தீபாவளி - முன்பு விவேகானந்தருடைய அறிவிப்பை அறியுங்கள்.

தமிழன் கொல்லப்பட்ட நாளை தீபாவளி நாள் என்று
தமிழர்களே கொண்டாடுவதா?

இதை படிக்கும் முன்பு  இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களையே புராணங்களில் இராட்சதா்களாகவும் குரங்குகளாகவும் சித்தரித்தனா் என்ற விவேகானந்தருடைய அறிவிப்பை அறிந்து  கொள்ளுங்கள்.

தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டுவடநாட்டவரைப்  பொறுத்தளவில் (குஜராத்திகள்மார்வாரிகள்தீபாவளி இலக்குமிக்கு உரிய  நாள்அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள்அப்பகுதிகளில் உள்ள  வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான்  தொடங்குகிறார்கள்

வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக்  கொண்டாடுகிறார்கள்இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன்  வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள்

தமிழர்களை பொறுத்தளவில் தீபாவளிநாள் நரகாசுரன் என்ற  அசுரன் கொல்லப்பட்ட நாள்

இது பற்றிய புராணக்கதை நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளைகாமரூப நாட்டின் மன்னன்படைப்புக் கடவுளான பிரம்மாவை  நோக்கி  கடும்  தவம்  செய்து  பல  வரங்களைப்  பெறுகிறான்அதன்பின்  தேவர்களை  அவன்  துன்புறுத்துகிறான்துன்பத்தைப்  பொறுக்க  முடியாத  தேவர்கள்  வைகுண்டத்தில்  திருமாலிடம்  சென்று  முறையிடுகிறார்கள்திருமால்  வழக்கம் போல்  தேவர்களைக்  காக்க  திருவுளம் கொள்கிறார்.

ஆனால், நரகாசுரனைக் கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லைகாரணம்  நரகாசுரமன்  தனது  தாயின்  கையால்  அல்லது  வேறுயாராலும்  கொல்ல  முடியாதபடி  ஏற்கனவே  பிரமாவிடம்  வரம்  வாங்கி  விட்டான்உடனே  காத்தல்  கடவுளான  திருமால்  பெரிய  சதித் திட்டம்  தீட்டுகிறார்தனது  தேர்ச்சாரதியாக  இரண்டாவது  மனைவியான  சத்தியபாமாவை  (பூமாதேவியின் மறுஅவதாரம்அமர்த்துகிறார்நரகாசுரனோடு  நடக்கும்  சண்டையின்  நடுவில்  அம்பு  ஒன்று  அவரைத்  துளைக்கிறதுஉடனே  திருமால்  மூர்ச்சை  போட்டு  விழுந்து  விடுகிறார்உண்மையில் அப்படி அவர் மூர்ச்சை போட்டு விழவில்லைஎல்லாம் நடிப்பு இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே  மூர்ச்சையாகி  இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனை கொன்று விடுகிறார்உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி  ஆசை  என்னஎன்று  சத்தியபாமா  கேட்கிறார். ”எனது  மறைந்த நாளை  மக்கள்  எல்லோரும்  கொண்டாட  வேண்டும்”  என்கிறான்  நரகாசுரன்.

தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு  வழியில்  சூழ்ச்சி  செய்கின்ற  ஒருவரை கடவுள் என்று  அழைக்க  முடியுமாஆனால், புராணிகர்கள்  அப்படித்தான்  ‘பரம்பொருளைச்’  சித்தரித்திருக்கிறார்கள்.


எந்தப்  புராணத்தை  எடுத்துப்  பார்த்தாலும்  இந்த  அசுரர்கள்  தேவர்களைக்  கொடுமை  செய்ததாகவும்;,  தேவர்களை  மீட்கக்  கடவுள்  அவதாரம்  செய்ததாகவும்  சொல்கின்றனஇவையெல்லாம்  அன்றைய  ஆரிய – திராவிட  இனங்களுக்கு  இடையிலான  போரையே  குறிக்கும்.

