கல்லை முத்தமிடுவதால்...,
அன்பு, பாசம், நேசம், காதல் என, மனதில் ஏற்படும் உணர்வுகளை அடையாளப்படுத்த உதவும், எளிமையான சாதணமாக முத்தம் பயண்படுகிறது.. தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் பெற்றோருக்கு என குடும்பத்திற்குள் பகிர்ந்து கொள்ளும் முத்தம். பாசத்தின் அடையாளமென்கிறோம். காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம், அன்பின் அல்லது, மோகத்தின் அடையாளம் என்கிறோம். இப்படியாக, சூழ்நிலை அல்லது இடத்திற்கேற்படி முத்தத்தின் பொருள் மாறுபடுகின்றது. முத்தம் தோன்றியது எப்போது? எந்த உயிரினம் தன் உணர்வை வெளிப்படுத்த விரும்பியதோ..? அப்பொழுதுதான், முத்தம் தோன்றியது. என்பதுதான், பதிலாக இருக்குமேயன்றி வேறில்லை. யார்? யாரிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள்? உயிரிணங்கள் மட்டும்தானா? உயிரினங்கள் மரியாதை செய்யும் பொருட்டு, உயிரற்ற பொருட்களில் முத்தமிட மாட்டார்களா? என்பீர்களாகில்.... , சிலர் சில பொருட்களுக்கு முத்தமிடுகிறார்கள் என்பது உண்மையே..! ஒரு மட்டை வீரர் தன்னை நோக்கி வீசப்பட்ட பந்தை தனது மட்டையால் வேகமாக அடிக்கிறார். பந்து ( Ball ) எவருடைய கையிலும...