம்.எல்.ஏ மற்றும் சிறுபான்மைப்பிரிவு தலைவர் மூலமhக ஜெப மாநாட்டில் அம்மா புராணம் பாடப்பட்டிருக்கிறது. அதேவேளை தி.மு.க அல்லது ஆளும்கட்சிக்கு ஆதரவல்லாத எவருமே ஜெபமாநாட்டில் தலை காட்டியதாகத் தெரியவ்ல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த மாநாடும், இதற்காக கூட்டப்பட்ட இத்தனை திரள் கூட்டமும், செலவழிக்கப்பட்ட லட்சக்கணக்கிலான பணமும், தேவனுக்கும், வேத வசனத்திற்கும், ஏற்புடையதுதான் என்று விவரம் தெரிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். என்கிறேன்.

Comments

  1. please spend your precious time with LORD JESUS or PREACH the Gospel.
    please dont waste your time by finding faults in others.
    Jesus pleads for every one to GOD the FATHER.
    Our duty is to plead for all other people whom we think they are wrong.
    You are wasting most of the time in SEARCHING AND SCANNING FAULTS in others.
    Our work must be only to PLEASE GOD. We thank GOD for you.

    ReplyDelete
  2. The wrath of god is going to come upon you
    through this meeting so many souls are getting saved and so many believers are having the clear idea about prayer
    But how hard hearted you are, only cruel people can able to say that it is just a political meeting
    so many souls especially your believers are getting destryed and leading their way straightly to hell through your false preachings.
    so you don't bother about global warming

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?