K.R.M சபையின் இந்த மாதத்தின் வாக்குத்தத்த வசனமும், செய்தியும்.
தேவனுடைய அன்பினால் என் சகோதர சகோதரிகளே…! கிறி ; ஸ்துவினிமித்தம் உங்களை வாழ்த்துகிறேன் . கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . 2012 ஆம் ஆண்டு துவங்கின நாள் முதல் இந்த நாள்வரை 11 மாதங்களாக கர்த்தர் நம்மை காத்து நடத்தியிருக்கிறார் . 12- ம் மாதத்தின் முதல் நாளாகிய இந்த நாளிலே கர்த்தர் சமூகத்தில் ; கூடி வந்திருக்கிறோம் . நமது கூடுகைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் . நமது கூடுகை, அர்த்தமுள்ளதாக இருப்பதினால் மகிழ்ச்சியடைந்து நம்முடைய கர்த்தரை துதிக்கிறேன் . நமது கூடுகையானது உலகப் பிரகாரமான ஆசீர்வாதத்தை மட்டுமே குறியாக வைத்து அல்ல . இதுவரை நம்மை நடத்தி வந்த கிருபை மிகுந்த தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி அவரை மகிமைப்படுத்தும்படி கூடி வந்திருக்கிறோம் . இப்படி, சபையாய் கூடி இதுவரை நம்மை நடத்தின தேவனைத் துதித்து புதிய மாதத்தை ஜெபத்துடன் கூட துவங்கியிருக்கிறோம் . பரிசுத்த வேதாகமத்தில் நம்மை தைரியப்படுத்தக் கூடிய வசனங்களில் முக்கியமானது பிலி 4- ம் அதிகார த் தின் 6; மற்றும் 7- ம் வசனங்கள் ஆகும் . “ நீங...