“தாலத்தில் வைக்கப்படும் என் தலை”
என் நண்பா்களே இன்றிருக்கும் அநேகரில் குறிப்பாக ஊழியர்களுக்கு மத்தியில் நான் எதில் வித்தியாசப்படுகிறேன்? என்பதை இரண்டே வரிகளில் சொல்லிவிட விரும்புகிறேன். அதாவது.., இன்றைய ஊழியா்கள். கிறிஸ்துவுக்காக, “சாவதற்கும் ஆயத்தமாயிராமல் சீரோடும் சிறப்போடும் எப்படியாகிலும் இவ்வுலகில் செல்வசெழிப்போடு வாழ்ந்துவிட அவசவசரமாக வாழ்கிறார்கள் என்பதைவிட அலைகிறார்கள்” நானோ, “தேவனோடு நித்தியமாக வாழ வேண்டுமென்பதற்காகவே சாவதற்கும் ஆயத்தமாக சத்தியத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறேன்”. மேலும், ஆவியானவா் எனக்குள் இருப்பதால்.., பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்த தூண்டப்படுகிறேன். எனவே சிலருடைய தவறுகளை தைரியமாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி வருகிறேன். நம்முடைய செயல்பாடுகள் சிலருக்கும் இந்த சிலருடைய அடிவருடிகள் பலருக்கும் சங்கடமாக இருந்ததையும் அதனால் பலா் பல விதங்களில் என்னுடன் மோதியதையும் பின்னா் என்னை தடை (Block) செய்துவிட்டு ஓடினதையும்தான் என் அனுபவத்தில் பலதடவை பார்த்திருக்கிறேன். சிலா் வேறுவிதமாக செயல்பட...