சுரர்  என்றால்  குடிப்பவர்  என்று  பொருள்அசுரர்  என்றால்  குடியாதவர் என்று பொருள்ஆரியர்  சோமபானம்  குடித்ததாக  இருக்கு  வேதம்  சொல்கிறதுசோமச்  செடியை  தெய்வமாகமே  கும்பிட்டார்கள்வேள்வி  செய்து  அதில்  குதிரைமாடுஆடுஉடும்பு  போன்றவற்றை  வேக வைத்து  அதனை  ஆரியர்கள்  ‘அவிர்ப்பாகம்’  என்று  சொல்லி  உண்டு  மகிழ்ந்தார்கள். ஆனால்,  சோமபானம்சுரபானம்  குடித்த  ஆரியர்  உயர்ந்தவர்களாகச்  சித்தரிக்கப்பட்டார்கள்குதிரைமாடு  இவற்றைக்  கொன்று  சாப்பிட்டவர்கள்  தேவர்கள்  என்று  அழைக்கப்பட்டார்கள்.

அவற்றை  அன்புஅருள்காருண்யம்ஒழுக்கம்  காரணமாக  வெறுத்து  ஒதுக்கியவர்கள்  அசுரர்கள்  என்று  இழித்துரைக்கப்  பட்டார்கள்.

மகாவிட்ணுவின்  அவதாரங்களுள்  பரசுராமன்  அவதாரம்  என்பது  முழுக்க  முழுக்க  அசுரர்களை  கொன்றொழித்த  கதைதான்பூலோகத்தில்  அசுரர்கள்  செய்துவரும்  கொடுமைகளினால்  பூமிதேவி  பாரம்  தாங்க  முடியாமல்  தனது  கணவன்  விட்ணுவிடம்  முறையிட்டாள்.

உடனே  “பூமியில்  அவதாரம்  செய்து  பூமி பாரத்தைத்  தீர்த்து  வைப்பேன்” என்று  கூறி  தக்னி  முனிவருக்கும்  அவரது  பத்தினி  ரேணுகைக்கும்  பரசுராமனாகப்  பிறக்கிறார்  விட்ணு.

தந்தை  கட்டளைப்படி  பரசுராமன்  தனது  தாயையும்  உடன்பிறந்த  சகோதரனையும்  கொன்று  பெரிய  ‘வீரன்”  என்று  பெயர்  எடுக்கிறான்.   காமதேனு  என்னும்  பசுவை  கார்த்தவீரியார்ச்சுனன்  என்னும்  அரசன்  கவர்ந்து  செல்கிறான்அதைச்  சாக்கிட்டு  அந்த  அரசனையும்  பூலோகத்தில்  இருந்த  சத்திரியர்களையும்  (அசுரர்களைஒரு  காலத்திலும்  தலைதூக்காதபடி  கோடரியால்  வெட்டிக் கொன்று  பூமிபாரத்தைத்  தீர்த்தான்.

தாயைக்  கொன்றவன்உடன்பிறப்பைக்  கொன்றவன்அசுரர்களைக்  கொன்றவன்  எப்படி  கடவுள்  அவதாரமாக  இருக்க  முடியும்இந்த  அவதாரத்திடம்  இருந்து  பக்தர்கள்  கற்றுக்  கொள்ளும்  பாடம்  என்னயாரோஒரு  அரசன்  தவறு  செய்தான்  என்பதற்காக  எல்லா  அரசர்களையும்  பூண்டோடு  அழிப்பது  எந்தவகை  தர்மம்

பூலோகத்தில்  அரசனாக  ஆண்டவர்கள்  எல்லாம்  அசுரர்கள்  என்பதுதான்  இதற்குக்  காரணமா?

இராம  –  இராவண  யுத்தம்  ஆரிய  –  திராவிடர்  இருசாராருக்கும்  இடையிலான  மோதல்தான்இப்படி  நேருதான்  எழுதிய  Discovery of India  என்ற  நூலில்  தெளிவாகக்  குறிப்பிட்டுள்ளார்.

இராமன்  அரக்கர்களைக்  கொல்லுவதற்கென்றே  காட்டிற்கு  வந்ததாகவும்  அரக்கர்களைக்  கொன்று  ஒழிப்பதாக  வாக்குக்  கொடுத்து  விட்டுக்  காட்டிற்கு  வந்ததாவும்  சொல்கிறான். (ஆரண்ய  காண்டம், 10வது சருக்கம்).

