பிரியமானவர்களே..,சோதித்தறியுங்கள்

கோல்டா அவர்களுக்கு காலை வணக்கம்.

பரிசுத்த வேதாகமத்தை நான்கு பிரிவுகளாக பிரித்துக் கொண்டு படியுங்கள் அப்பொழுது உங்களுக்கும் அநேக விஷயங்கள் புரியும்;.
பழைய உடண்படிக்கையினால் தேவ ஜனங்களானவர்களைப் போல அல்ல நாம்…

புதிய உடண்படிக்கைக்கு உட்பட்டு அவருடைய  பிள்ளைகளாக  காணப்படுகின்ற நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக பல்வேறு சிறப்பான தகுதியை பெற்றிருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் தேவனை பரியாசம் பண்ணக்கூடாது.

உதாரணமாக சில வசனங்கள்:-

லூக் 6: 43. நல்ல மரமானது கெட்ட கனிகொடாது, கெட்ட மரமானது நல்ல கனிகொடாது.

மத் 12 :33 ….. மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

இங்கே மரமென்கிற பதம் மனிதனை குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிது என்பது உங்களுக்குத் தெரியும்.

அப்படியானால் மனிதனுடைய கிரியைகளை வைத்து அவனை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு ஜெபம் என்ற போர்வையில் அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்@ அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். (மத் 6: 7 )

ஒருவேளை “இந்த ஏஞ்சல் டிவி உமது சித்தப்படி ஆரம்பித்த டிவி தானா? அதில் வரும் செய்திகள் சரிதானா? எனக்குக் காட்டுங்க சொல்லுங்க ஆண்டவரே என்று உண்மையா சின்சியரா ஒரு ஜெபம் செய்ங்க. ஆண்டவர் கண்டிப்பாக காட்டி உங்க சந்தேகத்தைத் தீர்ப்பார். “  என்ற உங்களது ஆலோசனையை கேட்டு எவராவது அப்படி ஜெபிக்கும்படி அமர்ந்தால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அல்லது சத்தம் கேட்டது போன்ற உணர்வு ஏற்படும். 
சாதமாகவோ.., பாதகமாகவோ ஒரு பதில் கிடைக்கலாம். ஆனால் கண்டிப்பாக அது உண்மையில்லை. அந்த பதில் தேவனிடத்திலிருந்து வந்ததாக இருக்காது.   ஆவியானவர் சொல்லுகிறார்.

எபே 5: 10. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
11. கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

1தெச 5: 21. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
நாம் சோதித்துப் பார்ப்பதற்கான சிறப்பு அனுமதியை கர்த்தரால் பெற்றிருக்கிறோம்.

இங்கே என்னுடைய அனுபவத்திலிருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

2005 என்று நினைக்கிறேன் ஒருநாள் காலையில் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்ட நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். பேசிக்கொண்டிருக்கையில் என் மேஜையின் மீதிருந்த ஒரு மாதாந்திர கிறிஸ்தவ பத்திரிக்கையை கவனித்தேன்.

பத்திக்கையின் அட்டைபடத்தில் ஒரு விசித்திரத்தைக் கண்டேன். நான் நண்பருடன் பேசி முடித்தவுடன் அந்த பத்திரிக்கையிலிருந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டபோது அந்த ஊழியரின் துணைவியார் தொலைபேசியை எடுத்தார்கள். அவர்களும் நல்ல ஊழியம் செய்கிறவர்கள் பல்வேறு கூட்டங்களில் பிரசங்கம் பண்ணக்கூடியவர்கள். எனவே அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவிட்டு
ஐயா இல்லையா? உங்க மாதப்த்திரிக்கையைப் பார்த்தேன் ஒரு சந்தேகம்….!? கேட்கவேண்டுமெனச் சொன்னேன். என்ன சந்தேகம் பிரதர்? னாங்க அம்மா உங்க பத்திரிக்கையை பார்த்தேன் அதில் உங்க ஊழியத்தின் பெயருக்கு அந்த பக்கமும் இந்த பக்கமுமாக இரண்டு படம் போட்ருக்கீங்க அதுல ஒன்னு உங்க ஊழியத்தோட இலச்சினை அதாவது சின்னம் இன்னொருபக்கம் தாடியும்மீசையுமா தலையில நீளமாட்டு முடி வளர்த்திருக்கிற ஒருவருடைய படத்த போட்ருக்கீங்களே அது யாருன்னேன். அவுங்க சிறிது தயங்கி தயங்கி சொன்னாங்க அதுவா..? அது இயேசுசாமி படம்.
நான் கேட்டேன் இவர் எந்த இயேசு?
அவுங்க சொன்னாங்க நம்ம பைபிள்ல இருக்கிற இயேசுதாங்க..
நான் கேட்டேன் இவர் பைபிளில் காணப்படும் இயேசு என்றால் இது எப்போது எடுத்த படம்? அதாவது இந்தப்படம்

