Posts

Showing posts from June, 2014

இது நமக்குப் படிப்பினை

அநேக ஜனங்கள் மற்றவா்களுடைய பார்வையில் சிறந்தவா்களாக காணப்பட வேண்டுமென்று அதிகமாக பிரயாசப்படுகிறார்கள். எதை செய்தாலும் மற்றொரு மனிதனை மனதில் வைத்தே செயல்படுகிறதைக் காண்கிறோம். இதை தேவன் விரும்புவதில்லை என்பதை முதலாவது புாிந்து கொள்ள வேண்டும். லூக் 16 :15. ல் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. என்று படிக்கிறோம். இது நமக்குப் படிப்பினையாக இருக்க வேண்டும். நாம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்க வேண்டுமாம். அதுதான் அவருக்குப் பிரியமானது என்று அறிந்து செயல்படுங்கள் கா்த்தர் உங்களை ஆசீா்வதிப்பார். இதைத்தான் ஏசா 43 : 4, 5 ல் நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய். நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும்கொடுப்பேன். பயப்படாதே,  நான் உன்னோடே இருக்கிறேன். என்கிறார். சகோதரனே சகோதரியே கா்த்தருக்குப் பிாியமாக நடந்து ஆசீா்வாதத்தைப் பெறுங்கள். ஆமென்.