Posts

Showing posts from May, 2012

"தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்"

Image
"எழுப்புதலின் நற்செய்திக் கூட்டங்கள் 2012" தேவனுடைய கிருபையால் கடந்த 19, 20 தேதிகளில் நம்முடைய "கள்ளிகுளம் எழுப்புதல் திருச்சபை" (K.R.M Church) -ல் வைத்து மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றது. பாஸ்டர் ப்ளஸ்சன் சாம் (கேரளா) அவர்களையும், மொழிபெயர்ப்பாளராக வந்திருந்த பாஸ்டர் ஈஸ்வரன் (பாலக்காடு) அவர்களையும், கர்த்தர் வல்லமையாக பயண்படுத்தினார். ஒவ்வொருநாள் செய்தியும், ஜனங்களுடைய விசுவாச வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் பயணுள்ளதாக இருந்தது. புறஜாதிகளுக்கான நற்செய்தியும், இவருடைய செய்தியின் வாயிலாக வெளிப்பட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். Pastor Blesson Sam   Pastor Blesson Sam and Pastor Easwaran Sis Mercy Blesson Sam இக்கூட்டங்களுக்காக ஜெபித்த, ஒத்துழைத்த, பங்குபெற்ற, கொடுத்த அனைவருக்காகவும் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தர்தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.                           ...

KRM Church, VBS 2012

Image
நமது சபையில் வருடம்தோறும் நடைபெறும் "விடுமுறை வேதாகமபள்ளி" ( VBS )  இந்த ஆண்டும் தேவதயவுடன் மிக சிறப்பாக துவக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சமூகரெங்கபுரம் அருகிலுள்ள இலங்கை தமிழ் உறவுகளுடைய முகாமிற்கே சென்ற நமது குழுவினர் அங்குள்ள குழந்தைகளை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார்கள். மிக ஆசீர்வாதமாக இருந்தது. இந்த வருடம் விடுமுறை வேதாகமபள்ளியில் கிறிஸ்தவரல்லாத கத்தோலிக்க இந்து பிள்ளைகள் பெரும்பாலானவர்களாக கலந்து கொண்டனர். எப்படியாயினும் சிறுவர் பாலகர் வாயினால் நம்முடைய ஆண்டவர் துதியை வரப்பண்ணினார். இந்த ஊழியத்திற்காக பிரயாசப்பட்ட, ஜெபித்த, உழைத்த அனைவருக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன். இந்த குழந்தைகள் மற்றும் நமது சபையைச்சார்ந்த சிறுவர் ஊழியக் குழுவினர்களுக்காக நண்பர்கள் ஜெபித்துக் கொள்ளுங்கள்.