யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.
யோகா - நோய்களை குணப்படுத்துமா? யோகாவின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். -------------------------------------------------------------------------------- அற்புத ஆற்றலாமே? யோக(ம்) என்னும் சொல், பொருள் தெரிந்தோ தெரியாமலோ நாட்டில் பரவலாக, பேசப்பட்டு வருகிறது. ஊடகங்களிலும் முதன்மை இடத்தைப் பிடித்து வருகிறது. யோகா- என்றால் அது ஓர் அற்புத ஆற்றல் பெற்றது என்று அதன் ஆதரவாளர்களால் பரப்புரை செய்யப்பட்டும் பறைசாற்றப்பட்டும் வருகிறது. யோகா - என்பது ஒன்றும் வைதிக, ஆத்மீக, மதச் சடங்கல்ல அது ஒரு உடற் பயிற்சி..! கல்வி நிலையங்களில் கூட அது பயிற்றுவிக்கப்பட வேண்டும்; பயிற்று விக்கப்படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது. யோகா என்ற சொல்லில் - கருத்தில் ஏதோ ஒரு மயக்கம் நம்மில் பெரும்பாலானவர்க்கு வந்திருக்கிறது. அரசியல் தலைவர்கள்; பேராசிரியா்கள், அலுவலர்கள்; கல்வியாளர்கள்; விளையாட்டு வீரர்கள்; விளம்பர மாதிரிகள் (Models) திரையுலகை சோ்ந்தோர் யோகாவெனும் இம்மாயவிலையில் சிக்கி ஈடுபாடு காட்டி இறைந்து போகின்றனர். இதில் ஒரு வேடிக்கை - வியப்பு என்னவென்றால்.., யோகா நோயைக் குணமாக்கும் மருத்துவ முறை...