பரிதாபமாக பார்க்க வேண்டியிருக்கிறது.
மதங்கள் குறிப்பாக இந்திய மதங்கள் காலத்திற்கேற்றபடி தங்கள் மத நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டே வருவதை விபரமறிந்தவா்கள் ஒத்துக் கொள்ளுகின்றனா். இவா்கள் முன்நாட்களில் தங்கள் மத நம்பிக்கையாக அறிவித்தவைகளையே பின் நாட்களில் மறுத்து விடுகிறதும், மறைக்கிறதுமான பல்வேறு சம்பவங்களை நாம் பல நேரங்களில் கண்டிருக்கிறோம். இந்த தைரியம் பெரும்பாலும் இந்து மதத்திற்கு மட்டுமே இருப்பதைக் கண்டு, ஆச்சா்யப்படும் அதேநேரம், அந்த மதத்தின் பாமர இந்துக்களைத்தான் நாம் பரிதாபமாக பார்க்க வேண்டியிருக்கிறது. வேதங்களை உடையதாக பெருமைப் பேசுகிற பிராமணிய மதம், தற்போது இந்து மதமாய் உலகிற்கு அடையாளப்படுத்திக் கொள்ளுவதற்கு முன், பல்வேறு மத நம்பிக்கைகள் என்னும் பிற நிறத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு இணைக்கப்பட்ட மதங்களுக்கு ஏற்ப தன் நிறத்தை பல்வேறு விதமாக மாற்றிக்கொண்டதை சரித்திர வாயிலாகவே நாம் அனைவரும் அறிய முடியும். முதலில் திராவிடமும் பின்னா் சமண பௌத்த வழிபாடுகளும், இதை ஒழிப்பதற்காகவே எழுந்த பக்தி இயக்கங்களான சைவம் வைணவம் போன்றவையும் மட்டுமல்ல பிராமணீய மதத்தவா்கள் சற்றுக்கூட ஏற்கவ...