தாலி - கிறிஸ்தவா்

தாலி பற்றி ஆய்வு செய்யப் புற்ப்பட்டோமானால், அது நீண்டுகொண்டே போவதாக இருந்தாலும், அது அநேக கற்பனைக் கதைகளையே உருவாக்குகிறதேயன்றி வேறில்லை.

இங்கே நாம் குறிப்பிட்டுள்ளவைகள் தமிழ் கலாச்சார நடைமுறைக்கும் முன்னோருடைய சிந்தை செயலுக்கும் பொருத்தமாக இருப்பதால் இதுவாகத்தான் இருக்குமென முடிவுக்கு வர நம்மால் முடிகிறது. 

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன், இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்த நாளில் கல்யாணம் செய்து கொள்வதாக 

தாலம் பனை என்ற பனை ஓலையில் அனைவரும் கையொப்பமிட, அந்த ஓலையினை குடிமகன் (ஒவ்வொரு ஊரிலும் குடிமகனே தலைமகன் என்று சொல்லுவார்கள்-இவா் சவரம் செய்கிற வேலையையும், திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளையும் செய்வார். அதே போல சலவைத் தொழிலாளி அவா் பல்வேறு பணிகளை செய்வதுடன் பெண்கள் பெரிய மனுஷி ஆன நிகழ்வில் இவா்களது பணி மிகப்பெரிய பங்களிப்பாகும். சவரத்தொழிலாளி என்ற குடிமகனும், வண்ணாா் என்ற சலவைத் தொழலாளியும் இல்லாத சடங்கு என்பது அக்கால கிராம வழக்கங்களில் நினைத்துக் கூட பார்க்க முடியாதவைகள்) எடுத்துத்தர கயிற்றில் கட்டி மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக வரலாற்று ஆய்வு சொல்லுகிறதாம். 

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றை மணமகன் மணமகள் கழுத்தில் கட்டினபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. 

தாலமாகிய பனை ஓலையில் செய்தது எனப் பொருள்.



தாலி என்பது மஞ்சள் பொருள் கட்டிய கயிறு என்றும் பொருள் கொள்ள முடியும்.

தமிழர் மரபில் மஞ்சளுக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

தாலி “மஞ்சள் இணைக்கப்பட்ட கயிறு கட்டுதல்” என்பது தாலி கட்டுதல் ஆயிற்று என்று வரலாற்று ஆய்வாளா்களில் வேறு சிலா் கூறுகின்றனா். இதெல்லாம் ஆராய்ச்சியில் சொல்லப்படுவைகள் மட்டுமே, அதேநேரம்,

அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி

‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை''' 

விளக்கம் :

“தலை உச்சியில் குடத்தை வைத்துக் கொண்டுள்ள பெண்கள், புது மண்பாண்டம் (உருண்டையான அதற்கு மண்டை என்றே பெயர்.) வைத்திருக்கும் பெண்கள், ஆரவாரமாய்ச் சடங்கு செய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள், என இவர்கள் எல்லாம் ஒவ்வொரு பொருளையும் எடுத்துத் தர, 

பிள்ளை பெற்றெடுத்த நான்கு வாழ்வரசிகள் “அம்மாடி, பெண்ணே, சொல் திறம்பாமல் (சொன்ன சொல் மாறிவிடாதே), எல்லார்க்கும் உதவி செய்து, கொண்டவன் விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்பவளாய் இரு” என்று வாழ்த்தி 

கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது. 

மொத்தத்தில் மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது. பொதுவாக பூ, நெல் சொரிவதோடு,  

திருமணத்திற்கு முன், நெல்லோடு சில தாணியங்களையும் கலந்து முளை விடச் செய்து, அதைப் பாலோடு கலந்தால் அது  முளைப்பாலிகை..!

இந்த முளைப்பாலிகையையும், பாலில் பூவிதழ்களையும் பிய்த்துப் போட்டுதான் மணமக்கள் மேலே சொரிவதற்குப் பயன்படுத்துவார்களாம். ஆக,

இக்காலத்தில் இருப்பதுபோல் அப்போதிருந்தே இல்லை. இடையில் தோன்றிய ஆரிய குப்பைகளே நம்மை அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறது. அதிலும் கிறிஸ்தவா்கள் தாலியை தலையில் தூக்கிவைத்து ஆடுவதுடன், சபை போதகா்கள் அதை பவ்யமாக பயபக்தியுடன் மந்திரித்து(ஜெபித்து) அல்லது ஆசீா்வதித்து தருவது வேடிக்கையிலும் வேடிக்கை.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?