தீபாவளிப்  பண்டிகை  தமிழர்க்கு  உரியது  அன்றுதீபாவளிப்  பண்டிகை  புராண  மதத்தைச்  சார்ந்ததுஅசுரர்  கொலைக்காக  தமிழர்  மகிழ்ச்சி  அடைதல்  நன்று  அன்று”  என்று  தமிழ்ப்  பெரும் புலவர்பேராசிரியர்  சைவப்  பெரியார்  கா.சுப்பிரமணிய(ன்பிள்ளை  தாமெழுதிய  ‘தமிழர்  சமயம்’  என்ற  நூலில்  குறிப்பிடுகிறார்.

தீபாவளி  என்பது  வடநாட்டு  மார்வாரிகளும்குஜராத்திகளும்  கொண்டாடும்  புதுக்கணக்கு  புத்தாண்டுப்  பிறப்பு  விழா.

தீபாவளிக்கும்  தமிழர்க்கும்தீபாவளிக்கும்  தமிழ்  இலக்கியத்திற்கும்  யாதொரு  சம்பந்தமும் இல்லை”  எனப்  பேராசிரியர்  சைவப் பெரியார்  .கிபரந்தாமனார்  தாமெழுதிய  “மதுரை  நாயக்க மன்னர்  கால  வரலாறு”  என்னும்  நூலில்  மிகத்  தெளிவாக  விளக்கியிருக்கிறார்.

தீபாவளி  சமணசமயப்  பண்டிகைபாவாபுரி  நகரிலே  அறிவுரை  வழங்கிக்  கொண்டிருந்த  வர்த்தமான  மகாவீரர்  இறந்த  விடியற்கால  தினமே  தீபாவளியாகும்.  தீபாவளி  பற்றிய  வரலாற்றுக்கும்  நரகாசுரன்  புராணக்கதைக்கும்  யாதொரு  தொடர்பும்  இல்லைதீபாவளி  என்பதன்  பொருள் விளக்கு  வரிசை”  ( தீபம்  –  விளக்குஆவலி –  வரிசை )  என்று  அறிஞர்  மயிலை  சீனி  வேங்கடசாமி  எழுதிய  “சமணமும் தமிழும்”  என்ற  நூலில்  குறிப்பிடுகிறார்.

ஆரியப்  பார்ப்பனர்கள்  கட்டுவித்த  கற்பனைக்  கதையே  தீபாவளி”  என்று  சைவத்  தமிழ்  பெரியார்  மறைமலை  அடிகள்  தான்  எழுதிய  “தமிழர் மதம்”  என்ற  நூலில்  எழுதியுள்ளார்

மேலும்  அவர் –  “ஆரியரின்  இந்தகைய  வெறியாட்டு  வேள்விகளை  அழித்து வந்த  சூரன்- இராவணனன்  முதலான  நிகரற்த  தமிழ்  வேந்தர்களேஆரியர்களால்  அரக்கர்  என்று  இகழ்ந்து  பேசப்படுவராயினர்”  (வேளாளர்  நாகரிகம் –  பக்கம் 60)

மறைமலை  அடிகள்  தமிழர்அதிலும்  தனித்  தமிழ்  வெறியர்  அவர்  அப்படித்தான்  எழுதுவார்என்று  சிலர்  சொல்லக்  கூடும்அவர்களுக்காக  இதோ  இராமகிருஷ்ண  பரமகம்சரின்  சீடர்  சுவாமி  விவேகானந்தர்  சொல்லியிருப்பதைத்  தருகிறேன்  படியுங்கள்.

தென்னிந்தியாவில்  இருந்த  மக்களே  இராமாயாணத்தில்  குரங்குகள்  என்றும்அரக்கர்கள்  என்றும்  அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.  (இராமாயணச்  சொற்பொழிவுகளும்கட்டுரைகளும்  பக்கம் 587-589)

இவ்வாறு  நடைமுறை  உண்மைக்கும்  வாழ்வியல்  நடைமுறைக்கும்  ஒத்துவராதமுரண்பட்டு  இருக்கிற  பொய்களைகலையுரைத்த  கற்பனைகளை  எல்லாம்  மதத்தின்  பெயராலும்  கடவுளின்  பெயராலும்  தமிழர்களைத்  தாழ்வுபடுத்தும்  

இந்தத்  தீபாவளியை  இன்னும்  எத்தனை  காலத்துக்குத்  தமிழர்கள்  செக்குமாடுகள்  போல்  கொண்டாடிக்  கொண்டு  இருக்கப்  போகிறார்கள்?

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?