உண்மையான காவலர்கள் நமது நண்பர்கள்
விழிப்பாயிருங்கள்..! ஜாக்கிரதையாருங்கள்..! எச்சரிக்கையாயிருங்கள்...! ---------------------------- கிறிஸ்தவர்கள், அல்லது தேவஊழியர்கள் என்ற அடையாளத்துடன் இணையதளத்தில் ஊடுருவி இருக்கிற சிலக்கள்ளர்கள், கிறிஸ்தவ சபை அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து ஆட்டம் போடுகின்றனர். அப்படியே ஆட்டய (Cheating) போடுகின்றனா். சபைக்கு எதிரானவர்களையும் அதிருப்தியாளர்களையும் தங்களுக்கு ஜால்றாக்களாக மாற்றிக் கொண்டு அவர்கள் மூலம் தங்களுக்கு ஒரு பரிசுத்த தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, தங்கள் குழுவில் உள்ளவர்கள் மூலமாகவே கிறிஸ்தவ சபைகளை வேவு பார்த்து வருகின்றனர். இப்படியான தங்கள் உளவு வேலை மூலம் பாஸ்டர்கள், மற்றும் வசதி படைத்த விசுவாசிகளின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்துகொண்டு, சிலருக்கு சில பலவீனங்களை ஏற்படுத்தின பின்பு தங்களுடன் உள்ள சில ரவுடிகளை போலீஸ் வேடத்தில் அனுப்பி பணம் பறித்து வருவதாக அறிகிறோம். தமிழகம் முழுவதும் முகநூல் நண்பா்களை உருவாக்கிக்கொண்ட இந்தக்குழு பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுமுன் யாருக்கும் சந்தேகம் வராதபடி தங்கள் குழுவில் உள்ளவர்களை ஓரிடத்தில் திரட்டுகிறார்கள். அந்தக் ...