"கூர்மையைக்கூட மழுங்கடிக்கும் வேலை"
அன்பானவர்களே.., தவறான ஒன்று நடக்கும்போது அதை பார்ப்பதை தவிர்ப்பதல்ல, அடுத்தவருக்கு அதன் ஆபத்தை உணர்த்துவதுதான் ஒரு உண்மை ஊழியனின் கடமை என்பதினாலே எழுதுகிறேன். யாரையும் குறை சொல்ல வேண்டுமென்கிற நோக்கத்தில் எழுதவில்லை. இணையதள ங்களி ல் வளமையாய் வலம்வரும் ஒருசெய்தியாளர், கிறிஸ்தவ மார்க்கத்தினுள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அவசரப்படாமல், நிதானமாக திணித்துக் கொண்டிருக்கிறார். என்ற எச்சரிப்பின் செய்தியை, அனுபவத்திலிருந்து அறிவிக்கிறேன். படித்த நண்பர்களும், பெரிய பதவி களில் இருக்கின்ற எந்த ஒரு மதமும் சாராத சன்மார்க்கர்களும் கிறிஸ்தவராக இருப்பவர்களில் சிலரும் இணையத்திலோ தொலைகாட்சியிலோ அல்லது புத்தகங்களிலோ ஒரு செய்தியை படிக்க அல்லது பார்க்க வேண்டுமானால், அதை எழுதியவர் யார்? என்று பார்க்கிறார்கள். அடுத்து, அவர் படித்துள்ள (உலகப்பிரகாரமான) படிப்பை பார்கிறார்கள். என்பது மட்டுமல்ல, எழுதப்பட்டுள்ள செய்தி சுருக்கமாகவும், சுவராஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார்கள். இவர்களில்...., அநேகருடைய விருப்பத்திற்கு ஏற்றபடி சாத்தானும் தம்முடைய தூதர்களை அனுப்...