கா்த்தர் நிமித்தம் வெற்றி எனக்கு எட்டும் தூரத்தில்..!


கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதர, சகோதரிகளை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

இங்கு சில உண்மைகளை எழுத வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளபோதும் அதற்குமுன்  சில நிகழ்வுகளை நான் எழுத வேண்டியது அவசியம் என்பதால், எழுதுகிறேன். நடுநிலையாளா்கள் இதை பொருமையுடன் படிக்கும்படி கிறிஸ்துவினிமித்தம் தாழ்மையுடன் கேட்கிறேன்.

குறிப்பிட்டுச் சொல்லுங்கள் 
நான் ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டர்.

இணையத்தில் நான் பிரவேசித்த ஆரம்ப நாட்களில், எல்லாம் சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது அப்போது பொன்னுதுரை ஜோசப் என்பவா்  ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதில்,

C.S.I சபையின் குருவானவா்  தாமிரபரணி ஆற்றில் ஒரு பெண்ணுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது போன்று இருந்தது.
அதைக்கண்ட நான் பரவாயில்லையே..! சிஎஸ்ஐ சபையினரும் ஆவிக்குரிய சபைகளைப்போன்று முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்களே ? !! என்று Comment செய்தேன்.

அதில் ஆத்திரப்பட்ட பொன்னுதுரை ஜோசப் அவா்கள் ஆவிக்குரிய சபைகளைக் குறித்து எனக்குத் தெரியாதா? என்று ஆரம்பித்து ஆத்திரத்தில் மிக ஆபாசமாக கோபமாக எழுதி தள்ளினார்.
நான் கேட்டேன் யாரையாவது குறிப்பிட்டுச் சொல்லுங்கள். என்றேன் விவாதம் கடந்தது. கடைசியில் என்னை Block செய்தார்.

நட்புக்காக  “கவரிங் மோதிரம்”  

சகோ. பொன்னுதுரை ஜோசப்பும், சகோ. விஜயகுமார் அவா்களும் நல்லதொரு நண்பா்கள்.

சகோ. விஜயகுமார். அவா்கள், “கவரிங் மோதிரம்” என்ற என்ற அருமையானதொரு பதிவை பதிவிட்டார்  அதன்கீழ் அந்த பதிவை பாராட்டி ஒரு Comment இட்டேன். அப்போது அவா் சகோ. பொன்னுதுரையுடன் போராடும்போது எழுதிய ஒரு Comment ஐ சுட்டிக் காண்பித்து வருந்தினார். அப்போது அதற்கான நியாயத்தை நான் எடுத்துச் சொன்னபோது அவருடைய நண்பா்கள் வளைந்து என்னை வாட்டினா். நான் போராடினேன். Block செய்தார். இப்போதும் நான் அவரை நேசிக்கிறேன். அவரது எழுத்து அருமை.

சம்பந்தமில்லாத சில்சாம் - இவா் ஒரு அதிசய மனிதா்.

சகோ. விஜயகுமார் உட்பட வாட்ச்மேன் குழுவினரிடம் நல்ல பெயா் எடுப்பதற்காகவே அவா்களிடம் அனுமதி வாங்காமலேயே என்னை கடிக்கப் பாய்ந்து வந்தவர். அடி வாங்கிப் போனார் என்பதை அனைவரும் அறிவா். என்றாலும்,

எனது மன்னிக்கின்ற மனப்பக்குவம் அறிந்த என் நண்பா்களின் இணைப்புக்கான வேண்டுகோளின் நிமித்தம் ChillSam என்ற சாமுவேல் சா்ச்சிலை நான் ஊழியம் செய்கிறதான பகுதிகளில் அழைத்துப் பயண்படுத்தினேன். நல்ல உறவு நீடித்தது. இப்போதும் உபதேசக் காரணங்களால்  அவரை விட்டு சற்றே விலகி நிற்கிறேன். அவரும் வழக்கம் போல எனக்கு எதிரானவா்களின் கூடாரத்தில் இணைந்து செயல்பட தொடங்கியிருப்பதை அறிந்தேன்.

இவருடன் பல மாதங்கள் நான் போராடினபோது அநேகா் என் மீது வருத்தம் கொண்டதுண்டு என்றாலும் மறைவாயிருந்த அவரை வெளி உலகிற்கு கொண்டு வந்ததே எனது மகிழ்ச்சியாயிருந்தது.

மறைவிலிருந்து வெளி வந்தபோது அவரது எழுத்து நடையே மாறிவிட்டதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.க்கிறது..!

இலாபம் தேடும் லூா்துராஜ் – முறிந்த வரலாறு.

