தீபாவளி - முன்பு விவேகானந்தருடைய அறிவிப்பை அறியுங்கள்.
தமிழன் கொல்லப்பட்ட நாளை தீபாவளி நாள் என்று தமிழர்களே கொண்டாடுவதா ? இதை படிக்கும் முன்பு இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களையே புராணங்களில் இராட்சதா்களாகவும் குரங்குகளாகவும் சித்தரித்தனா் என்ற விவேகானந்தருடைய அறிவிப்பை அறிந்து கொள்ளுங்கள் . தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு . வடநாட்டவரைப் பொறுத்தளவில் ( குஜராத்திகள் , மார்வாரிகள் ) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள் . அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள் . அப்பகுதிகளில் உள்ள வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள் . வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள் . இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள்...