ஜல்லிக்கட்டு போராட்டம்...!
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு, இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள். ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என்று தெரியாதவர்களும், ஜல்லிக்கட்டை ஓரு முறை கூட நேரில் பார்க்காதவர்களும், ஜல்லிக்கட்டின் மேல் ஆவல் இல்லாதவர்களும் கூட ஒரு விதமான உணர்ச்சி வசப்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு வகிக்கிறார்கள். ஏன் இந்த காரியம் நடக்கிறது? உங்களையும் என்னையும் தேவன் இந்த தேசத்திற்கு காவல்காரராக வைத்திருப்பதினாலும், ஆவிக்குரியவன் சகலத்தையும் நிதாணித்து அறியக்கூடியவன் ஆனபடியினாலும்., நாம் யோசிக்க வேண்டும். வெளி 13:1-4, வெளி 13:11-18, வெளி 17:8. இந்த வசனங்கள் மூலமாக மிருகங்களை ஜனங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதை அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது காளை மாடு, முன்னர் யானை (பிள்ளையார்) இப்படியாக, ஜனங்கள் மிருகத்தை மிருகமாக பார்க்காமல், அதை தெய்வமாக பார்க்கும்படி பிசாசானவன் ஜனங்களின் கண்களை குருடாக்கியிருக்கிறதை நாம் அறிவோம். எவ்வளவோ பிரச்சினைகள் வழக்குகள் எழும்பினாலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் ஆர்ப்பரிக்கிறார்களே எப்படி? கிற...