திருமணத் தகவல் மையம் நடத்தி உபதேச வேறுபாடு உள்ள ஆட்களிடம் சா்ச்சையில் சிக்கினபோது இவா் தன்னை ஒரு பாஸ்டா் என்று அறிவித்திருந்தபடியினாலே லூர்துராஜை காப்பாற்ற திருமணத் தகவல் மையம் சபைக்கு ஏன் அவசியம்? என்று எழுதி போராடினேன். அப்போதுதான்,

ஆவிக்குரிய சபையினரை ஒருங்கிணைத்து ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்பட்டபோது, பாஸ்டா்களை மிரட்டி பணம் பறித்த சாணக்யனுடனே இணைந்து சோரம் போனார். அது முடிந்த கதை அவருடைய பரிதாபநிலை கண்டு அவருடன் ஒரு கூட்டம் கூடியது.

மீடியா குறித்த எச்சரிப்பு அது எப்போதும் பரபரப்பு..!

இதற்கிடையில் ஏஞ்சல் டி.வி யின் சாது, நக்கீரன் புகழ் வின்சென்ட் செல்வகுமார், விக்கிரஹ அறிமுக நாயகன் மோகன் சி லாசரஸ் கல்வி வியாபாரி அண்ணன் பால் போன்றோரையும் வேதத்திற்க்கு புறம்பான  அவா்கள் செயல்களின் நிமித்தம் கண்டித்திருக்கிறேன். அவா்களும் அவா்களது ஆதரவாளா்களும் கூட எம்மை எப்போதும் எதிர்த்துதான் நிற்பார்கள். என்பதை நன்கு அறிவேன்.

மூடப் பழக்க வழக்கங்களுக்கு முடிவு கட்டு.

ஜோசியம், ஜாதகம், பெயா் பொருத்தம், முகூா்த்தம், வாஸ்து பார்க்குதல் நல்ல மற்றும் கெட்ட நேரம் போன்ற மூடப்பழக்க வழக்கங்களையும் நான் எதிர்க்கிறேன். இதெல்லாவற்றையும் விட

டையை எதிர்த்தால் மாறும் முகநாடி

தலைக்குசாயம் அடித்து நிறம் மாற்றுகிற பழக்க வழக்கங்களையும் வன்மையாகக் கன்டித்திருக்கிறேன். இது அநேக பாஸ்டா்களுக்கு பிடிக்காது ஏனென்றால் அநேகா் டையால்தான் அடைகிறார்கள். இதை செய்கிற இவா்களுக்கெல்லாம் என்னைப் பிடிக்கவா செய்யும்.?!

பணம், பொருள் காரியத்தில் எனது அறிவிப்பு.
என்னை யாருக்கும் பிடிக்காது.
ஊழியத்தை துவக்கின நாள் முதல்.. 
தசமபாகம் தரவேண்டுமென போதிப்பதில்லை.
வெளிநாடுகளில் இருந்து உதவி பெறவில்லை.
நகைகளை கழற்றி காணிக்கைப் பெட்டியில் போடு எனச்சொல்வதில்லை.
சபையின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கென காணிக்கைகள்      மற்றும்  நன்கொடைகள் வசூலிப்பதில்லை.

பாடல்தாள், பாடல்புத்தகம், காலாண்டர், போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்யாமல் இலவசமாகவே விநியோகிக்கிறோம்.
சிறுமைப் பட்டவர்கள் மேல் சிந்தை உள்ளவர்களாக மருத்துவ மற்றும் குடும்ப பராமரிப்புகளுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்கிறோம்.
எங்கள் சபையில் நானோ மற்ற எவருமோ காணிக்கை பிரசங்கம் செய்ததில்லை.
எமதுசபையின் விளம்பரங்களிலோ வெளியீடுகளிலோ இணையதளத்திலோ காணிக்கை அனுப்பச் சொல்லும்படியான எவ்வித வாசகங்களும் இல்லை.

இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் தேவனுடைய சரீரமான சபையின் தேவையறிந்து உதாரத்துவமாகக் கொடுத்து சபையைத் தாங்குகிறார்கள்.
எமது சபையின் வரவு-செலவு கணக்குகளை சபை மூப்பர்கள் விசுவாசிகள் ஏற்க முன்வருவதில்லை. தேவனுக்கும் சபையில் உள்ளவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விரோதமாக இங்கு எதுவும் நடைபெறவில்லை.
தனிமையில் வீடு சந்திக்கப் போகிறதில்லை. அச்சமயங்களில் எங்கும் காணிக்கை வாங்குகிறதில்லை.

தனிமனித ஒழுக்கத்தில் நான் தவறினதில்லை அதற்கு என்னுடைய மனைவியும் எமது சபையும் விசுவாசிகளல்லாத மற்றவர்களும் அறிவர். நான் ஊழியம் செய்யும் பகுதி பட்டணம் அல்ல. கிராமம்.

