"அதுதான் முசுலீம்மதம்"
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்றும் அவரது வாழ்க்கை முறை அவரது சட்ட திட்டங்களின்படி பரிசுத்தமாகவே இருந்தது. அவரிடத்தில் பாவம் உண்டு என்று யாரும் சொல்ல முடியாத வகைகளில் வாழ்ந்து காட்டினார். அதுமட்டுமல்ல..., சுமார் 2800 ஆண்டுகளாக யூதர்களுக்கு யெகோவா என்ற பெயரில் இவர் அறிவித்திருந்த முன்னறிவிப்புகளின்படி எல்லாருடைய பாவங்களையும் மன்னிக்கும் பொருளாக தம்மைத்தாமே பாடுகளுக்கு உட்பட அனுமதித்தவர் அதை முழுமையாக அனுபவித்தார். அவர் யாரையும் பயமுறுத்தாமல் மரணத்தை சந்தித்தார். அதன்பின்..., முன்னர் அவர் மிகவும் திட்டமாய் சொல்லியிருந்தபடியே மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இதைக் கண்டவர்கள் பிரமித்தார்கள். இதைக் காணாத மற்றவர்கள் இதை ஏற்காமல் ஏற்றவர்களை பயமுறுத்தினார்கள். பார்த்தவர்கள் பார்த்தது உண்மையாயிருந்தபடியினாலே அதை மறுக்கவில்லை.., மறக்கவில்லை. ஆம் என்று ஆணித்தரமாக சொன்னார்கள். அதுவே அது அவர்களுக்கு ஆபத்தானது. கொடுமைகள் பல செய்தபோதும் அதை அவர்களால் மறுக்க முடியவில்லை. உண்மையை உரைக்காமல் அவர்களால் இருக்கவும் முடியவில்லை. இந்த உண்மையாய் நடந்த நிகழ்வுக்காக உயிர் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தனர்....