Posts

Showing posts from November, 2011

கிறிஸ்தவரல்லாத ஒரு இந்து அரசியல்வாதியுடன்....,

Image
" கிறிஸ்தவ சபைகளின் உள்பிரச்சனை " - " ஒரு இந்து அரசியல்வாதியுடன் தொடர்பு..... " "இந்து அரசியல்வாதியுடன் தொடர்புவைக்கும்வரை  திருநெல்வேலி  டையோசிஸ்ஸானாலும் சரி,  தூத்துக்குடி டையோசிஸ்ஸனாலும் சரி, உருபடவே உருப்படாது" "  தேவபிரசன்னம் இருக்காது". " (இந்து) அரசியல்வாதியான திரு.வைகுந்தராஜ் அவர்களுக்கு சி.எஸ்.ஐ சபையில் என்ன வேலை? -என்று சொல்லுகிறார் - மருத்துவரும், பத்திரிக்கையாளருமான சேலத்தைச் சேர்ந்த பூராசா என்ற புஷ்பராஜ் அவர்கள். மேற்கண்ட செய்தியை படித்தவுடன் மிகவும் வேதனை அடைந்தேன். ஆவிக்குரிய சபையினராகிய நாம் இவைகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் சபை துவேஷத்தினால் இப்படி எழுதுகிறார்கள் என்று பழிச்சொல்லில் படாய்படுத்தியிருப்பார்கள். ஆனால்... இந்த குற்றச்சாட்டை எழுப்புகிற இந்த மருத்துவர் சி.எஸ்.ஐ சபைகளுக்கு அடுத்தவரல்ல. இவரும் அதே சி.எஸ்.ஐ சபையைச்சேர்ந்த தீவிர பக்தர். மட்டுமல்ல.. நல்ல ஆன்மீகஅரசியல்வாதி. இவர் தான் சார்ந்துள்ள சபையையும் அத்துடன் இணைந்த நிறுவனங்களையும் தொண்டு அமைப்புகளையும்ம் அழிந்து போகாமல் காப்ப...

சபை என்ற தேவ வடிவமைப்புக்கு எதிராக போர் தொடுப்பவர் யார்?

அனுபவமும் வயதில் மூத்தவருமான ஒரு பெந்தகோஸ்தே பாஸ்டரிடம் சில நாட்களுக்குமுன் பேசிக் கொண்டிருந்தேன். எங்களுடைய பேச்சின் நடுவே சபைகளுக்கு எதிராக நடக்கிற சில விரும்பத்தகாத விமர்சனங்களைப் பற்றி அந்த அனுவம் வாய்ந்த பாஸ்டரிடம் பேச வேண்டியதாயிற்று. அப்போது... நான் : இது கடைசி காலம் என்றும் கர்த்தருடைய வருகை அதி சீக்கிரத்தில் இருக்குமென்றும் அறிந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் கிறிஸ்தவ சபைகளுக்கு எதிரான தாக்குதலை பல வழிகளில் சாத்தானானவன் தொடுத்திருக்கிறான். பாஸ்டர் : இது சபையின் தொடக்க நாட்களிலிருந்தே பிசாசானவன் தனது அடியார்களைக் கொண்டு நிறைவேற்றுகிற செயல். இப்போது இருக்கிற விசுவாசிகளுடைய பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டார்கள். பல இடங்களுக்கு பல நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கலாச்சாரங்களைப் பார்க்கிறார்கள். நமது சபையும் மேலை நாட்டு முறைமைகளின்படி மாறவேண்டுமென ஆசைப்படுகிறார்கள். ஒருசிலர் சற்று வித்தியாசமாக நமது முந்தைய முறைமைகளின்படியே தொடரவேண்டுமென்கிறார்கள். எல்லாருடைய ஆசைகளின்படியேயும், விருப்பத்தின்படி யேயும் சபையை நடத்த முடியாதல்லவா...