அவர்: கர்த்தர். கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன். யாத் 34: 6 ...நீரே தேவன். உம்முடைய வார்த்தைகள் சத்தியம் 2 சாமு 7: 28 என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ? யோபு 6: 30 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோம 12: 2 தேவனை அறிந்தவர்களும், கண்கள் திறக்கப்பட்டவர்களும், சத்தியத்தை உணர்ந்தவர்களும், யதார்த்தத்தைப் புரிந்தவர்களும், பகுத்திவுள்ளவர்களும் கர்த்தருக்காக கடைசிவரை நம்முடன் இணைந்து வருவார்கள்.