Posts

Showing posts from June, 2022

விசுவாச மக்கள் ஜெபிக்கத்தக்க ஜெபக்குறிப்புகள்.

1, தமிழக அரசின் கிறிஸ்தவ நலவாரியத்தின் உறுப்பினராக பெந்தெகொஸ்தே சபைகளின் மாமன்ற (Synod) அமைப்பை சேர்ந்த தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதற்காகவும், பெந்தெகொஸ்தே திருச்சபைகளுக்கு கிடைத்த அரசு அங்கீகாரத்திற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.  2, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு,  அதன் உடனடி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ₹5,426 கோடி கடன் உதவி வழங்க இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.  3, சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 2 மாதங்களாக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல்  விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஷாங்காயில் வசிக்கும் சுமார் 2 கோடி 50 லட்சம் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.  4, இந்தியாவில் நதிநீர் இணைப்பு திட்டங்களை இந்திய அரசு விரைவில் செயல்படுத்தும் படி ஜெபிப்போம்.  5, தமிழகத்தில் அதிகமாக 79,154 கோயில்களும்,  மகாராஷ்டிராவில் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் ...