ஜல்லிக்கட்டு போராட்டம்...!
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு, இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டம்.
ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என்று தெரியாதவர்களும், ஜல்லிக்கட்டை ஓரு முறை கூட நேரில் பார்க்காதவர்களும், ஜல்லிக்கட்டின் மேல் ஆவல் இல்லாதவர்களும் கூட ஒரு விதமான உணர்ச்சி வசப்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு வகிக்கிறார்கள்.
ஏன் இந்த காரியம் நடக்கிறது?
உங்களையும் என்னையும் தேவன் இந்த தேசத்திற்கு காவல்காரராக வைத்திருப்பதினாலும், ஆவிக்குரியவன் சகலத்தையும் நிதாணித்து அறியக்கூடியவன் ஆனபடியினாலும்., நாம் யோசிக்க வேண்டும்.
வெளி 13:1-4, வெளி 13:11-18, வெளி 17:8. இந்த வசனங்கள் மூலமாக மிருகங்களை ஜனங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதை அறிந்து கொள்ள முடிகிறது.
தற்போது காளை மாடு, முன்னர் யானை (பிள்ளையார்) இப்படியாக, ஜனங்கள் மிருகத்தை மிருகமாக பார்க்காமல், அதை தெய்வமாக பார்க்கும்படி பிசாசானவன் ஜனங்களின் கண்களை குருடாக்கியிருக்கிறதை நாம் அறிவோம்.
எவ்வளவோ பிரச்சினைகள் வழக்குகள் எழும்பினாலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் ஆர்ப்பரிக்கிறார்களே எப்படி? கிறிஸ்தவர்களான நாம் சிந்திக்க வேண்டும்.
தேசத்தில் குழப்பம், ஜனங்களுக்குள் வெறி,
அதிகாரங்களை எதிர்த்தல், இவை அழிவையே கொண்டு வரும்.
இரட்சிக்கப்பட்டதாகவும் அபிஷேகம் பெற்றதாகவும் சொல்லுகின்ற ஊழியர்களும், விசுவாசிகளும் கூட இந்துக் கோவிலில் காப்புக்கட்டி விரதம் இருந்து கோவிலில் சாமி கும்பிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டுமென தவமாய் தவம் கிடந்து ஆதரவு தெரிவிப்பதையும், இதில் உச்சகட்டமாக கிறிஸ்தவ சபைகளுக்கு முன் விசுவாசிகளுடன் கூடி அரசுக்கு எதிரான போராட்டமே நடத்துவதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.
பீகார் - ல் நீண்ட கொம்புடன் கூடிய காளை முகம் தெய்வமாக வணங்கப்படுகிறது. அதற்கான கோயில்கள் அங்கே அநேகம் இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?
உலக வர்த்தகத்திற்கு symbol ஆக காளையின் சிலை உள்ளது.
உலகத்துடன் இணைந்து கிறிஸ்தவர்களில் பலரும் தேவனை பிரஸ்தாபப்படுத்தாமல் தேவனை மறந்து காளையை பிரஸ்தாபப்படுத்தும்படி பிசாசின் தந்திரம் இது என்பதை நாமே தெரிந்து கொள்ளவில்லையானால் யாரால் இதை புரிந்துகொண்டு ஜெபிக்க முடியும்?
ஒரு மிருகமல்ல தேவனே ஜனங்களை ஆள வேண்டும் என்பதை உணருங்கள்.
மிருகத்தின் பக்கமாக ஜனங்களை திருப்ப செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தந்திரங்களையும் கிரியைகளையும் அழித்துப்போடத் தக்கதாக ஜெபிப்போம்.
தேசத்தில் தேவ சமாதானம் உண்டாக தேவ சமூகத்தில் ஊக்கமாக ஜெபிப்போம்.
ஆமென்
Comments
Post a Comment