எவ்விதத்திலும் எங்கும் சாபமான வார்த்தைகளால் மிரட்டுவதில்லை. துதிக்கிற எங்கள் வாயிலிருந்து சாபம் புறப்படுவதில்லை. தவறுதலை மீறுதலை எல்லைதாண்டிய கண்டனக்குரலை கண்டிக்க எப்போதுமே தயங்கியதில்லை. காரணம் இது வன்முறையில்லை. விதிமுறை.


நான் மேலே வரிசைப்படுத்தியவைகளை எமது சபையில் உள்ள விசுவாசிகள் பார்வையிட்ட பின்பே, எனது முகப்புத்தகத்திலும், இணையதளத்திலும் வெளியிடுகிறேன். கர்த்தர் என்னை இதுவரை நன்றாக நடத்தி வருகிறார்(காணிக்கை சம்பந்தமான அறிவிப்பு ஊழியத்தின் ஆரம்ப பதிப்பு) என்பதால்,

பொருளாசையுடன் ஊழியம் செய்வோர் என்னை இதனிமித்தமாகவே கன்டனம் செய்த சம்பவங்கள்  நிறைய உண்டு. 

இப்படியாக என்னை பெரும்பாலும் யாருக்குமே பிடிக்காது.


இஸ்லாமியா் மத்தியில் நான்…, எனது பயணம்.

இஸ்லாமியருக்கான எனது ஊழியம் புதிதல்ல..! இணையத்தில் நான் நுழைவதற்கு முன்பே இதை செய்து வருகிறேன். இருந்தாலும், இங்கே வந்தபின் தொடரவும் பலரை தொடா்பு கொள்ளவும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
நான் அறிந்ததை, கற்றதைக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

நினைவுபடுத்திப் பாருங்கள்.

“பூமி தட்டை என குரான் சொல்லுகிறது இது விஞ்ஞானத்திற்கு புறம்பானது ” என்றதான தலைப்பில் குரான் இறைவேதமா? குழுமத்தில் நான் பதிவிட்ட விவாதம் 1438 Comment களை கடந்தபோதும் இஸ்லாமியா்களால் முறையான பதிலளிக்க முடியாது இருந்தது நினைவுக்கு வரும். அதுமட்டுமல்ல,

பல்வேறு பதிவுகளில் அழுத்தமாக கால் ஊன்றி என்னை நிற்கப்பண்ணினது.

குரான் இறைவேதமா? என்ற தலைப்பில் இஸ்லாமியருடனான நேரடி விவாதத்தில் விவாதிப்பதற்காக பணம் செலவழித்து சில ஊழியா்களையும் அழைத்துக் கொண்டு சென்னை விரைந்தபோது, இஸ்லாமியருடனான விவாதத்தில் தங்களை முன்னிருத்தும் ஆட்களால் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டேன். அதுகூட கிறிஸ்தவ பெயா் தாங்கி நண்பா்களின் சதி செயலாகவே தற்போது புரிகிறது.

அத்துடன் நான், சகோ.வெங்கடேசன், சகோ.பாத்திமா எஸ்தர், உட்பட 5 கிறிஸ்தவா்களும், அதேபோன்று இஸ்லாமியா்  தரப்பிலும் 5போ் கூடினோம் எங்களுக்குள் விவாத ஓப்பந்தம் செய்துகொண்டு,

“சிலுவை பலி” என்ற தலைப்பில் நடந்த விவாதம் செய்தோம். 

இதெல்லாம் எனது எழுத்தாற்றலை அழுத்தமாக பதிவு செய்யப் போதுமானதாக இருந்தது. திறமை உள்ளவா்கள் முந்திச் சொல்லக் கூடாத வகையில் காலை வாரிவிடும் கள்ளா்கள் முன்னணியில் இருப்பதாலேயே குரான் இறைவேதமா? குழுமம் கலைக்கப்பட்டிருப்பதை அறியும்போது அது வேதனையாகத்தான் இருக்கிறது.

தேவனைத் தவிர யாருடைய அங்கீகாரத்தையும் நான் தேடாமல் இருந்தபோதும் சின்னதும் பெரிதுமாக எமக்கு எதிா்ப்புகள் ஏராளம் எதிாப்பட்டது என்பதை வருத்தமுடன் அறிவிக்கிறேன்.  

எதிரிகளின் கனைகளை தைரியமாக எதிர்கொண்ட நான், துரோகிகளின்  துரோகச் செயல்களால் துவண்டு நிற்பது உண்மைதான்...! என்றாலும், வலிந்து எழுவேன். துணிந்து செல்வேன். தைரியமாக போராடுவேன். ஏனெனில்,


கா்த்தர் நிமித்தம் வெற்றி எனக்கு எட்டும் தூரத்தில்..!


                                                                     தேவனுக்கே மகிமை.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?