1.    30 வருடங்கள் நாசரேத்து ஊரில் வளர்ந்தபோது எடுத்ததா? அல்லது
2.    30ம் வயதில் யோர்தான் நதிக்ரையில் நின்றபோது எடுமுத்ததா? அல்லது
3.    ஊழியம் செய்த நாட்களில் கலிலேயாவிலிருந்து பெத்தாணியா போனபோதா?
4.    எரிகோவிலிருந்து எருசலேம் போன போதா? பெதஸ்தா குளக்கரையிலா? அல்லது
5.    பிடிக்கப்பட்டபோதா? விசாரிக்கப்பட்டபோதா? அடிக்கப்பட்டபோதா? அல்லது
6.    உயிர்த்தெழுந்த பின்பா? எனக் கேட்டேன்

அந்த சகோதரி சொன்னார்கள் பிரதர்கிட்ட கொடுக்கிறேன்னுட்டு அந்த சகோரரர்கிட்ட அதாவது அவுங்க கனவர்கிட்ட தொலைபேசியை கொடுத்திட்டாங்க..!
சகோதரர் லைனில் வந்தார்.
பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டோம். அதேமுன்னுரை… அதேகேள்வி... அதற்கவருடைய பதில் : “கேள்வி கேட்ருக்கீங்க இல்லையா இயேசப்பாகிட்ட ஜெபிப்போம். இயேசப்பாக்கிட்ட கேட்போம். இயேசப்பா நமக்கு பதில் தருவாங்க..
எனக்கு ரொம்ப ஆச்சர்யம்….!? அதனால கேட்டேன் அப்படீன்னா நீங்க இயேசப்பாக்கிட்ட ஜெபம்பண்ணிக் கேட்டுட்டு இந்தப் படத்த போடலியா? ன்னேன்.
அதற்கு அந்த ஐயா சொன்னாங்க சரி இப்பதான கேட்ருக்கீங்க ஜெபிப்போம் பிரதர். இயேசப்பாக்கிட்ட கேட்போம் சரியா? இயேசப்பா சொல்லுவாங்க..!
நான் சொன்னேன். சரி ஜெபம் பண்ணுங்கள் நீங்கள்லாம் ஜெபம்பண்ண ஆரம்பிச்ச உடனே இயேசப்பா உங்ககிட்ட வந்து பேசுவாங்க. ஜெபம்பண்ணிக் கேட்டுட்டு அடுத்த மாசப்பத்திரிக்கையில ஒரு கட்டம்கட்டி நம்முடைய உரையாடலயும் போட்டு அதுக்கு இயேசப்பா சொன்ன பதிலயும் போடுங்க. அப்படியில்லைன்னா யாரோ ஒருவர் கேள்வி எழுப்பினாரென்று எழுதுங்கள். எப்படியாச்சும் பதில் போடுங்கய்யா என்றேன் சரி என்றார்.
ஒரு வேளை இயேசப்பாக்கிட்ட இந்த ஐயா பேசி கரெக்டா சொல்லீட்டா நம்மிடம் எவனாவது இப்படி முட்டாள்தனமா கேள்வி கேள்வி கேட்டா டாண் டாண்னு பதில் சொல்லலாமுல்லன்னு சந்தோஷப்பட்டேங்க நான் ஆவலோடு எதிர்பார்த்த அடுத்த மாதமும் வந்தது. பத்திரிக்கையும் வந்தது.
மிகவும் ஆவலாக புத்தகத்த எடுத்து ஜாக்கிரதையுடன் ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்தேன் கட்டத்தையும் காணம் பெட்டி செய்தியும் காணோம். மீண்டும் மீண்டும் புரட்டினேன். அப்படி ஒரு செய்தியையே காணோம் சலிப்புற்றவனாக புத்தகத்தை மூடி மேசையில் போட்டேன். அட்டையை பார்த்தேன் அந்த படத்தையேக் காணோம்.
அதாங்க என் கேள்விக்கு காரணமான தாடியும் நீள தலைமுடியும் கொண்ட நபருடைய படத்தைக்காணோம். இன்றுவரை அந்தப் படம் அவருடைய பத்திரிக்கையில் வருவதில்லை.
என்ன காரணம்? சிந்iயில் சரியாக இருப்பவர்களும் சிந்திக்கத் தெரிந்தவர்களும் இந்த சம்பவத்தின் உள்ளே இருக்கும் செய்தியை புரிந்து கொண்டிருப்பீர்களென நினைக்கிறேன்.
இங்கே ஒரு உண்மையை சொல்கிறேன் இந்த சமபவத்தில் வரும் தேவ ஊழியர் பிறருடைய பத்திரிக்கையில் வருகிற படமாக இருப்பதனாலே அவரும் அதைப் பின்பற்றி அதே படத்தை தனது பத்திரிக்கையிலும் வெளியிட்டு விட்டார். உண்மையை உணர்ந்தபோது அந்த தவறை திருத்திக் கொண்டார். ஆனால் தவறை எல்லாரும் அறிகிற விதத்தில் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆனால்..

இன்னும் எத்தனை எத்தனை அப்பாவிகளான ஊழியர்கள் தாங்கள் ஏமாறுவது மடடுமல்ல எத்தனையோ பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1யோவா 4: 1

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?