Posts

Showing posts from May, 2015

தேவஜனங்கள் வேதவசனத்தைக் கேட்கனும், அதன்படி நடக்கனும் அதையே முதன்மைப்படுத்துவேன். - Pastor Immanuel Abraham.

Robin Shalal என்ற நண்பா் எனக்காக ஒரு கடிதம் எழுதி பதிவிட்ட பதிவின் மூலம் அவா் தனது அறியாமையை இங்கே வெளிப்படுத்தி இருக்கிறாரேயன்றி வேறொன்றும் அதில் தெரியவில்லை . என்றாலும் , எனக்கு கடிதம் எழுதிய அவருக்கு பொறுமையாக பதிலளிக்க வேண்டியது எனது கடமை . ஆதலால் , இதை பதிவு செய்கிறேன் .   நண்பா் கேட்ட கேள்விகளும் , அதற்கான எமது பதில்களும் ,   // 1. உங்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியம் என்ன ? ஐயா .//   கா்த்தரால் மீட்டுக் கொள்ளப்பட்டவா்கள் அடங்கிய சபைக்கு என்னை கா்த்தர் ஊழியக்காரனாக ஏற்படுத்தி இருப்பதினாலே   கா்த்தருடைய சபையை அசுத்தமானவா்களிடமிருந்தும் கள்ளா்களிடமிருந்தும் தப்புவிக்கும் ஊழியத்தை நேரிலும் இணையத்திலும் தேவபெலத்தோடு செய்து வருகிறேன் .   // 2. கடந்த 20 ஆண்டு காலமாக ஊழியம் செய்து உள்ளீர் . ஆத்துமா ஆதாயம் எவ்வளவு ஐயா .//   தனி ஒரு நபா் யாருடைய துணையுமின்றி கா்த்தருக்காக ஆத்தும ஆதாயம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .   உதாரணமாக மோகன் சி லாசரஸ் ...