Posts

Showing posts from March, 2015

கா்த்தர் நிமித்தம் வெற்றி எனக்கு எட்டும் தூரத்தில்..!

கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதர , சகோதரிகளை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். இங்கு சில உண்மைகளை எழுத வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளபோதும் அதற்குமுன்  சில நிகழ்வுகளை நான் எழுத வேண்டியது அவசியம் என்பதால், எழுதுகிறேன். நடுநிலையாளா்கள் இதை பொருமையுடன் படிக்கும்படி கிறிஸ்துவினிமித்தம் தாழ்மையுடன் கேட்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லுங்கள்  நான் ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டர். இணையத்தில் நான் பிரவேசித்த ஆரம்ப நாட்களில், எல்லாம் சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது அப்போது பொன்னுதுரை ஜோசப் என்பவா்  ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதில், C.S.I சபையின் குருவானவா்  தாமிரபரணி ஆற்றில் ஒரு பெண்ணுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது போன்று இருந்தது. அதைக்கண்ட நான் பரவாயில்லையே..! சிஎஸ்ஐ சபையினரும் ஆவிக்குரிய சபைகளைப்போன்று முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்களே ? !! என்று Comment செய்தேன். அதில் ஆத்திரப்பட்ட பொன்னுதுரை ஜோசப் அவா்கள் ஆவிக்குரிய சபைகளைக் குறித்து எனக்குத் தெரியாதா? என்று ஆரம்பித்து ஆத்திரத்தில் மிக ஆபாசமாக கோபமாக எழுதி தள்ளினார். நான் கேட்...