"தோற்பதற்கு அல்ல ஜெயிப்பதற்கு"

கிறிஸ்து இயேசுவினால் எனக்குப் பிரியமானவர்களே.. வாழ்த்துகிறேன். 

நாம் எல்லாரும் ஆதாமுடைய சந்ததியில் வந்தவர்களேயானாலும், நாம் எல்லாரும், ஆதாம் அல்ல. என்பது இந்த பிசாசுவுக்குத் தெரிவதில்லை. எனவேதான் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை இந்த ஏமாற்றுக்காரன் பல்வேறு வழிகளில் வஞ்சிக்கத் துடிக்கிறான்.

அவன் தேவனுடைய ஜனத்திற்கெதிராக தானாகவும் தமது சீஷர்கள் மூலமாகவும் பல்வேறு யுத்த தந்திரங்களைப் பயண்படுத்துகிறான். அவைகள் முக்கியமான மூன்று. அவையாவன..,
1.கண்களின் இச்சை, 
2.மாம்சத்தின் இச்சை, 
3.ஜீவனத்தின் பெருமை.

   இந்த ஆயுதங்களை அவன் முதன்முதலில் ஆதாமிடமும், பின்னர், அநேகரிடமும், உச்சக்கட்டமாக நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவிடமும், பயண்படுத்திப் பார்த்தான். என்ற.., செய்திகளையெல்லாம் நாம் எப்போதும், நினைவில் நிறுத்திக்கொள்வது நல்லது.

"இயேசுவானவர் தேவனுடைய வார்த்தை" என்பதை நாம் நன்கு அறிவோம். என்றாலும் அவர் சோதனைக்காரனால் சோதிக்கப்பட வேண்டிய நிலை வந்தபோது.. இயேசு கிறிஸ்துவினிடத்தில் சாத்தானானவன் தேவனுடைய வார்த்தைகளை பயண்படுத்தியே வஞ்சிக்கப் பார்த்தான் நீங்களும் நானும் எம்மாத்திரம்.

இந்த சம்பவத்தின் மூலமாக கர்த்தர் நமக்கு ஞானமுள்ள எச்சரிப்பை கொடுக்கிறார்.  என்னவென்றால்..? 

சாத்தானும், அவனது தூதர்களும், சீடர்களும் நம்மை முகமுகமாய் எதிர்கொண்டு வஞ்சிக்க வேண்டுமென்றில்லை.

கஷ்ட நஷ்டங்கள், வியாதிகள், வறுமைகள் மூலமாகவும், நம்மை மேற்கொள்ள முடியாமல் போகலாம்.

எந்தச் சூழலிலும் நாம் உறுதியுள்ளவர்களாக இருக்கலாம். நீங்கள் அறிந்துள்ள கர்த்தருடைய வார்த்தைகளில் உறுதியாக இருந்து சின்ன சின்ன சோதனைகளிலே ஜெயித்து மகிழ்ச்சியடையலாம். என்றாலும், உங்கள் வெற்றியினிமித்தம் சாத்தானாவன் மகிழ்ச்சியடைவதில்லை. மாறாக,

தனக்கு கொஞ்ச காலமே உண்டு என வேகமெடுக்கிறான். அப்படி அவன் பயப்படுகிறதினாலே.... அவன் வேறுபல உத்திகளையும் பயண்படுத்துகிறான்.  அதுதான் "கர்த்தருடைய வார்த்தை"

பிரசங்கங்களும், தேவனுடைய வார்த்தைகளும், கடைசிகால செய்திகளும் இரண்டாம் வருகையின் எச்சரிப்புகளும் தங்குதடையின்றி அனைத்து இடங்களிலும் பல்வேறுவிதமாக பிரங்கிக்கப்படுகிற இந்த நாட்களிலே அதே பிரசங்கங்கள் வழியாகவே சத்துருவானவனும் உங்களை வஞ்சித்துவிட முடியும்.

எச்சரிக்கையாயிருங்கள். 
  எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துப்பாருங்கள். 
    உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பாக, 

சத்துருவானவன் எப்பொழுதுமே.., வாசல் வழியாக வருவதில்லை. 
பக்க வழியாகவே வருகிறான். 

சபைக்கும் மேய்ப்பருக்கும் சபை மூப்பர்களுக்கும் அறியாதவாறு, பக்க வழியாய் டி.வியின் வழியாய்,













போன்றவையும், இன்னும் பல.....,
இணையதளத்தின் வழியாக, உங்களை அவன் ஆக்கிரமிக்க முடியும். அழிவுக்கு நேராய் நடத்திவிட முடியும் எனவே எச்சரிக்கையரயிருங்கள். 

நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டீர்கள். 
"தோற்பதற்கு அல்ல ஜெயிப்பதற்கு"

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?